அடுத்தவீடு ஆந்திராவின் அரசியலை யாத்ரா திரைப்பட விமரிசனமாக இங்கேயும், அதன் பின்தொடர்ச்சியாக நடந்ததை இங்கேயும் பார்த்திருக்கிறோம் இல்லையா? ஆந்திர சமையலிலும் சரி, அரசியலிலும் சரி காரம் நிறையவே தூக்கலாக இருப்பது NTR ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு பார்த்ததில்லை. ஜெகன் மோகன் ரெட்டி கொஞ்சம் matured ஆகச் செயல்படுவார் என்று ஆரம்பநாட்களிலிருந்தே நான் நம்பவில்லை. இங்கே கருணாநிதிக்கு குறையாத அளவு ஊழலில் கொழுத்த சந்திரபாபு நாயுடுவா? மிகக்குறுகிய காலமே ஆட்சியில் இருந்தாலும் சீனாதானாவுக்கே வழிகாட்டியாக பணங்காய்ச்சி மரங்களைத் தன் வசமாக்கிக் கொள்கிற கலையில் தேர்ந்த YS ராஜசேகர ரெட்டியின் மகனா? என்ற கேள்வியில் ஆந்திர ஜனங்கள், YSR காங்கிரசுக்கே வாக்களித்தார்கள்! பாவம் சந்திரபாபு நாயுடு! தன்னுடைய முன்னாள் நண்பர் மகனிடம் சிறுமைப் பட்டுக் கொண்டே வருகிறார் என்கிறது இன்றைய செய்தி.
Telugu Desam president N Chandrababu Naidu on Wednesday made a vain bid to venture out of his house at Undavalli to proceed to Palnadu region in Guntur district as part of his 'Chalo Atmakuru' call against alleged eviction of some villagers.
Andhra Pradesh Director General of Police D Gautam Sawang issued a statement, through the Chief Minister's Office, that Naidu was taken into "preventive custody" as "his actions are increasing tensions and creating disturbance to law and order in the Palnadu region of Guntur district." என்கிறது அவுட்லுக் தளச்செய்தி.
Amaravati: Police has locked the main gate of TDP Chief and former Andhra Pradesh CM Chandrababu Naidu's residence. He was leaving for Atmakur for party's 'Çhalo Atmakur' rally despite being put under preventive custody by the police.
1:02 PM · Sep 11, 2019
ANI செய்திக்கு ட்வீட்டரில் எப்படி ரெஸ்பான்ஸ் என்று கொஞ்சம் பாருங்கள்!சந்திரபாபு நாயுடு மீதிருக்கிற கோபம் சரி, புரிந்துகொள்ள முடிகிறது! அதற்காக, அவரை விட மிக மோசமான ஜெகன்மோகன் ரெட்டியிடம் தான் சிக்கிக் கொள்ள வேண்டுமா? ஓட்டப்பம் வீட்டைச் சுடும் என்பதை எப்போது தெரிந்துகொள்ளப் போகிறார்களாம்? 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி க்ளிண்டன் மீதிருந்த வெறுப்பு, அவநம்பிக்கையில் இன்னொரு மோசமான வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வாக்களித்தமாதிரியா? அங்காவது தோல்விக்கு ரஷ்யர்கள் என்னமோ தில்லுமுல்லு செய்து விட்டார்கள் என்று டெமாக்ரட்டுகள் சொன்னது. அப்புறம் Cambridge Analytica என்று ஒரு கான்ஸ்பிரசி தியரியும் வந்தது. இங்கே ஆந்திராவில் அப்படி என்ன எங்கே வந்தது? கொஞ்சம் சொல்லுங்களேன்!
எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்காக ஒரு குறும்படம் இங்கே நீங்களும் தாராளமாகப் பார்க்கலாம்!
நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நாட்களில் இங்கே எவரும் பாதுகாப்பு தொடர்பான எக்ஸ்பெர்ட்டுகள் ஆகவில்லை. நிதியமைச்சராக ஆனாலும் ஆனார்! இங்கே 200 ரூபாய் உபிக்களிலிருந்து சதீஷ் ஆசார்யா வரை ஆளுக்காள் பொருளாதார நிபுணர்கள் ஆகிவிட்டார்கள்! அதை பார்ப்பதற்கு முன்னால்.......
இந்த மனுஷன் மெய்யாலுமே Oxford பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து டாக்டரேட்டும் வாங்கினவர் என்றால் நம்பமுடிகிறதா? ஆனாலும் பொருளாதாரப்புளி சீனாதானா தான் என்று இன்னமும் நம்புகிற கேணைகள் காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கிறார்கள்!
காங்கிரஸ் கட்சிக்காக வரிந்துகட்டிக் கொண்டு வரைந்த கார்டூன் மாதிரியே இல்லை?
சதீஷ் ஆசார்யாவைப் பேசாமல் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கிவிடலாம்! #கொபசெ ஆக்குவதற்கு கொள்கை என்று ஒன்று இருந்தாகவேண்டிய அவசியமே இல்லையென்று காங்கிரசுக்குச் சொல்லியா தர வேண்டும்?
ஜனங்களுடைய மறதியைப் பற்றி அசாத்திய நம்பிக்கை உள்ளவர்களால் மட்டும்தான் #நேருபாரம்பரியம் என்று தெனாவட்டாகப் பேசமுடியும் என்பது தெரியாதா?
அப்புறம் H ராஜா ஏன் கேள்வி கேட்க மாட்டார்? கொஞ்சம் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment