Monday, September 16, 2019

மறுபடியும் சுபவீ! கமல் காசர்! திருநாவுக்கரசர்!

திராவிட இயக்கத் தமிழர்  பேரவை என்றொரு தனிக்கடை விரித்து பேச்சு வியாபாரம் செய்துவரும் சுபவீ செட்டியாரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து சோனியாG காங்கிரஸ் பேசவைத்திருப்பது, அவர்களுடைய அரசியல் எந்த அளவுக்கு கீழிறங்கி இருக்கிறது என்பதை மட்டுமல்ல, சீனாதானாவுக்கு ஆதரவுக்குரல் எழுப்பவும் கூட காங்கிரஸ் வாடகைக்குத் தான் ஆள்பிடித்தாக வேண்டியிருக்கிறது என்கிற பரிதாபத்தை நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.  ஒரு 25 நிமிடக் காமெடியை அனுபவிக்க முடிகிறதா பாருங்கள்! திஹார் சிறையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சால்வை அழகர் பானாசீனாவின் மகன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாக இங்கே  அதிலே என்ன சொல்லியிருக்கிறது என்பதை விட அதை எந்தெந்த ஊடகங்களுக்கு குறிப்பிட்டு tag செய்திருக்கிறார் என்பதை அவருடைய  ட்வீட்டரில் பார்த்துக் கொள்ளலாம்! இதில் பெரும்பாலான  ஊடகங்களின் சாயம் வெளுத்துப்போய் நீண்ட நாட்களாகிறது என்பது ஒரு புறம்! இன்னமும் கூட ஊடகப்பொய்களாலேயே சால்வை அழகருடைய பிம்பத்தைத் தூக்கி நிறுத்திவிடலாம் என்று நம்புகிறார்கள் பாருங்கள், அது இன்னமும் விசித்திரம்!


கமல் காசருடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு  என்ன ஆயிற்று என்று இங்கே யாரும் தேடுவதாகவோ கவலைப் படுவதாகவோ தெரியவில்லை. ஆனாலும் மனிதர் நானும் இருக்கிறேன் என்று திடீரென்று உறக்கம் கலைந்து தமிழ் மொழி, ஜல்லிக்கட்டு என்றெல்லாம்  பெனாத்தியிருக்கிறார்! 

Moron Kamalahasan and DMK Chieவந்த Stalin are howling about imposition of Hindi. What about their imposition that no Hindi will be taught in TN? Let Hindi be an optional third language and the choice on which language to opt left to the student
1:41 PM · Sep 16, 2019  

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியிடமிருந்து வந்த பதிலடி இது ஒரு பக்கம் என்றால் யூட்யூபில் இப்போது பார்த்த இந்த வீடியோ செம கலக்கல்!  


சமோசா, டீ, பஜ்ஜி, அப்புறம் கொஞ்சம் திருநாவுக்கரசர் எம்.பி.: மாஜி கே.என்.நேருவின் ’கை கழுவும்’ அரசியல் என்ற தலைப்பில் இங்கே கொஞ்சம் தமாஷாக ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்! 


ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் முதல் ஆளாய் அல்வா கொடுத்த கே.என்.நேரு, சமீபத்தில் காங்கிரஸின் எம்.பி. திருநாவுக்கரசருக்கு சமோசா கொடுத்ததுதான் செம்ம கலாய்ப்பான சேதி. அதாவது திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் திருநாவுக்கரசர், நன்றி சொல்லி தொகுதி எங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நன்றி தெரிவிக்க சென்ற அரசருடன் நேருவும் சென்றிருக்கிறார். எம்.பி.க்கு அங்கிருக்கும் பிரபல கடை ஒன்றில் சமோசா, பஜ்ஜி, டீ என ஏகப்பட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களை வாங்கிக் கொடுத்து குஷியாக்கி இருக்கிறார் நேரு. சாப்பிட்டு முடித்த பின், ‘சரி மறுபடியும் நன்றி அறிவிப்பை தொடரலாமா?’ என்று அரசர் கேட்க, ‘கை எண்ணெய்யா இருக்குது. கழுவிட்டு வந்துடுறேன். நீங்க ஆரம்பிங்க ’ என்று சொல்லி கிளம்பியவர் அதன் பிறகு அந்த திசைக்கே வரலையாம். காத்திருந்து காத்திருந்து அரசரும் நொந்துட்டாராம். 

ஹும் காங்கிரஸை கை கழுவுறதுல நேரு ரொம்ப சுட்டியா இருப்பார் போல என்கிறார்களே மெய்யாலுமா?

மீண்டும் சந்திப்போம்.
  

2 comments:

  1. கே என் நேரு 'கைகழுவிய' பாணி ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! கைகழுவதில் நேருவை விட திருநாவுக்கரசர் நிறைய எக்ஸ்பெர்ட், சீனியராக்கும்! :-)))

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)