எங்கே போகிறோம்? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான் இது! சோ எழுதிய நாடகம் ஒன்றின் தலைப்பு இதே பொருளைத் தரும் Quo Vadis! அகிலன் எழுதிய நாவல் ஒன்றின் தலைப்புக் கூட எங்கே போகிறோம் தான்! அகிலன் எழுதிய அந்தக்கதை இப்போது சுத்தமாக நினைவில் இல்லை.
யூட்யூப் தளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது கவண் படத்தில் இருந்து இந்த க்ளிப்பிங், நீண்ட நாள் கழித்து T ராஜேந்தரை செம form இல் பார்த்தபோது, எனக்குள் கிளைத்த கேள்வி எங்கே போகிறோம்? சமூகத்தின் முகம் காட்டும் கண்ணாடியாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் நம்மை எங்கே திசைமாறிச் செல்லத் தூண்டுகின்றன என்பதைப் புரிந்துகொண்டாலே எங்கே போகிறோம் என்பதும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதும் தெளிவாகிவிடும் என்பதைத்தான் செய்திகளின் அரசியல் என்ற ஹேஷ்டாகில் இங்கேயும் Consent to be ...nothing! தளத்திலும் எழுதிவருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம்.
OPIndia தளத்தில் இங்கே ஊடகங்கள் எப்படி ஒரு செய்தியைத் திரித்துச் சொல்கிறார்கள் என்பதை . நீங்களே பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம்! கோயபல்ஸ் எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும்! ஓலா, உபெர் பற்றிச் சொன்னது கூட சரி! ஆனால் லாரி, ட்ரக் வகையறா வாகனமும் விற்பனையில் படுத்துவிட்டதே என்று கேள்விகேட்கிறவர்கள் கவனத்துக்கு இப்படி ஒரு பதிலும் உலாவுகிறதே! தெரியுமா?
ஜெயமோகன் பற்றியோ சாரு நிவேதிதா பற்றியோ எழுதியே ஆகவேண்டிய எந்தவிதமான அரிப்போ கட்டாயமோ எனக்கு இல்லை என்றாலும், இது பதிவர் உண்மைத்தமிழனுக்காக! ஜெயமோகன் போல அல்லது அவரைவிடவும் இணையத்தில் எழுதிக்குவித்தவர் உண்மைத்தமிழன் என்பதால்!
முடிவு பண்ணிட்டேன். ஆசானே இப்படி சொன்ன பிறகும் நாம இதுல இறங்கலைன்னா நாளைய சமூகம் நம்மளை எழுத்தாளரா நினைக்க வாய்ப்பே இல்லை.
ஸோ.. அடுத்த ஜனவரில இருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புத்தகம்ன்னு உண்மைத்தமிழன் வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து இலக்கியங்களையும் அமேசானில் கொட்டப் போகிறேன்.
ஆசான் அவைகளைப் படித்துவிட்டு "குப்பை" என்று வார்த்தை சொன்னால் போதும்..
பேரானந்தமடைவேன்..!
இந்த ஒரு வார்த்தைக்காகவே என் புத்தகங்கள் அமேசானில் பிய்த்துக் கொண்டு போகும் என்று உறுதியாய் நம்புகிறேன்..!
ஜெய் ஜெயமோகன்ஜி..!
சீனாதானா அவர் நினைத்ததை விட இன்னும் அதிககாலம் திஹார் சிறைவாசம் செய்யவேண்டியதிருக்கும் போல!
எங்கே போகிறோம் என்பது தெரியாமலேயே எவ்வளவு செய்தி, அரசியலைக் கடந்துவந்திருக்கிறோம் என்பது இப்போது புரிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment