மாற்றத்தை நோக்கி என்று ஆரம்பிக்கப்பட்ட காவேரி நியூஸ் சேனல், வெளியிலிருந்து வந்த அழுத்தம் தாங்க முடியாமல், கடைசியாக மதன் ரவிச்சந்திரனை வெளியே அனுப்பிவிட்டது அல்லது அவராகவே வெளியேறி விட்டார். இப்போது அந்த இடத்தில் மாயக்குமார் என்பவர் சற்றே காரம் குறைந்த தொனியில் நிகழ்ச்சிகளைத் தொடர்கிறார் என்ற தகவலே இங்கே நிறையப்பேருக்குத் தெரிந்திருக்குமா என்பது கொஞ்சமல்ல சந்தேகம்தான்! ஏனென்றால் அந்த சேனலை இருட்டடிப்பு செய்வதில், பின்னாலிருந்து கையை முறுக்கிய ஆசாமிகள் இன்னார்தான் என்று தெரிந்தாலும், அதை அப்படியே வெளியே சொல்ல முடியாத சேனலும், நாங்கள்தான் அதைச் செய்தோம் என்று வீரப்பிரதாபத்தை வெளியே பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாத திராவிடங்களும் என்று இங்கே ஊடகங்கள், சேனல்களுடைய கதை இருக்கிறது.
மதன் ரவிச்சந்திரன் இப்போது WIN நியூஸ் சேனலுக்கு வந்து தன்னுடைய பழைய பாணியிலேயே நேர்காணல்களை நடத்த ஆரம்பித்திருக்கிறார் என்பதை நேற்றே கவனித்தேன். அதைப் பதிவு செய்ய இன்றைக்குத்தான் பொழுது வாய்த்தது. வீடியோ 40 நிமிடம். தருமபுரி தொகுதி திமுக எம்பி Dr.செந்தில் குமார் நேர்காணல். பார்த்துவிட்டு மதன் இங்காவது நிலைப்பாரா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிகிறதா பாருங்கள்! கூடவே தமிழகத்தில் ஊடகங்கள் ஏன் இப்படிக் கூழைக் கும்பிடுபோட்டே பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன என்ற கேள்விக்கும் பதிலை யோசிக்க முடிகிறதா என்பதையும்!
Nerpada Pesu: பாஜக - திமுக : இணையும் புள்ளியாக இருக்கிறதா சீன அதிபர் வருகை? | 09/10/2019 என்று இந்த வீடியோவுக்குத் தலைப்பு வைக்கிற அளவுக்கு ஒரு சேனல் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்? தமிழக அரசியல் என்னவோ திமுகவை மட்டுமே ஆதாரமாக வைத்து இயங்குகிற மாதிரி, எதற்காக இப்படி ஒரு பில்டப்? இந்த விவாதத்தில் பேசிய எவருமே நாளையும் நாளைமறுநாளும் சீன அதிபரும் பிரதமர் நரேந்திரமோடியும் சந்திக்கவிருப்பது ஒரு Informal summit தான், இது ஒரு CBM Confidence Building Measure மட்டும்தான் என்பதில் எந்தவிதமான ஒப்பந்தமோ, சர்ச்சைக்கு உரிய விஷயங்களைப் பேசுவதோ இருக்காது என்பதை புரிந்துகொண்டு பேசியமாதிரி இல்லை. சம்பந்தமே இல்லாமல் பஞ்சசீலக்கொள்கை அணிசேராக்கொள்கை என்று பேசுகிறார் ஒருவர்! பஞ்சசீலக்கொள்கை நேரு உயிரோடு இருந்தநாட்களிலேயே காலாவதியாகிவிட்டது. அணிசேராக் கொள்கை இந்திரா காலத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டது என்ற விவரம் தெரியாமல் பேசுவது தமிழேண்டா சேனல் விவாதங்களுடைய ஸ்பெஷாலிட்டி.
கார்டூன்களைப் பகிர்ந்து நாட்களாகிவிட்டதோ?
விஜயதசமி நாளன்று பிரான்சில் நம்முடைய பாதுகாப்புத் துறை அமைச்சர், நமது விமானப்படையில் சேரவிருக்கும் . முதல் ரஃபேல் விமானத்துக்கு ஆயுத பூஜை செய்து, அதில் ஒரு சிறிய பயணமும் செய்திருக்கிறார். காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே அதை விமரிசனம் செய்திருப்பதை அட்சய் சந்தர் கார்டூனில் பகடி செய்திருக்கிறார்.
மீண்டும் சந்திப்போம்.
மதன் ரவிச்சந்திரன் போன்றோருக்கு இடங்கள் கிடைப்பது கஷ்டம்தான் போல... வின் டிவியா... அதெல்லாம் பார்ப்பதே இல்லை!!
ReplyDeleteஸ்ரீராம்! இங்கே வரவேண்டுமானால் மதன் ரவிச்சந்திரன் தயவு வேண்டியிருக்கிறதோ? :-))))
Deleteமதன் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்புதான் உடனே கிடைத்து விட்டதே! வின் டிவியை நான் மட்டும் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறேனா என்ன? எந்த செய்தியாகட்டும் ,சேனலாகட்டும் பார்ப்பதும் பகிர்வதும் இணையத்தில் தான்! அதனால் தான் விடுபட்டுப்போனது என்று எதுவுமே அநேகமாக இருப்பதில்லை!
இல்லை ஸார்... தினசரி பிரித்துப் படித்து விடுகிறேன். அல்லது பார்த்து விடுகிறேன். எனக்கு கமெண்ட் இட எங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கு கமெண்ட் இடுகிறேன்.
Deleteஇங்கே தாராளமாக அரசியல் பேசலாம், பதிவுகளில் சொல்லப்பட்டதைப் பிரித்து மேயலாம் ஸ்ரீராம்!
Delete