அதென்னவோ கொஞ்சம் யோசிக்க வைக்கிற மாதிரி விஷயங்களைத் தேடிப்பிடித்து எழுதலாமே என்று நினைத்தால் நண்பர்களுக்கு அவை பிடிப்பதில்லை போல! அதனால் கொஞ்சம் அக்கப்போர்களை செய்திகளில் தேடலாமே என்றொரு சின்ன முயற்சி! அடிக்க வராதீர்கள்! 🙏
இன்றைக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் சீனாதானா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தது விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது கொஞ்சம் சுவாரசியமான வாதங்கள் நடந்தனவாம்! எதுக்காம்? எல்லாம் சோத்துக்குத் தான்! Same food for everyone: High Court refuses home meals for Chidambaram என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்! The arguments took place while the court was hearing the regular bail application filed by the Chidambaram in CBI case pertaining to INX media. வீட்டுச் சாப்பாடெல்லாம் அனுமதிக்க முடியாது. சிறையில் மற்றவர்களுக்கு என்ன போடுகிறார்களோ அதுமட்டும் தான் என்று கண்டிப்புக்கு காட்டிய நீதிபதியிடம் கபில் சிபல் வயதைக்காட்டிக் கருணை காட்டச்சொன்னாராம்! சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா அதற்கு ஓம் பிரகாஷ் சவுதாலா கூட வயதானவர்தான்! அவர்கூட அரசியல்(வாதி) கைதிதான்! ஒரு அரசாக நாங்கள் யாரையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். ( ஐந்துமுறை ஹரியானா மாநில முதல்வராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா! ஜாட் இன மக்களின் செல்வாக்கு மிகுந்த தலைவர், முன்னாள் துணைப்பிரதமர் தேவிலால் மகன் என்பதெல்லாம் நினைவிருக்கிறதா? இந்திய தேசிய லோக்தள் கட்சித்தலைவர். 2013 இல் ஊழல் வழக்கில் இவருக்கும் மகன் அஜய் சிங்குக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது) கபில் சிபல் சீனாதானா மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு 7 வருடம் தான் தண்டனையே என்று எதற்கு வாதமாக வைத்தார் என்பது இன்றைய #அக்கப்போர்!
#அக்கப்போர்2 என்றால் ஆச்சி மசாலா சேர்க்காமலா?
தென்னமரத்துலா... ... ... பன மரத்துல நெறிகட்டும்னு சொல்லுவாய்ங்க இல்ல... அந்த மாதிரி...
கேரளத்துல திருசூர்ல ஆச்சி மசாலா மிளகாய்ப் பொடிக்கு தடை விதிச்சாய்ங்கன்னு நாம செய்தி போட...
அதுக்கு பதிலா.. அப்படி ஒரு விஷயமே நடக்கல... அப்டில்லாம் தடையே விதிக்கலன்னு சொல்லி... திருசூர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள கேள்விக்கு உள்ளாக்குறா மாதிரி... இந்த செய்தி வெளிவத அதே நாள்ல... சென்னையில இருக்குற இந்த Scientific Food testing Services (P) Ltd., அப்டிங்கற சர்ட்டிபிகேட்டை கொடுத்து... திருசூர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள மட்டுமல்ல.. நியூஸ் போட்ட ஊடகங்களையும் கேள்விகேட்டது ஆச்சி மசாலா நிறுவனம்... (நமக்கும் ஒருவர் போன் செய்து, சோர்ஸ் என்ன என்று கேட்டார். நாம் குறிப்பிட்ட மங்களம் மலையாள பத்திரிகையின் செய்தி குறித்து சொன்னோம்..)
பிறகு... பிபிசி.,ல கொஞ்சம் விரிவா செய்தி போட்டிருந்தாங்க...
//திரிச்சூரில் அதிகாரிகள் யாரும் ஆச்சி மசாலா தடை பற்றி அறிவிக்கவில்லை என்று அந்த நிறுவனத்தின உரிமையாளரே தெரிவித்த நிலையில், திரிச்சூரிலுள்ள உணவு பாதுகாப்பு துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.
ஒரு பிரிவுக்கு திரிச்சூரில் தற்காலிக தடை
ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட மிளகாய் தூள் பாக்கெட்டை பிரதேச ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது சில பூச்சிக்கொல்லிகள் (pesticides) இருப்பது கண்டறியப்பட்டது. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட 0.01மில்லிகிராமைவிட அதிகமாக இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், இந்த பாக்கெட் விற்பனை திரிச்சூரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருச்சூர் உதவி ஆணையாளர் ஜெனார்தன் தெரிவித்தார்.
ஆச்சி மசாலா நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட மிளகாய் தூள் பாக்கெட்டை பிரதேச ஆய்வகத்தில் ஆய்வு செய்தபோது சில பூச்சிக்கொல்லிகள் (pesticides) இருப்பது கண்டறியப்பட்டது. சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட 0.01மில்லிகிராமைவிட அதிகமாக இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், இந்த பாக்கெட் விற்பனை திரிச்சூரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருச்சூர் உதவி ஆணையாளர் ஜெனார்தன் தெரிவித்தார்.
எங்கள் முதல் ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதால், மக்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் திரிச்சூர் உதவி ஆணையாளர் தற்காலிக தடை விதித்துள்ளார்.
ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த பொருளை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு இந்த நிறுவனம் அனுப்ப வேண்டியிருக்கும். அந்த ஆய்வு அறிக்கையின்படிதான், கேரள மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஆனால், இந்த ஆய்வு முடிவு உண்மையானது. அந்த முடிவு எங்களிடமே உள்ளது என்றும் ஜெனார்தன் கூறினார்.//
ஆனால், அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த பொருளை பெங்களூருவிலுள்ள மத்திய உணவு ஆய்வகத்திற்கு இந்த நிறுவனம் அனுப்ப வேண்டியிருக்கும். அந்த ஆய்வு அறிக்கையின்படிதான், கேரள மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. ஆனால், இந்த ஆய்வு முடிவு உண்மையானது. அந்த முடிவு எங்களிடமே உள்ளது என்றும் ஜெனார்தன் கூறினார்.//
ஆக... ஆக... மக்களே... அரசுத் துறை ஒரு புறம் தடை செய்ய... தனியார் துறை லேப்ல... டெஸ்ட் பண்ண ரிசல்ட்ட அனுப்பிச்சா... திருசூர் அதிகாரிகள் ஏத்துப்பாங்களான்னு மேற்படி ஆச்சி மசாலா நிறுவனத்திடம் கேக்கணும்னு தோணுது என்கிறார் தினசரி தளத்தின் ஓனர்
நீண்ட நாட்களுக்குப் பின் குமரி அனந்தன்! தமிழிசையின் அப்பா என்பது தான் தற்போதைய அடையாளமாக! பிளவுபடாத காங்கிரஸ், அப்புறம் ஸ்தாபன காங்கிரஸ், காந்தி காமராஜ் காங்கிரஸ் என்று ஆரம்பித்து அதை இந்திரா காங்கிரசுடன் இணைத்து , அதிலிருந்தும் வெளியேறி தொண்டர் காங்கிரஸ் என்று ஆரம்பித்து போணி ஆகாமல் மறுபடியும் காங்கிரசுக்கே திரும்பிய வரலாறு உள்ளவர். ஐந்துமுறை MLA வாகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது அவரது தியாகத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று நீங்கள் நம்ப விரும்பினால் நான் அதற்குத் தடையாக இருக்க மாட்டேன்! #அக்கப்போர்3 வீடியோ 29நிமிடம் தான்.
மீண்டும் சந்திப்போம்.
>>> சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட 0.01 மில்லிகிராமைவிட அதிகமாக இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், .. <<<
ReplyDeleteஐயா நீங்கள் சொல்லும் இந்த அளவீடு எத்தனை கிராம் மிளகாய்த் தூளுக்கு என்பது தெரியவில்லை...
ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம வீட்டு ஆச்சி இந்த மாதிரி பூ. கொ. மருந்துகளைச் சேர்த்து அரைத்துக் கொடுப்பாளா?...
மக்கள் நோகாமல் நொங்கு (நுங்கு) சாப்பிட ஆசைப்பட்டால்
இப்படியெல்லாம் ஆகும் தான்!...
அப்புறம் புற்று நோய்க்கு மருந்து, ஆச்சி மிளகாய் என்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து ஆச்சி மசாலா என்றும் பாட்டுப் பாடி கும்மி அடிக்க வேண்டியது தான்...
வாங்க துரை செல்வராஜூ சார்!
Delete//சாதாரணமாக அனுமதிக்கப்பட்ட 0.01மில்லிகிராமைவிட அதிகமாக இந்த பூச்சிக்கொல்லிகள் இருந்ததால், இந்த பாக்கெட் விற்பனை திரிச்சூரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருச்சூர் உதவி ஆணையாளர் ஜெனார்தன் தெரிவித்தார்//.
அப்படிச் சொன்னது நானோ செங்கோட்டை ஸ்ரீராமோ இல்லை! சொன்னது யாரென்று மேலே கடைசி வரியில் தெளிவாக இருக்கிறது. இங்கே பூச்சிக்கொல்லி மருந்தை தேவைக்கும் அதிகமாக உபயோகிக்கிற போக்கு விவசாயிகளிடம் இருக்கிறது, தரக்கட்டுப்பாட்டு என்பது மூலப்பொருட்கள் கொள்முதல் செய்கிற இடத்தில் இருந்து ஆரம்பித்து, மசாலாவாக மாற்றப்படும்போது இன்னும் என்னென்ன பிராசஸ்களில் இந்தத்தவறு அதிகப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்! இதை ஞாபகம் வைத்துக் கொண்டு, செய்தியை மசாலாவாக அரைப்பது எப்படி என்று மேற்கொண்டு பார்க்கலாம்! :-)))