முந்தைய பதிவில் இருந்த PMC Bank விவகாரம் குறித்து நண்பர்கள் யாருமே ஆர்வம் காட்டவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. காரணம் பதிவுகள் எழுதுவது, வாசிப்பது எல்லாமே பொழுதுபோக்குவதற்காகத் தானே என்கிற மனோபாவம் இங்கே ஆழமாக வேரூன்றி இருக்கிறது. Blog எழுதுவதும் வாசிப்பதும் கூட ஒரு சமூக அக்கறைதான் என்கிற நாட்கள் வந்தபின்னாலும் கூட, எங்கோ மழை பெய்கிறது என்றே இருந்து விடலாமா? இதற்குப் பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
இங்கே The Print தளத்தின் சேகர் குப்தா PMC Bank விவகாரத்தில் இந்த 18 நிமிட வீடியோவில் சுற்றிவளைத்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் எல்லாம் எப்படி அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்தன என்பதைச் சொல்லாமலேயே முடித்து விடுகிறார். அவர் சொல்லாவிட்டாலும் கூட இங்கே தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகள் எல்லாம் ஏதோ ஒரு கழகத்தின் கைப்பிடியில் சிக்கியிருப்பது, கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள் எல்லாவற்றிலுமே மார்க்சிஸ்ட்டுகள் கை வலுத்திருப்பது போன்ற தகவல்கள் நண்பர்களுக்கு தெரிந்த தகவலாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். கூட்டுறவு வங்கிகளில் சுமார் 25000 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தினார்கள் என்று அங்கே மகாராஷ்டிராவில் சரத் பவார், அவரது அண்ணன் மகன் அஜித் பவார் மற்றும் பலர்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒரு விதம் என்றால் PMC Bank விவகாரத்தில் எழுந்திருக்கும் குற்றச்சாட்டு வேறு ரகம்!
PMC Bank MD ஜாய் தாமசும் தலைமை அலுவலக அதிகாரிகள் சேர்ந்து Housing Development and Infrastructure Limited (HDIL), என்ற ஒரே நிறுவனத்துக்கு சுமார் 6500 கோடி ரூபாய்வரை கடன் கொடுத்தது முக்கியமான முறைகேடு மோசடி என்றால் 21049 போலிக்கணக்குகளை உருவாக்கி, வராக்கடன் நிலுவையை உள்ளது உள்ளபடி அறிவிக்காமல் விட்டது இன்னொரு மோசடி. 2013 வாக்கிலேயே HDIL வராக்கடனாக இருந்திருக்கிறது. இதை மறைக்க மோசடியை முன்னின்று நடத்திய வங்கியின் MD ஜாய் தாமசின் ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் எவராவது இருக்கிறார்களா என்பது இதுவரை தெரியவில்லை. பணம் மோசடி என்று வருகிற விவகாரங்களில் அரசியல்வாதிகள் சம்பந்தப்படாமல் இருந்தால் அதுவே உலகின் மிகப்பெரிய அதிசயமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
.
CON என்ற வார்த்தைக்கு தளுக்காக மோசடி செய்வது என்று ஒரு அர்த்தம் இருப்பதால், இங்கே பதிவுகளில் CONgress என்று பயன்படுத்திய சமயங்களில் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து விளக்கம் கேட்டிருக்கிறார்! இன்று லயோலா கல்லூரி நடத்திய ஒரு நிகழ்ச்சி Media Con''19! லயோலா, மீடியா, CON எல்லாம் சேர்ந்தால் கமல் காசர் அன்றி வேறு யார் வருவார் சொல்லுங்கள்!
மய்யமாக அரசியல் பேசுகிற கமல் காசர் அங்கே பேசியதன் வீடியோ 42 நிமிடங்கள். என்ன புரிந்தது என்று புரிந்தவர்கள் யாராவது சொல்வீர்களேயானால் நல்லது, மகிழ்ச்சி.
மீண்டும் சந்திப்போம்.
கபில்சிபில், அபிஷேக் சிங்வி,போன்ற பலரும் உச்சநீதிமன்றத்தை எப்படி தன் கைகளுக்குள் வைத்து இருந்தார்களோ? அப்படித்தான் சரத்பவார். இப்போது தான் அவர் பிடி தளர்ந்துள்ளது என்று வாசித்தேன். ஆனால் இன்னமும் முழுமையடையவில்லை என்பது தான் உண்மை. அவர் கரங்கள் ஆக்டோபஸ் போன்றது. கூட்டுறவு சங்கம் முதல் மற்ற அனைத்து சங்கங்களிலும் போட்டியிட விண்ணப்ப படிவம் கூட சாதாரண மனிதர்களால் வாங்க முடியும் என்று நம்புகின்றீர்களா? கமல் பேச்சு எரிச்சலாக இருந்தது.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteகூட்டுறவு சங்கங்கள் மாதிரி நல்ல விஷயங்களில் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்தால் எப்படித் திரிந்துபோகும் என்பதற்கு தமிழ்நாட்டிலேயே நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு திருபுவனம் கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் திமுக புகுந்து சூறையாடிய விஷயம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் வகையறா செய்த கூட்டுறவு ஊழல் வேறு ரகம், நாட்டிலேயே மிக்ப்பெரியதும் கூட! இப்போதுள்ள சூழலில் ஊழலுக்கெதிரான போராட்டத்தை பிஜேபி எத்தனை சிரத்தையோடு செய்யும் என்பதில் என்னால் சிறிய அளவு ஊக்கம் கூடச் செய்ய முடியவில்லை.
கமல் காசர் அரசியலில் புதிதாக முளைத்திருக்கிற நாய்க்குடை! பயனுள்ளதா விஷமா என்பது இன்னமும் தீர்மானமாகத் தெரிந்து சொல்ல முடியவில்லை.