Sunday, September 15, 2019

புத்தகங்கள்! படிக்க விரும்புகிறவை!

புத்தக வாசிப்பு என்பது என்னைப்  பொறுத்தவரை,  கட்டுப் பெட்டியாக ஒரு கூட்டுக்குள் இருந்து விடாமல் சிறகு விரித்துப் பறக்கிற மாதிரியானதொரு அனுபவம்! ஒரு குறிப்பிட்ட எல்லை,  ரசனை என்பதைத் தாண்டி ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய் சிறகுகளுக்குக் கீழே தெரிகிற நிலப்பரப்பும் கண்முன்னே விரிந்து பறந்து கிடக்கிற வான்வெளியுமாக, வாசிப்பு என்பது நம்மையும் விரிவடையச் செய்கிற ஒரு அற்புதமான அனுபவம்.



இன்றைக்கு இணையத்தில் புதிய விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், இந்தப் புத்தகத்தைப் பற்றிய வீடியோக்கள் சில கிடைத்தன. கூடவே Google Books தளத்தில் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு எல்லைக்குட்பட்ட பக்கங்களைப் படிக்க முடிந்தது. முன்னுரை முடிவுரை தவிர்த்து 14 அத்தியாயம் மொத்தம் 368 பக்கம்! இந்தியாவில் விலை 1657 ரூபாய் என்பது மட்டும்தான் மிகவும் நெருடலாக இருக்கிறது. இங்கே  நண்பர்கள் பலர் அமேசான் கிண்டில் வாங்கி விட்டுப் பயன் படுத்தாமலோ பயன்படுத்தத் தெரியாமலோ வைத்திருப்பதை பார்த்ததனாலோ என்னவோ இதுவரை எனக்கு  கிண்டில் வாங்கும் யோசனை கூட வரவில்லை. முன்னர்  டெஸ்க் டாப் என்றிருந்தது ஆறேழு வருடங்களாக லேப்டாப் என்றானது மட்டும் தான் முன்னேற்றம். 


எதற்காக இந்தப்பல்லவி என்கிறீர்களா? இந்தமாதிரி கொஞ்சம் உருப்படியான விஷயங்களைப் படிப்பதற்கு கிண்டில் அன்லிமிட்டட்  உபயோகமாக இருக்குமே என்கிற ஒரே ஆதங்கம், யோசனைதான்!  


இங்கே ஒரு 9 நிமிட வீடியோவில், புத்தக ஆசிரியர் லாரி டயமண்ட் , புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறார்.  ஒரு 77 நிமிட ஆசிரியரின் அறிமுக உரையைப் பார்க்க கேட்க  

“In earlier reverse waves, military coups were the main method of the democraic recession. Not today. The death of democracy is now typically administered in a thousand cuts. In one country after another, elected leaders have gradually attacked the deep tissues of democracy—the political independence of the courts, the business community, the media, civil society, universities, and sensitive state institutions like the civil service, the intelligence agencies, the military, and the police.” 

“Ultimately, what sustains democracy is a deep and unconditional belief in its legitimacy. Unless a country’s people and politicians are unconditionally committed to democracy as the best form of government—one worth obeying and defending even when their preferred parties, candidates, and policies lose out—democracy will rest on tenuous footing. Then, any crisis could topple it.” 

1. Begin to demonize the opposition as illegitimate and unpatriotic
2. Undermine the independence of the courts
3. Attack the independence of the media (recall Trump’s tweet that America’s biggest enemy is not Russia, ISIS, or North Korea, but our own news media)
4. Gain control of any public broadcasting
5. Impose stricter control of the internet
6. Subdue other elements of civil society
7. Intimidate the business community
8. Enrich a new class of crony capitalists
9. Assert political control over the civil service and the security apparatus
10. Gerrymander districts and rig the electoral rules
11. Gain control over the body that runs elections
12. Repeat steps 1 to 11

என்று நூலாசிரியர் புத்தகத்தில்  சொல்வதாக Good Reads தளத்தில் வந்திருக்கும் ஒரு விமரிசனத்தைப் படித்தபிறகு இந்தப் புத்தகத்தை நான் படிக்க விரும்புகிற பட்டியலில் சேர்த்தாயிற்று! ப்பூ! இதெல்லாம் மேட்டரா? 2014 தேர்தலில் நரேந்திர மோடி ஜெயிப்பதற்கு முன்னாடி இருந்தே காங்கிரசும் மற்றவர்களும் சொல்லிவருகிற அதே பல்லவி தானே என்று கேட்கிறீர்களா? முழுசாய்ப் படித்துவிட்டு வந்து பதில் சொல்கிறேன்!!  

எப்போது நேரம் வாய்க்கும் என்பது அடுத்த கேள்வி .

**இது இந்தப்பக்கங்களில் 400வது பதிவு. இந்த வருடத்தில் எழுதிய 314வது பதிவு என்பது வெறும் தகவல் மட்டுமே. இந்தப் பக்கங்களில் எழுத ஆரம்பித்து டிசம்பர் 2018 எழுதிய 6 பதிவுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், 2009 டிசம்பரில் இருந்து 2018 நவம்பர் முடிய உள்ள பத்தாண்டுகளில் எழுதிய மொத்தப் பதிவுகளே 80 தான் என்பதும், 2019 பிப்ரவரிக்குப் பிறகே இந்தப் பக்கங்களுக்கு வாசகர்களுடைய வருகை அதிகரித்தது என்பதும் தான் முக்கியமான விஷயம்!  

நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்.     

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)