Sunday, September 8, 2019

அந்த நிலாவைக் கையில் பிடிக்க எல்லோருக்கும் தான் ஆசை!

விண்வெளியில் பலலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து, சந்திராயன் 2 பயணத்தின் க்ளைமேக்சாக விக்ரம்  லேண்டர் கலம், நிலவில் தரையிறங்க வெறும் இரண்டே கிலோமீட்டர் தூரம் இருக்கையில், தொடர்பு விடு பட்டுப் போனது நேற்றைய காலைப்பொழுதின் சோகம் என்றாலும் முதல் முறையிலேயே நிலாவைத் தொடும் முயற்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக வந்தது இந்தியா மட்டும்தான்! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா கூட வரிசையாக மூன்று கார்டூன்களை வரைந்து தள்ளிவிட்டார்.



மற்ற நாடுகளில் எப்படியோ, சந்த மாமா என்று உறவு கொண்டாடி பிள்ளைகளுக்குச் சோறூட்டுகிற தேசம் இது! தாயின் கையில் ஏறிக் கொண்டே பிள்ளை நிலவைத் தொட்டு விட முனைகிற மாதிரி! தூரிகை கூட இலக்கியம் பேசுமோ!! 


இந்தியர்கள் அனைவருமே உங்களோடு என்று ISRO தலைவர் சிவன் மற்றும் நமது விஞ்ஞானிகளைத் தேற்றிய, ஊக்கமளித்த நமது பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவனாக வெளிப்பட்ட தருணமும் அதுவே!       



ISRO வின்  அடுத்த முயற்சிக்காக அந்த நிலவே காத்துக் கொண்டு இருப்பதாக! என்னவொரு நல்லெண்ணத்துடன் கூடிய அற்புதமான கற்பனை! 

நல்லது என்று இருந்தால் கொஞ்சம் நாராசங்களும் இருக்கத் தானே செய்யும்?



பாய்மாருங்க மட்டும்தானா? திமுகவின்  200ரூ உபி யாரும் பொரிஞ்சு தள்ளலையா?  #மோடிமீதுபயம் #மோடிமீதுவெறுப்பு 
  
சந்திரயான் 2 ..முழுமையான வெற்றியடையக் கூடும் என்கிற நம்பிக்கையோடு நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பிரஸ் மீட் ..ரத்து செய்யப்படுவதாக அறிவித்த இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரிடம்...
NDTV-யை சேர்ந்த Pallava Bagla என்பவர் ..உரத்தக்குரலில் ...குற்றம் சாட்டும் தொனியில்..
''எங்கே உங்கள் தலைவர் டாக்டர் .சிவன் ? இது போன்ற சந்தர்ப்பங்களில்..ISRO தலைவர் தானே நேரில் வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் ? ஜூனியர் ஒருவரை ஏன் அனுப்பி இருக்கிறார் ?'' என்றெல்லாம் கேட்கிறார்!!
இதை கண்ட பொதுமக்கள் ...சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பொங்கிவிட்டார்கள்.
இதை அடுத்து..மன்னிப்பு கேட்டிருக்கிறார் Pallava bagla. வழக்கம் போல..ராஜ்தீப் சர்தேசாய், பிரணாய் ராய் ஆகியோர்....''NDTV-யை சேர்ந்த Pallava..அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை சிறப்பான முறையில் செய்தியாக்கி தருவது, அறிவியல் கட்டுரைகள், புத்தகங்கள் என்று மிகப் பிரபலமான அறிவியல் ஊடகவியலாளர். உலக அளவில் பல விருதுகளை வாங்கி இருப்பவர்'' என்றெல்லாம் அவருக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள்.
அறிவியல் & சோதனைகள் குறித்து அறிந்த அவ்வளவு பெரிய வல்லுநர் எனில்..பிரஸ் மீட்டில் இவ்வாறு அபத்தமாகவும், வரம்பு மீறியும் கேள்வி கேட்டிருக்கமாட்டார். நடந்து கொண்டிருக்கவும் மாட்டார்.
வரைமுறையற்ற மோடி வெறுப்பு என்னும் அரசியல் நோய் ...அறிவியல் அறிவையும் மழுங்கடிக்கிறது என்பதே உண்மை!


NDTVயின் பல்லவ பாக்லா நாய் குரைக்கிற மாதிரி அதட்டிக் கேள்வி கேட்பதை  இந்த வீடியோவில் 2 நி. 46 நொடியில் இருந்து கேட்கலாம்!


பாவம் புதிய தலைமுறை!  தமிழக சேனல்கள் யோக்கியதைக்கு, NDTV மாதிரிக் காங்கிரசின் காசில் கொழுத்து வளர்ந்த சேனல் நிருபர் மாதிரியெல்லாம் அதட்டிக் கேட்க முடியாது! 


பம்மிப் பம்மி, பொன்ராஜ் மாதிரியானவரிடம் தான் கேள்வி கேட்க முடியும் போல!

மீண்டும் சந்திப்போம்.   

8 comments:

  1. அவர்கள் நன்றாகச் சிரிக்கட்டும் அழும் நாள் விரைவில் வரும்.
    ராஜ்தீப்,பிரணாய் போன்றவர்களின்
    சொத்துக் கணக்கெல்லாம் கேட்கும் நாள் வரும். அப்போது நிலவுக்குப் போய்விடலாம என்று யோசிப்பர்கள்.

    குப்பை.
    நாம் இஸ்ரோவைக் கொண்டாடுவோம் ,மதிப்போம்,
    அன்பு மிகுந்த தலைவர வள்முடன் வாழப் பிரார்த்திப்போம். வெற்றி பெறுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!
      பதிவை எழுதும்போது என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டுதான் எழுதினேன் ஆனால் இன்றைக்கு ஊடகங்கள் அனேகமாக காங்கிரசுக்கும் அங்கங்கே மாநிலங்களில் காஸைக் கண்ணில் காட்டும் கட்சிகளுக்கும் விலைபோய் பத்துப் பதினைந்துவருஷங்களுக்கும் மேலாகிவிட்டது. எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய நாலாவது தூண் புத்தக விமரிசனமாக பத்து வருஷங்களுக்கு முன்பே இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதினேன்.

      கேடதனை நீக்கிடுவாய் தேசமுத்துமாரி என்று பாரதியின் பாட்டுதான் மனதில் இப்போது எதிரொலிக்கிறது

      Delete
  2. இங்கே மூர்க்கன்(!)களுக்கெல்லாம் கொண்டாட்டமாக இருந்தது...

    உலகம் தட்டை..ண்டு கத்திக்கிட்டுக் கிடந்தாங்கே...
    துனியாவுல ஆக டாப் நடிகன் மோடி..ன்னாங்கே!..

    கேடதனை நீக்கிடுவாய் தேச முத்துமாரி!...

    இந்தக் கேடுகளை முத்துமாரிதான் நீக்கியருள வேண்டும்...
    மகாகவியின் வேண்டுதல் மெய்யப்படவேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மூர்க்கன்களுக்கு மட்டும்தானா துரை செல்வராஜூ சார்?

      சந்திராயன் 2 அறிவிக்கப்பட்டநாளிலிருந்தே லண்டன் பிபிசி ஒருமாதிரி ஒப்பாரிவைத்துக் கொண்டே இருந்தது. இப்போது மறுபடியும் பழைய பிலாக்கணத்தையே பாட ஆரம்பித்திருக்கிறது. அதை அடியொற்றி இங்கே பல கழகக்கண்மணிகளும் பேசிக்கொண்டிருந்தார்கள். கோயங்காவிடமிருந்து கைமாறிப்போன பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் தன்மையும் மாறிப்போய்விட்டது. சந்திராயன் 3 தேவையில்லை என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

      தேசமுத்துமாரியிடம் பாரதி கேடதனை நீக்கிடுவாய் என்று மட்டும் வேண்டவில்லை! அடுத்த பதமாக கேட்டவரம் தருவாய் என்றும் வேண்டுகிறான். #பாரதசக்தி விழித்தெழ வேண்டும்!

      Delete
  3. ndtv கொஞ்ச நேரம் பார்த்தேன். சாட்டலைட் தொடர்பு கிடைக்க நேரம் அதிகமாகும்போதே 'விஞ்சானிகளின் முகங்கள் இருண்டு கிடக்கிறது' 'Grim Faces ' என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தவுடன் அருவருப்புடன் மாற்றிவிட்டேன். எதிர்ப்பது என்று முடிவெடுத்தவுடன் மோடியை எதிர்ப்பது என்பது தாண்டி அரசு எது செய்தாலும் எதிர்ப்பது, விஷத்தை கக்குவது என்று இறங்கிவிட்டார்கள்!

    மோடி மிகச் சிறந்த தலைமையை வெளிப்படுத்தினார்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!
      இங்கே இந்திய அரசியல் எப்படிக் குறுகிய புத்திக்காரர்களால், தனிநபர் மீதான வெறுப்பைக் கக்குவது மட்டுமே என்றாகிக் கிடக்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம். நரேந்திர மோடியை ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், தங்களுடைய சொந்தக் கோளாறுகளால்தான் அவர் ஜெயிக்கிறார் என்பதுகூடப் புரியாமல் விஷம் கக்குகிறார்கள். பொதுஜனங்களிடமிருந்து காங்கிரஸ் முதலான பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு விலகிப்போயிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு இன்னமும் உறைக்கவில்லை! அவர்களை ஆதரிக்கிற ஊடகங்களும் அதே தவறைத்தான் திரும்பத் திரும்ப செய்துகொண்டிருக்கிறார்கள்.

      Delete
    2. bbsiஎப்பவுமே சோக இந்தியாவைத்தான் காட்டும். அந்த ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடவில்லை.
      அவர்கள் அன்னியர்கள் .நம் நாட்டுக்காரர்களுக்கு புத்தி வேண்டாமா.
      பாரதி வாழ்த்தி சொல்வது போல்
      தேச முத்துமாரி நம்மைக் காப்பாள்.

      Delete
    3. வாருங்கள் அம்மா!

      BBC செய்திகளைப் பற்றி எனக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை. அங்கே லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பிபிசி தமிழில் இலங்கைத் தமிழர்கள் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம் என்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரம் எதனால் இவர்கள் இப்படி நெகடிவாக யோசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளப் பார்ப்பதுண்டு,

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)