வலைப்பதிவுகளிலும், அப்புறம் கூகிள் குழுமங்களிலும், ப்ளஸ்ஸிலும் எழுதிக் கொண்டிருந்ததில் நான் அதிகமாகப் பேசிய விஷயங்களில் ஒன்று முழுமையான தேர்தல் சீர்திருத்தங்களுக்காக, மற்றொன்று புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவிக்கரங்களை எதிர்பார்க்கிறது இவை மட்டும்தான்! என்னை தொடர்ந்து கவனித்து வருகிற நண்பர்களுக்கு இந்த இரண்டுமே நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்! இங்கே ஒரு சேனல் நேர்காணலில் ஒரு உருப்படியான விஷயம் பேசப்பட்டு இருந்ததை இன்றுதான் கவனித்தேன். ஒரு பரபரப்புக்காக நான்கு எம்பிக்களை இழக்கிறதா என்று தலைப்பு வைக்கப் பட்டிருந்தாலும், நல்லவிஷயங்கள் அவ்வளவு சீக்கிரமாக இந்த தேசத்தில் நடந்துவிடுவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த 15 நிமிட நேர்காணலைப் பாருங்கள்!
இங்கே வழக்கறிஞர் தமிழ்மணி கொஞ்சம் சுவாரசியமாக விஷயத்தை விளக்குகிறார். கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற வழக்குச்சொல்லை வைத்துக் கொன்டு கள்ளன் தான் பெருசு என்றிருக்கிற நடைமுறையை சொல்கிறார். இன்னொரு இடத்தில் ஷேக்ஸ்பியருடைய The Merchant of Venice நாடகத்தின் கதாநாயகி போர்ஷியா, ஒரு ஆண் வழக்கறிஞராக வேடமிட்டு, வில்லன் ஷைலக்கிடம் எழுத்துமுறிப்படி உண்டான ஒரு பவுண்ட் நெஞ்சுக் கறியை அறுத்து எடுத்துக்கொள் ஆனால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது அது எழுதிக் கொடுத்ததில் இல்லை என்று திறமையாக மடக்குகிற இடத்தை நினைவுபடுத்தி a pound of flesh, not a drop o blood என்று சொன்னதில் நிஜமாகவே சொக்கிப்போனேன்! ஒரு முழுமையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அவசியத்தை என்னதான் பத்திபத்தியாக எழுதினாலும், இந்த மாதிரி ஒரு வழக்கு, இந்தமாதிரியான தெளிவான விளக்கம் கிடைக்கிற போது அதுவாக கவனத்துக்கு வருவதுபோல ஆகாது, இல்லையா!
தந்திடிவி கூட இன்றைக்கு இதைப்பற்றிய ஒரு கருத்தை கேட்டு வெளியிட்டிருக்கிறது. நம்மூர் நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் எவ்வளவு சவ்வாக இழுத்து நடக்கும் என்பது தெரிந்ததுதான்! அப்பீல் வேறு இருக்கிறதே! ஆனாலும் இந்த வழக்கைக் கொஞ்சம் மேலோட்டமாகக் கவனித்தாலே, தற்போதைய தேர்தல் நடைமுறைகளில் என்னென்ன கோளாறுகள் இருக்கின்றன, கள்ளன் பெருசு என்றிருப்பதில் பாடம் கற்றுக்கொண்டு என்னென்ன மாற்றங்கள் செய்தால் காப்பான் பெருசு என்ற நிலை வரும் என்பதை ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடியுமே!
புதிய தலைமுறையில் பிஜேபி சார்பில் வானதி ஸ்ரீனிவாசனும் விசிக சார்பில் எம்பி ரவிக்குமாரும் அமித் ஷா பேச்சை அதிபர் முறைக்கு மாற்றப்போவதன் முன்னோட்டமா என்ற கேள்வியை வைத்து ஒரு விவாதம் இப்போதுதான் முடிந்தது. அதே அரைத்தமாவுதான்! இன்று இங்கே எழுதியதை எடுத்துப் போடுவதில் தவறொன்றும் இல்லை!
புதிய தலைமுறையில் பிஜேபி சார்பில் வானதி ஸ்ரீனிவாசனும் விசிக சார்பில் எம்பி ரவிக்குமாரும் அமித் ஷா பேச்சை அதிபர் முறைக்கு மாற்றப்போவதன் முன்னோட்டமா என்ற கேள்வியை வைத்து ஒரு விவாதம் இப்போதுதான் முடிந்தது. அதே அரைத்தமாவுதான்! இன்று இங்கே எழுதியதை எடுத்துப் போடுவதில் தவறொன்றும் இல்லை!
இங்கே பிஜேபி அதிபர் ஆட்சிமுறையை மறைமுகமாக வலியுறுத்துவதாகத் தான் பலகட்சி ஆட்சிமுறை தோற்று விட்டதாக அமித் ஷா பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விசிகவின் வன்னியரசு மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவதை விடுங்கள்! Bihar Movement என்று இந்தச் சுட்டியிலும் இதே வார்த்தையைக் கொண்டு இணையத்திலும் தேடிப் பாருங்கள்! 1971 நாடாளுமன்றத்தத் தேர்தல்களில் இந்திரா காண்டி அமோக(?) வெற்றியடைந்த பிறகு, அவ்ரதுபோக்கில் நிறைய மாறுதல்கள், எல்லா அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் என்கிற அமெரிக்க அதிபர் முறை மாதிரி ஒரு தேர்தல் முறைக்குத் தயாராகிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்த காலத்தில் பிஹார் இயக்கம் என்று ஊழலுக்கெதிரான மாணவர் போராட்டம் வலுவான தருணத்தில், ஜெயப்ரகாஷ் நாராயணனைத் தமைமைதாங்க அழைத்த தருணம்! தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், பிஹார் இயக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து 47 நாட்கள் தினமணி நாளிதழில், ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காண்டியின் போக்குக்கு எதிராக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதும் இதர விவரங்களுமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது, பின்பு தினமணி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கூகிள் தேடலில் பிஹார் இயக்கம் என்று தேடினால் பிபிசி தளத்தில் வெளியான இந்த ஒரு செய்தி தான் கிடைக்கிறது! பிஹார் இயக்கம் தினமணி வெளியீடாக வந்த புத்தகம் தற்சமயம் நானறிந்தவரை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது.
விசிக மாதிரியான உதிரிக் கட்சிகளுக்கு வரலாறும் தெரியாது, போகும் திசை பற்றிய தெளிவும் கிடையாது. ஆனால் இன்னும் எத்தனைநாட்களுக்கு இவர்களைப் போன்ற உதிரிகள் நாட்டாமை செய்வதை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம், சொல்லுங்கள்! இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எத்தனை. அவை எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன, எவ்வளவு வாக்கு (சதவீதத்தில்) வாங்கியிருக்கின்றன என்பதெல்லாமே பொதுவெளியில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இருப்பதுதான்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment