சங்கடமான வங்கிவேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் சங்கீதம் பாட விடாமல் வங்கித்துறை சார்ந்த செய்திகளில் கவனம் இன்னும் விடாப்பிடியாக விட்டுப்போக மறுப்பது எனக்கு மட்டும்தானா? இதே வங்கித்துறையில் இருந்த சில பதிவர்கள் மாதிரி take it easy என்று கம்முன்னு இருக்கமுடியாமல் வங்கிகளைப் பற்றி இங்கேயும் Consent to be ....nothing! தளத்திலும் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாராவது கவனிக்கிறார்களா? அப்படியே கவனித்தாலும் என்ன செய்துவிடமுடியும் என்று சலிப்பு வருகிறதா?
சதீஷ் ஆசார்யாவுடைய இந்தக் கார்டூனைப் பார்த்தபிறகு ஏன் இப்படிப்பொறுப்பே இல்லாமல் விஷமத்தனமான கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோபமும், கோபப்பட்டு என்ன ஆகப்போகிறதென்ற சலிப்பும் சேர்ந்தே வந்தது. சதீஷ் ஆசார்யாஇந்தக் கார்டூனில் தொடர்பு இல்லாத இரு விஷயங்களை முடிச்சுப்போட்டு மூன்றாவதாக ஒரு விஷமத்தனமான கருத்தைப் பார்க்கிறவர்களிடம் விதைக்க முயன்றிருக்கிறார் என்கிற விவரம் புரிகிறதா? முதலில் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கியிடம் இடைக்கால டிவிடெண்டாக 30000 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக வந்த செய்தி! இரண்டாவதாக பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பதில் கஸ்டமர் தன் கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும் என்பது கொஞ்சம் தளர்த்தப்பட்டு 10000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தி. இரண்டுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு படுத்தி என்ன சொல்ல வருகிறார் கார்டூனிஸ்ட்?
கூகிளில் PMC Bank என்று தேடிப்பாருங்கள்! இந்த மல்டி ஸ்டேட் அர்பன் கூட்டுறவு வங்கி எப்படி ஆறேழு வருடங்களாக ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து பொய்யான விவரங்களைக் கொடுத்து வந்திருக்கிறது, இப்போது எப்படி மாட்டிக் கொண்டிருக்கிறது என்ற விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டே இருப்பதை தேடலில் பார்க்க முடியும்.
முதல் பாராவில் ஆர்தர் ஹெய்லியின் The Money Changers நாவல் விமரிசனமாகச் சொல்லிவிட்டு இந்திய வங்கிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருந்ததற்கான லிங்க் இருக்கிறது. PMC Bank இன் மொத்த டெபாசிட் 11000 கோடி ரூபாய், வங்கி கடன் கொடுத்த தொகை 8300 கோடி ரூபாய் என்பது வெறும் தகவல். வெறும் 3 கோடி ரூபாய் மூலதனம் அப்புறம் 9 கோடிரூபாய் ரிசர்வ் மட்டுமே உள்ள ஒருவங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிற ஒரே குழுமத்துக்கு 6500 கோடி கடன் கொடுத்தது எப்படி? PMC’s annual report shows it to be a profitable lender with a capital adequacy ratio higher than the 12% minimum requirement and a bad-loan ratio of under 4% – almost respectable by the current standards of India’s banking industry. If the news reports are correct, the solidity portrayed by that document is a fiction. How did PMC’s board, its auditors and the central bank remain clueless for so long? இன்னும் விரிவாகப்படிக்க இங்கே
Fake News வெறும் கவனக்குறைவால் உருவாக்கப்படுபவை அல்ல! அவை திட்டமிட்டு உருவாக்கப்படுகிற விதத்தை இங்கே கொஞ்சம் சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா?
செய்திகளின் வேரைப் பிடியுங்கள் பார்த்துப்பழகுங்கள் என்று இந்தப் பக்கங்களில் அடிக்கடி சொல்வதில் கவனம் செலுத்த முடியுமானால், ஊடகப்பொய்கள், திரிக்கப்படும் செய்திகள், அம்மாதிரிச் செய்திகளின் அரசியல் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதுமே கூட எளிதுதான்!
மீண்டும் சந்திப்போம்.
செய்திகளின் வேரைப் பிடியுங்கள் பார்த்துப்பழகுங்கள் என்று இந்தப் பக்கங்களில் அடிக்கடி சொல்வதில் கவனம் செலுத்த முடியுமானால், ஊடகப்பொய்கள், திரிக்கப்படும் செய்திகள், அம்மாதிரிச் செய்திகளின் அரசியல் எல்லாவற்றையும் புரிந்துகொள்வதுமே கூட எளிதுதான்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment