அரசியல் அக்கப்போர்கள், எழுதுவதற்கு நிறைய இருக்கத் தான் செய்கின்றன! எவ்வளவு எழுதினால்தான் என்ன? மாறி விடப்போகிறதா என்ன? அதனால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக யூட்யூபில் திரை இசையைத் தேடி! துள்ளல் இசையாக, இன்று சில பாடல்களைக் கொஞ்சம் பார்க்கலாமா? கேட்கலாமா?
ஈசன்! இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரம் பட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது படமாக சொந்தமாகத் தயாரித்த படம். ஒரு வார்த்தை ஒருலட்சம் என்று பள்ளிமாணவர்களுக்கான வினா நிகழ்ச்சியில் பிரபலமான ஜேம்ஸ் வசந்தன் தான் இசையமைப்பாளர்! பாடியவர் தஞ்சை செல்வியாம்! வேறு பாடல்கள் பாடியிருக்கிறாரா? தெரியவில்லை.
துள்ளல் இசை என்றால் ரன் படத்தில் இந்தப்பாட்டு இல்லாமலா? 12 வருடங்கள் ஆன பிறகும் கூட மாதவனையும், வித்யாசாகர் இசையில் இந்தப்பாடலையும் ரசிக்க முடிகிறதே!
ஆறு! திரைப் படத்தில் நெஞ்சம் எனும் ஊரினிலே! இந்தப் பாட்டை திரிஷாவுக்காக, தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளும் இசைக்காக மட்டும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம்! சூர்யாவை இந்த இரண்டுகாரணங்களுக்காக வேண்டுமானால் சகித்துக் கொள்ளலாம்! யூட்யூப் கமெண்டுகளில் இன்றும் கூட விருப்பப் பட்டியலில் இந்தப்பாட்டு இருப்பதைப் பார்க்கலாம்!
7G ரெயின்போ காலனி படத்துக்காக யுவன்சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் பாடல் சோகப்பாட்டு மாதிரி இருந்தாலும் ரிதம், பீட் எல்லாமாகச் சேர்ந்து கைகொட்டிப் பாட வைக்கிறதா இல்லையா?
தீபாவளி படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் ஜேசுதாஸ் பாடிய இந்தப் பாடலில் ஒரு மெல்லிய சோகம் இழையோடினாலும், ஒரு சுகமான துள்ளல் இசை தெரிகிறதா?
மைனா படத்துக்காக D இமான் இசையில் சோலார் சாயியும் கல்பனா ராகவேந்தரும் பாடிய இந்தப்பாட்டு வேறுரகம்!
மீண்டும் சந்திப்போம்.
வெள்ளிகிழமை விருந்தா?...
ReplyDeleteஅந்த மைனா படப் பாடல் உண்மையிலேயே வேறு ரகம் தான்!...
அருமை...
வாருங்கள் துரை செல்வராஜு சார்! வெள்ளிக்கிழமையன்று கண்ணில் பட்டதால் அப்படியும் கூட வைத்துக் கொள்ளலாம்! ஆனால் வெள்ளிக்கிழமை வீடியோ எபியில் ஸ்ரீராமுடைய ஸ்பெஷாலிட்டி! இந்தப்பதிவை இங்கே வியாழக்கிழமையே போட்டாயிற்று!
Delete