Howdy Modi நிகழ்ச்சி ஹூஸ்டனில் சிறப்பாக நடந்தேறி இருக்கிறது என்பதில் சோனியா காங்கிரசுக்குக் காய்ச்சல் வந்திருப்பது ஆச்சரியமா என்ன? போதாக்குறைக்கு இரு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டிருப்பதில் வாந்தி, பேதியும் சேர்ந்தே வந்திருக்கிற மாதிரித் தான் தெரிகிறது!
‘‘இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு என்பது எப்போதுமே கட்சி சார்புக்கு அப்பாற்பட்டது. ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசிய மோடி அதிபர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் குடியரசு கட்சியினர், ஜனநாயக கட்சியினர் என தனிப்பட்ட கட்சிகள் சார்பாக இந்தியா எந்த நிலைப்பாட்டையும் எடுத்தது இல்லை. அவருக்கு பிரச்சாரம் செய்ய முனைந்துள்ளார். இது இந்திய - அமெரிக்க உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு தேர்தல் விவகாரங்களில் தலையிடுவது நமது நாட்டின் வெளியுறவு கொள்கைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் அமெரிக்கா இருநாடுகளும் இறையாண்மை உள்ள ஜனநாயக நாடுகள் என்பதை மறந்து பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும்போது நீங்கள் இந்திய பிரதமர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் நட்சத்திர பிரசாரகர் அல்ல’’
இவ்வளவு நீளமாக அலுப்பூட்டுகிற உபதேசத்தை காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எவர் இத்தனை பொருமலுடன் சொல்லியிருக்க முடியும்? ஆனந்த் ஷர்மா இந்த வினோதமான பொருமலுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.
இது கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவின் தூரிகைப் பொருமல்!
வாசகர் கருத்தைச் சித்திரமாக்குவதாக சந்து கிடைக்கிற இடத்தில் சிந்துபாடுகிற பாணி இந்து தமிழ்திசை நாளிதழுக்கு இருக்குமானால் விக்கிரவாண்டி தொகுதியில் இளைஞரணிச் செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி போட்டியிட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணியை வைத்து விருப்ப மனு தாக்கல் செய்ய வைப்பது திமுகவினர் பாணியாக இருக்கக் கூடாதா? அப்படித்தான் ஒரு கூத்து இன்று நடந்திருக்கிறது!
திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த மன்மோகன் சிங், சோனியா காந்தி: நன்றிக்கடன் பட்டுள்ளதாக கார்த்தி உருக்கம் என்கிறது செய்தி! தன் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதில் மட்டும் மும்முரம் காட்டிய, எச்சிற்கையால் ஈ கூட ஓட்டாத வள்ளல் சீனாதானாவை சந்தித்தார்கள் சரி! ஆனால் காங்கிரசுக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கைக்காசை (எல்லாம் முறைகேடாகச் சம்பாதித்ததுதான்!) செவவழித்த ஆபத்பாந்தவன் DK சிவகுமார் அதே சிறையில் பக்கத்திலேயே தானே இருக்கிறார், அவரைக் கட்சிப்பெருந்தலை சோனியா ஏன் சந்திக்கவில்லை?
அடுத்தவரிடம் கேள்வி கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தங்களை நோக்கி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி மாதிரி சீப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்க வேண்டியது தான் விதி!
ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும் அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால், கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!)
மீண்டும் சந்திப்போம்.
>>> அடுத்தவரிடம் கேள்வி கேட்கத் தெரிந்தவர்களுக்கு, தங்களை நோக்கி வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி மாதிரி சீப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்க வேண்டியது தான் விதி! ..<<<
ReplyDeleteஅருமை.. அருமை..
வாங்க துரை செல்வராஜூ சார்!
Deleteகாங்கிரஸ் சின்னாபின்னமாகிக் கிடப்பது தெரிந்தும் கூட சில நண்பர்கள் இங்கே காங்கிரசைப் பற்றியே தொடர்ந்து பேசுவானேன் என்று குறைப்பட்டுக் கொள்வதைக் கவனித்திருக்கிறீர்களா?
ennanga ithu Radha ravi solvathu nejama ? appadinna Tamilnatla tamilan kedayatha ?
ReplyDeleteவாருங்கள் சரவணன்!
Deleteதமிழகத்தில் நாயக்க மன்னர்களுடைய ஆட்சி எப்படி ஆரம்பித்தது என்கிற வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத்தான், அகிலன் எழுதிய நாவல் வெற்றித்திருநகரைப் படிக்க வேண்டும் என்று சொன்னதே! தமிழகத்தை மட்டுமல்ல தெற்கே முழுவதும் இஸ்லாமிய படையெடுப்பும் ஆக்கிரமிப்பு ஆட்சி என்று போய்விடாமல் காத்து நின்றது விஜயநகர சாம்ராஜ்யம். ராதாரவிக்கு இந்த வரலாறெல்லாம் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் பேசியதில் ஒரு பகுதி உண்மையே!