Saturday, October 19, 2019

எது நல்ல எழுத்து? வாசிப்பின் படிநிலைகள்! கொஞ்சம் பார்க்கலாமா?

என்ன மாதிரி எழுத்தைக் கொண்டாடுவீர்கள்? எதற்காக?  என்ற கேள்விகளோடு நான்கு நாட்களுக்கு முன்னால் இந்தப்பக்கங்களில் ஆரம்பித்த ஒரு விஷயத்தை தினத்தந்தி கன்னித்தீவு படக்கதை மாதிரி இழுத்துக் கொண்டே போகாமல் ஒரு கட்டத்தோடு ஒன்றிரண்டு பதிவுகளோடு முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் கதையைத் தழுவி 1960 வாக்கில் கறுப்பு வெள்ளைப்படமாக 2வது பக்கத்தில் வெளியாக ஆரம்பித்த படக்கதை இன்னும் தொடர்கிறது என்று தான் நினைக்கிறேன்! தினத்தந்தி பேப்பர் படித்து இருபத்தைந்து முப்பதாண்டு காலத்துக்கும் மேலேயே ஆகி இருக்கும். நாடோடி மன்னனில் வருகிற கன்னித்தீவு பெயரையே இதற்கும் வைத்துவிடலாம் என்று சி பா ஆதித்தன் யோசனை சொன்னதாகத் தகவல் இருக்கிறது.   

   
2013 இல் தான் கன்னித்தீவு வண்ணத்துக்கு மாறியதாம்! இதைக் கூட விடாமல் பார்த்தவர்கள் ஏராளம்! (வாசித்தவர்கள் என்று சொன்னால் அது நெம்ப ஓவரு!! வலைப் பூவுக்கு க்ளிக் செய்து வந்து சும்மா 20 செகண்ட் 30 செகண்ட் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுப் போவதை எல்லாம் வாசித்ததாக எடுத்துக் கொள்ள முடியுமா? தினத்தந்தி தான் தமிழில் வாசிக்கும் வழக்கத்தையே வளர்த்தது என்று சொல்வதுகூட அந்த ரகத்தில் சேர்க்கக் கூடிய ஒன்றுதான்! வாசிப்பு நிலையில்  LKG லெவல் என்று கூடச் சொல்ல முடியாது.

ராஜேஷ் குமாரோ, ரமணி சந்திரனோ இருவேறு பிரிவில் வரும் வாசகர்களுக்காக எழுதினார்கள் என்றால் பாலகுமாரன் வணிக எழுத்தின் உச்சம்! எண்பது தொண்ணூறுகளில் இளசுகளைக் கிறங்க அடித்த எழுத்து. காதலோடு, பெண்ணியமும் கலந்து பேசிய விசித்திரமான கலவை! இளம் பெண்களுடைய விடலைத்தனத்தைத் தட்டிக் கொடுத்து தைரியம் சொன்ன எழுத்தாகவே நிறையப் பெண் வாசகர்கள் பார்த்தார்கள் என்பது மறுக்க முடியாத விஷயம். ஊக்கம் தருகிற எழுத்தாக எழுதிக் கொண்டிருந்தவர் தன்னைத் தானே உலகின் புதிய ஆன்மீக குருவாகக் காட்டிக் கொள்ள ஆரம்பித்ததில் சறுக்க ஆரம்பித்ததாக ஒருதரப்பு சொல்லிக் கொண்டே இருக்கையில் இன்னொரு தரப்பு தேவனுடைய மகிமைக்கு சாட்சியம் சொல்ல முற்படும் கிறித்தவத்தைப் போலே, பாலகுமாரனுடைய பேச்சு எழுத்து கண்ணசைவு எல்லாவற்றுக்குமே சாட்சியம் சொல்கிறதாக இன்றும் இருக்கிறது. இப்படி ஏதோ ஒன்றில் மயங்கி அங்கேயே தேங்கிப் போய்விடுகிற வாசகர்களின் நிலையை என்னவென்று சொல்வீர்கள்? ஜெமோ கூட  அதுமாதிரி இல்லாத ஒளிவட்டத்துடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ளப் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும்  புரிந்து கொள்ள முடிகிறதா?

எது ஒரு நல்ல எழுத்தாளனை உருவாக்குகிறது? சராசரி வாசக மனநிலையிலிருந்து ஒரு தேர்ந்த வாசகனாக்கும் எழுத்து எது? இப்படி   முந்தைய பதிவில் சில  கேள்விகளோடு முடித்திருந்தேன் இல்லையா? 

கேள்வியிலேயே பதிலுக்கான திறவுகோலும் இருக்கிறதே! அது என்ன  என்பதைப் பேசுவதற்கு முன்னால்  ஒரு எழுத்தாளர் என்னென்ன செய்யக் கூடாது என்பதற்கொரு நல்ல உதாரணமாக Robin Cook எழுதிய Fever நாவலைப் பற்றி இங்கே எழுதியிருந்ததைப் படித்தீர்களா? அதே ஜானரில் ஒரு தேர்ந்த எழுத்தாளன் எழுதும்போது எப்படி வாசகர்கள் விரும்பும் கதைக்களமாக மாறுகிறதென்ற அதிசயத்தையும் பார்த்து விடலாமே!    
  
டிஸ்கி ! கீழே கௌதமன் சார் பின்னூட்டத்துக்குப் பதில் சொல்கிற மாதிரியும் இந்தப் பதிவை இதற்குமேலும் வளர்த்துக் கொண்டே போகாமல் முடிப்பதற்காகவும் முந்தைய பதிவில் தி ஜானகிராமன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை மறுபடியும் பார்த்துவிடலாம்! கௌதமன், எழுத்தாளர் தேவனை உதாரணமாகச் சொன்னது ஒருவகையில் பொருத்தம் தான்!  

"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கேல்லாமோ ஆசைப் பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள். பலபேர் வார்ப்படம் வைத்துக் கொண்டு ஒரே மாதிரியாக பொம்மை செய்து கொண்டே போகிறார்கள். போலி என்பதைக் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும்.தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, பெரியோர்களுக்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும்தான் கண்டது உண்மை என்ற திட நம்பிக்கையும் (பிறர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கும் அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல சிருஷ்டி இலக்கியமாகத்  தான் இருக்கும்."   

தி.ஜா. சொல்கிற மாதிரி   , தான் கண்ட  உண்மையை    வாசகருக்கும் கடத்திவிடுகிறமாதிரியான எழுத்துடன் சில  நல்ல எழுத்தாளர்களும் இங்கே தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்தார்கள். உதாரணத்துக்கு ஜெகசிற்பியன்! கல்கியில் தொடர்கதையாக வெளிவந்த ஜெகசிற்பியனுடைய  ஜீவ கீதம் நாவலைப் படித்திருக்கிறீர்களா? வாசகர்களுக்கு ஒரு நல்ல கருத்தை, தன்னுடைய நம்பிக்கையைச் சொன்ன வேறு எவராவது உங்கள் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்!  
   
மீண்டும் சந்திப்போம்.             
       

2 comments:

 1. நன்கு தெரிந்த அல்லது தெரிந்ததாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் விஷயங்களைக்(கூட) வித்தியாசமான வகையில், இரசிக்கும் வகையில், சுவாரஸ்யமாக சொல்லுவதில் (எழுதுவதில்)தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி அடங்கியுள்ளது. குரும்பூர் குப்புசாமி எழுத்துகளுக்கு இரசிகர் மன்றம் இருந்திருக்குமா? இப்போதைய ஜெயமோகன் எழுத்துகளை, கு கு ரசிகர்கள் சுலபத்தில் படித்துப் புரிந்துகொள்ள இயலுமா? சாண்டில்யனின் ஒரு மைல் நீள வாக்கியங்களை ஒரே முறைப் படித்து அந்த வாக்கியத்தின் பொருளை மனதில் வாங்கிக்கொள்ள முடியுமா? பி ஜி வோட்ஹவுஸ் பாணியில் எழுதப்பட்ட தேவன் கதைகளை புரிந்துகொள்வது எளிதாக இருந்தது எதனால் என்றால், ஒவ்வொரு வாக்கியத்திலும் எளிய சிறிய வார்த்தைகள் பதினைந்துக்குள் இருக்கும். நான் பாட்டுக்க வள வள என்று எழுதிக்கிட்டுப் போனால் !! (யாரு படிப்பாங்க!)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கௌதமன் சார்!

   குரும்பூர் குப்புசாமியை வாசிப்பது ஒருஆரம்பநிலை மட்டும்தானே சார்! அதற்காகத் தானே கன்னித்தீவு படக்கதையைச் சொன்னது! போகிறபோக்கில் சாண்டில்யனை சம்பந்தமே இல்லாமல் காலைவாரியிருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது! கல்கி தான் சிறந்த சரித்திரக்கதை ஆசிரியர் என்று நினைத்துக் கொண்டிருக்கிற மனோபாவத்தில் கொஞ்சம் வர்ணனைகளுடன் சரித்திரத்தைத் திரிக்காமல் கதை சொன்ன விதம், நிறைய வாசகர்களுக்குப் பிடித்திருந்ததே!

   இந்தப்பதிவை உங்களுக்கான விரிவான பதிலாக ஒரு டிஸ்கியில் போட்டு பதிவையும் வளவளக்காமல் முடித்துவிட்டேன்! போதுமா ? :-))))

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#சீனப்பூச்சாண்டி குறித்தான இந்திய அரசின் அணுகுமுறை மாறுகிறது!

நேற்று வெள்ளிக்கிழமை நமது பிரதமர் நரேந்திர மோடி போர்ப்பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிற லடாக் பகுதிக்கு நேரடியாகச் சென்று நமது வீரர்களைப் பார்த...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (310) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)