விண்வெளியில் பலலட்சம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து, சந்திராயன் 2 பயணத்தின் க்ளைமேக்சாக விக்ரம் லேண்டர் கலம், நிலவில் தரையிறங்க வெறும் இரண்டே கிலோமீட்டர் தூரம் இருக்கையில், தொடர்பு விடு பட்டுப் போனது நேற்றைய காலைப்பொழுதின் சோகம் என்றாலும் முதல் முறையிலேயே நிலாவைத் தொடும் முயற்சியில் இந்த அளவுக்கு நெருக்கமாக வந்தது இந்தியா மட்டும்தான்! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா கூட வரிசையாக மூன்று கார்டூன்களை வரைந்து தள்ளிவிட்டார்.
பாய்மாருங்க மட்டும்தானா? திமுகவின் 200ரூ உபி யாரும் பொரிஞ்சு தள்ளலையா? #மோடிமீதுபயம் #மோடிமீதுவெறுப்பு
மற்ற நாடுகளில் எப்படியோ, சந்த மாமா என்று உறவு கொண்டாடி பிள்ளைகளுக்குச் சோறூட்டுகிற தேசம் இது! தாயின் கையில் ஏறிக் கொண்டே பிள்ளை நிலவைத் தொட்டு விட முனைகிற மாதிரி! தூரிகை கூட இலக்கியம் பேசுமோ!!
இந்தியர்கள் அனைவருமே உங்களோடு என்று ISRO தலைவர் சிவன் மற்றும் நமது விஞ்ஞானிகளைத் தேற்றிய, ஊக்கமளித்த நமது பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவனாக வெளிப்பட்ட தருணமும் அதுவே!
ISRO வின் அடுத்த முயற்சிக்காக அந்த நிலவே காத்துக் கொண்டு இருப்பதாக! என்னவொரு நல்லெண்ணத்துடன் கூடிய அற்புதமான கற்பனை!
நல்லது என்று இருந்தால் கொஞ்சம் நாராசங்களும் இருக்கத் தானே செய்யும்?
பாய்மாருங்க மட்டும்தானா? திமுகவின் 200ரூ உபி யாரும் பொரிஞ்சு தள்ளலையா? #மோடிமீதுபயம் #மோடிமீதுவெறுப்பு
சந்திரயான் 2 ..முழுமையான வெற்றியடையக் கூடும் என்கிற நம்பிக்கையோடு நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பிரஸ் மீட் ..ரத்து செய்யப்படுவதாக அறிவித்த இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரிடம்...
NDTV-யை சேர்ந்த Pallava Bagla என்பவர் ..உரத்தக்குரலில் ...குற்றம் சாட்டும் தொனியில்..
''எங்கே உங்கள் தலைவர் டாக்டர் .சிவன் ? இது போன்ற சந்தர்ப்பங்களில்..ISRO தலைவர் தானே நேரில் வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் ? ஜூனியர் ஒருவரை ஏன் அனுப்பி இருக்கிறார் ?'' என்றெல்லாம் கேட்கிறார்!!
இதை கண்ட பொதுமக்கள் ...சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பொங்கிவிட்டார்கள்.
இதை அடுத்து..மன்னிப்பு கேட்டிருக்கிறார் Pallava bagla. வழக்கம் போல..ராஜ்தீப் சர்தேசாய், பிரணாய் ராய் ஆகியோர்....''NDTV-யை சேர்ந்த Pallava..அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை சிறப்பான முறையில் செய்தியாக்கி தருவது, அறிவியல் கட்டுரைகள், புத்தகங்கள் என்று மிகப் பிரபலமான அறிவியல் ஊடகவியலாளர். உலக அளவில் பல விருதுகளை வாங்கி இருப்பவர்'' என்றெல்லாம் அவருக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறார்கள்.
அறிவியல் & சோதனைகள் குறித்து அறிந்த அவ்வளவு பெரிய வல்லுநர் எனில்..பிரஸ் மீட்டில் இவ்வாறு அபத்தமாகவும், வரம்பு மீறியும் கேள்வி கேட்டிருக்கமாட்டார். நடந்து கொண்டிருக்கவும் மாட்டார்.
வரைமுறையற்ற மோடி வெறுப்பு என்னும் அரசியல் நோய் ...அறிவியல் அறிவையும் மழுங்கடிக்கிறது என்பதே உண்மை!
NDTVயின் பல்லவ பாக்லா நாய் குரைக்கிற மாதிரி அதட்டிக் கேள்வி கேட்பதை இந்த வீடியோவில் 2 நி. 46 நொடியில் இருந்து கேட்கலாம்!
பாவம் புதிய தலைமுறை! தமிழக சேனல்கள் யோக்கியதைக்கு, NDTV மாதிரிக் காங்கிரசின் காசில் கொழுத்து வளர்ந்த சேனல் நிருபர் மாதிரியெல்லாம் அதட்டிக் கேட்க முடியாது!
பம்மிப் பம்மி, பொன்ராஜ் மாதிரியானவரிடம் தான் கேள்வி கேட்க முடியும் போல!
மீண்டும் சந்திப்போம்.




