Howdy Modi நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியை எந்த அளவுக்கு வெறுப்பேற்றியிருக்கிறது, கீழ்த்தரமான வேலைகளில் இறங்கும்படி செய்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது
இப்படி ஒரு கட்சி இன்னமும் இந்திய அரசியலுக்குத் தேவைதானா என்ற கேள்விக்கு நண்பர் திருப்பூர் ஜோதிஜி தான் வந்து பதில் சொல்ல வேண்டும்!
இப்படி ஒரு கட்சி இன்னமும் இந்திய அரசியலுக்குத் தேவைதானா என்ற கேள்விக்கு நண்பர் திருப்பூர் ஜோதிஜி தான் வந்து பதில் சொல்ல வேண்டும்!
ஏனென்றால் கொஞ்ச காலத்துக்கு முன்னால் சாம் பிட்ரோடா பற்றி சிலாகித்துப் பதிவுகூட எழுதியிருந்தவர் அவர் ஒருவர்தான்! மற்றவர்களுக்கு வழக்கம் போல அந்தப்பெயரே இந்நேரம் மறந்திருக்கும்! ராஜீவ் காண்டியின் நண்பர் சாம் பிட்ரோடா இந்த அசிங்கத்தில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்கிறார்கள்! வீடியோ 7 நிமிடம்தான்! பாருங்கள்!
ஐநா பொதுசபையில் இம்ரான் கானுடைய உளறல்களுக்கு முட்டுக் கொடுக்க சீனா, மலேசியா, துருக்கி இந்த மூன்று நாடுகளைத் தவிர வேறு நாதியில்லை என்பதை நண்பர்கள் செய்திகளில் கவனித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த மூன்று நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. மேலே ஒரு 19 நிமிட வீடியோவில் என்னவென்று கொஞ்சம் விவாதிக்கிறார்கள். வெளியுறவு விவகாரங்கள் கொஞ்சம் சிக்கலானவைதான், ஆனாலும் புரிந்து கொள்ள முடியாதவை அல்ல என்பதைச் சொல்லவே அக்கம் பக்கம்! என்ன சேதி! என்றொரு வலைப்பக்கத்திலும் எழுதிவருவதுகூட நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்!
NewsX சேனலின் ரிஷப் குலாடி இந்த 6 நிமிட வீடியோவில் துருக்கி அதிபரின் இஸ்லாமிய கலீஃபா கனவுபற்றியும், அவர்களுடைய இரட்டை நிலைபாடுகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்வதை கவனத்தில் வைத்துக் கொள்ளலாமே!
இம்ரான் கானும் பாகிஸ்தானிய ராணுவ எஜமானர்களும் காஷ்மீர் காஷ்மீர் என்று கூவிக் கொண்டே இருப்பதில் நாடு என்ன நிலையில் இருக்கிறது என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லவே இல்லை என்பது வரலாற்று சோகம்!
எல்லாப்பிரச்சினைகளுக்கும் மோடி ஒயிக என்று கூவுவது மட்டும் தான் தீர்வு என்பதில் பாகிஸ்தானிகளுடன், நம்மூர் காங்கிகள். திராவிடங்கள் ஒன்று பட்டு நிற்பதைப் போல கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவும் தூரிகையில் கூவ ஆரம்பித்து இருக்கிறார்!
மீண்டும் சந்திப்போம்.
இதில் உள்ள ஒவ்வொரு செய்திகளும் எந்த இடத்திலும் நான் படிக்காத விசயங்கள்.உங்கள் பார்வை சிந்தனை என்பதே தனித்துவமாக உள்ளது. நன்றி.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteசெய்திகள் எல்லாமே பொதுவெளியில் இருப்பதுதான்! தெரிந்துகொள்ள நமக்கு விருப்பமும் முயற்சியும் இருக்கிறதா என்பது தான் விஷயம்! சாம் பிட்ரோடா தன்னுடைய முன்னாள் நண்பன் ராஜீவுக்காக விலைபோகாத அவருடைய மகனை எப்படியாவது இந்திய ஜனங்கள் தலையில் கட்டிவிட மார்கெட்டிங் செய்து கொண்டிருக்கிறார், எதிர்த்தரப்பை குறித்து அவதூறு, எதிர்ப்பு என்று என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறார் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லவே இல்லையே!