பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Friday, September 27, 2019
பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!
இங்கே நம்மூரில் காசுக்கு கூவுகிற ஊடகங்கள் எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது முறையாக காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னதை வைத்து மோடியின் அமெரிக்க ஜாலம் தோற்றுப் போய்விட்டதாகக் கூவிக் கொண்டிருக்கையில் அங்கே பாகிஸ்தானிய ஊடகங்கள் என்ன சொல்கின்றனவாம்?
The Nation என்கிற பாகிஸ்தானியப் பத்திரிகையில் இந்தவார புதன்கிழமை வெளியாகியிருந்த கார்டூன் இது! Carrot and stick என்று சொல்வார்கள் இல்லையா, அதையே கொஞ்சம் இம்ரான் கானை வைத்து ஒரு செமத்தியான லந்து! பின்னால் என்ன நடந்ததோ தெரியாது, கார்டூனுக்காக வருத்தம் தெரிவித்து ஒரு முழுநீள வியாக்கியானம்! சமயத்தில் கார்டூனிஸ்டுகள் கலக்குகிறார்கள்! எதிர்ப்பு வந்தவுடன் பம்மிப் பதுங்குகிறார்கள்!
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி எழுதிய Reset புத்தக வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் குமார் முகர்ஜி பேசுகிறார். வீடியோ 13 நிமிடம்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பிரணாப் குமார் முகர்ஜியைப் பற்றி அதே நிகழ்வில் பேசுவது 7 நிமிடம் படித்ததில் பிடித்தது!
சில்வியா ப்ளாத்தின் கணவர் word processor வருகை எழுத்தாளர்கள் நிறைய பெருகி விட்டதற்கும் அவர்கள் தடித்தடியாக எழுதிக் குவிப்பதற்கும் ஒரு காரணம் என்கிறார்.மொபைலும் ஒரு காரணம்தான்.
முன்பு இயற்கையே ஒரு தடையை வைத்திருந்தது.ஒரு நாவலின் இருபத்தி மூன்றாம் பாகத்தை எழுத முனையும்போது "ஓவராப் போறே நீ!" என்று ஆர்த்தோ டாக்டரிடம் அனுப்பி வைக்கும்.இப்போது ஒரு நாவலை வாயாலேயே எழுதலாம்.
கொஞ்சம் யோசித்தால் சினிமா,ஓவியம்,இசை எல்லாமே இன்று அளவுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன தானே.மாதக் கணக்கில் ஓடக்கூடிய வெப் சீரிஸ்கள் எவ்வளவு கொட்டிக் கிடக்கின்றன.தொழில் நுட்பம் இதை சாத்தியமாக்கி இருக்கிறது.தொழில் நுட்பமும் சந்தையும் சிறியதாக இருந்த காலத்திலேயெ The human condition போன்ற ஒன்பது மணி நேரம் ஓடக்கூடிய படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.இலக்கியம் மட்டும் ஏன் சிறியதாக இருக்கவேண்டும்?
No comments:
Post a Comment