எங்கள்Blog ஸ்ரீராம் பலவருடங்களுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியைப் பற்றி எழுதாமல் ஒருமாதம் இருக்க முடியுமா என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்ததையும், சுமார் 10 வருடங்களுக்கு முன்னாலேயே அப்படி என்னால் இருக்கமுடியாதென்று பதில் சொன்னதை சமீபத்தில் பகிர்ந்திருந்தேன். சொன்னது சரிதான் என்பதைக் காங்கிரஸ் கட்சிக்குள் சமீபகாலமாக நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கூத்தும் நிரூபித்துக் கொண்டே வருகிறது! இன்றைய கூத்து நாயகன் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான் நவ்ஜோத் சிங் சிது! இந்தக் கிறுக்கன் பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக ட்வீட்டரில் கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். தனக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவையில் ஒதுக்கப்பட்ட துறையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமலேயே ஒருமாத காலம் ஓட்டிவிட்டு, மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கொஞ்சம் கடுமையாகச் சொல்லவும் இந்த twitter ராஜினாமா கூத்து என்றால். அதற்கும் பிஜேபி தான் பழிசுமக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகையில் நியாயம்?
நவ்ஜோத் சிங் சிது பஞ்சாப் அமைச்சராக இருந்து அப்படி என்ன சாதித்துக் கிழித்துவிட்டார்? அவருடைய மனைவிக்கு அம்ருதசரஸ் தொகுதியில் போட்டியிட மாநில முதலமைச்சர் குறுக்கேவிழுந்து தடுத்துவிட்டார் என்கிற கோபத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா பொறுப்பைக் கூட ஏற்காமல் சண்டித் தனம் செய்துகொண்டிருந்தது ஊரறிந்த ரகசியம் தான்! The rift between Chief Minister Capt Amarinder Singh and his Cabinet colleague Navjot Singh Sidhu is set to deepen further as another Congress leader from the latter’s Amritsar (East) constituency Dinesh Bassi today took charge as Chairman of Amritsar Improvement Trust (AIT). Bassi is now seen as parallel power centre or alternative to Sidhu in the Assembly segment என நேற்று நடந்த இந்த விஷயம்தான் இன்றைக்கு ட்வீட்டரில் ராஜினாமா நாடகம் நடத்துகிற அளவுக்கு கொண்டு போயிருக்கிறது என்கிறது ட்ரிபியூன் தளச் செய்தி.
இந்த தேசத்தில் ஜனநாயகம் இந்த அளவுக்குச் சீரழிந்து, ஆ!ராசா தயாநிதி மாறன் TR பாலு ஜெகத் ரட்சகன் பானாசீனா கமல்நாத் ஷீலா தீட்சித் அசோக் கெலாட் ராபர்ட் வாத்ரா ராகுல் காண்டி சோனியா G போன்ற ஊழல் குப்பை கூளங்களில் மட்டுமே சிக்கித் தவிக்க வேண்டுமா? அதற்குக் காங்கிரஸ் கட்சி என ஒன்று இல்லாமல் போவதே நாட்டுக்கும் ஜனநாயக நெறிகளுக்கும் மிகமிக நல்லது. அவ்யோ, காங்கிரசும் இல்லாமல் போய்விட்டால் பிஜேபி அங்குசம் இல்லாத யானை போலாகிவிடுமே என்றெல்லாம் அச்சப்படவோ நீலிக்கண்ணீர் வடிக்கவோ அவசியமில்லை.
மகாத்மா காந்தி இருந்த, நாட்டு விடுதலைக்காகப் போராடிய தியாகிகள் செந்நீரால் வளர்த்த காங்கிரஸ் அல்ல இன்றைக்கு இருப்பது!
குறைகள் சொல்லலாம்தான், ஒரிஜினல் காந்தியோடு பழகியும் கூட காந்தீயவாதியாக இல்லாத கற்பனாவாதி நேரு காலத்துக் காங்கிரஸ் அல்ல இன்றைக்கிருப்பது!
பூனைக்குப் பிறந்த புலியா? அல்லது புலிவேஷம் போட்ட நரியா? எதுவென்று இன்றைக்கும் சரியாக அனுமானிக்க முடியாத இந்திரா தன்னுடைய விருப்பப்படி ஆமாம்சாமி என்று தலையாட்டுகிற பொம்மைகளாக ஆட்டுவித்தாரே, அந்த நாளைய காங்கிரஸ் கூட அல்ல இன்றைக்கிருப்பது!
ராஜீவ் காண்டி, தன்னுடைய இத்தாலியக் காதல்மனைவியும், அவரது உறவினர்களும் சேர்ந்து ஆயுதபேரம் இன்னபிற விஷயங்களில் ஊழல் செய்ததைக் கண்டும் காணாமல் இருந்த கையாலாகாத காங்கிரசாகக் கூட அல்ல இன்று இருப்பது!
திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்து, கிழவர் சீதாராம் கேசரி, ஆந்திர சண்டியர் YS ராஜசேகர ரெட்டி முதலானவர்கள் துணையோடு, போட்டியை ஒழித்துவிட்டுக் காரியமானதும் அவர்களையும் கழற்றிவிட்டு , கட்சித் தலைமைப் பொறுப்பை உடும்புபோல 19 ஆண்டுகள் விடாமல் பிடித்து வைத்திருந்த சோனியா G, வஞ்சகத்தில், பேராசையில் உருவாக்கி வைத்திருக்கும் ஊழல்கூட்டம் மட்டுமே இன்றைக்கு இருப்பது!
இப்படி ஒரு கூட்டம் இல்லாமலே போவது நாட்டுக்கு மிகவும் நல்லது என்பதைத் தான் 2009 முதலே தொடர்ந்து சொல்லி வருகிறேன்! இனியும் சொல்வேன்!
மீண்டும் சந்திப்போம்.

>>> இப்படி ஒரு கூட்டம் இல்லாமலே போவது நாட்டுக்கு மிகவும் நல்லது.. <<<
ReplyDeleteசீக்கிரம் நடக்கட்டும்...
அப்படி நடந்தேற வேண்டும் என்பது எனது பிரார்த்தனை துரை செல்வராஜூ சார்!
Deleteஇரண்டு கட்சி ஜனநாயகம் எப்போதும் நாட்டுக்கு நல்லது. இந்தியாவில் காங்கிரஸ் அல்லது பா ஜ க தான் தற்சமயம் நாடறிந்த இரண்டு கட்சிகள். காங்கிரசுக்கு ஒரு mature, sane தலைவர், ஊழல் கறை படியாதவராக கிடைத்தால் நல்லது. நாடெங்கிலும் ஒரே கட்சி பெரும்பான்மை ஆட்சி என்று வந்தால், ஆளும் கட்சி தவறு செய்யும் இடங்களில் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் போகும். அது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் childish போக்குக் கொண்டவராக உள்ளார். அவருக்கு நல்ல வழியை எடுத்துச் சொல்லக்கூடிய மன்மோகன்சிங் போன்ற தலைவர்கள் கூட ஏனோ மௌனம் சாதிக்கிறார்கள். அல்லது மௌனியாக்கப்பட்டுள்ளார்கள். விதி வலியது.
ReplyDeleteகௌதமன் சார்! மேலோட்டமாகப் பார்க்கையில் நீங்கள் சொல்வது சரிதான்! ஆனால் தேர்தல் ஜனநாயகம், குடியரசு என்று தொடங்கி இந்த எழுபது ஆண்டுகளில் இந்திய அனுபவம் என்ன? மாநிலங்கள் தோறும் பத்து முப்பது உதிரிக் கட்சிகள் (பெரும்பாலானவை வரி ஏய்ப்புச் செய்வதற்காகவே, பணம் பார்ப்பதற்காகவே நடத்தப்படுகிற கட்சிகள்) தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்றவையே 965,அங்கீகாரம் பெறாத அமைப்புக்கள் சேர்ந்தால் பல ஆயிரம் என்றாக்கிவைத்ததில் காங்கிரசின் பங்கு எவ்வளவு மகத்தானது என்பதையும் பார்க்க வேண்டாமா?
Delete//காங்கிரசுக்கு ஒரு mature, sane தலைவர், ஊழல் கறை படியாதவராக கிடைத்தால் நல்லது// என்கிறீர்கள். நடக்கிற காரியம் தானா என்று கொஞ்சம் சொல்லுங்களேன்! அதனால் தான் ஒரிஜினல் காந்தி முதல் இந்திரா வரை காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைக் கொஞ்சம் கோடிகாட்டிவிட்டு, சோனியா காங்கிரஸ் எப்படி வஞ்சகம், பேராசை, ஊழல் இவற்றால் ஆனது என்பதையும் சொன்னேன். ஐமுகூட்டணி வெர்ஷன் ஒன்று மற்றும் இரண்டு அனுபவம் நமக்கு எதையுமே கற்றுத் தரவில்லையா என்ன?
பிஜேபிக்கு மாற்றை காலப்போக்கில் அவர்களே உருவாக்குவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்போதிருக்கிற காங்கிரஸ் அந்த மாற்றாக ஒருபோதும் வரமுடியாது. இந்த விஷயத்தில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கேலியாகச் சொன்னாரோ, பிஜேபி மீது எரிச்சலில் சொன்னாரோ தெரியாது, இத்தாலியப்பெண்மணி மற்றும் வாரிசுகளை இத்தாலிக்கே மூட்டைகட்டி அனுப்பி வைத்த பிறகு காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற மமதா பானெர்ஜியையே காங்கிரசுக்குத் தலைவராக்கி விடலாம் NCP கட்சியை மறுப்பை காங்கிரசில் இணைத்து விடலாம் என்றார். சாத்தியப்படுமா என்று கற்பனையாவது செய்ய முடிகிறதா?
//இப்படி ஒரு கூட்டம் இல்லாமலே போவது நாட்டுக்கு மிகவும் நல்லது..//
ReplyDeleteஏதோ பிடி சாபம் போட்ட மாதிரி சொல்கிறீர்களே!
காங்கிரஸூம் காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்கிறவர்களும் என்று தான் சாபம் கணக்கில் வரும் என்று நினைக்கிறேன். தென் மாநிலங்களில் கூட்டணியின் பலம் தான் காங்கிரஸின் பலம்
என்பது ஊரரிறிந்த உண்மை.
அப்போ தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்? சாபம் விடுமுன் என்னவெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு, பாருங்கள்!
ஜீவி சார்! நீங்கள் எழுப்பியிருக்கிற கேள்விகளுக்கு ஏற்கெனெவே பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொன்னால் மனவருத்தம்தான் அதிகமாகும்.
Deleteஇங்கே நீங்கள் புதிதாகச் சொல்லியிருப்பது //சாபம் விடுகிற மாதிரி// என்பதில் உண்மையில்லை. சோனியாகாங்கிரஸ் இந்த நாட்டைப் பிடித்த சாபம் என்றுதான் தெளிவாக மறுபடியும் சொல்கிறேன். நான் பேசிக் கொண்டிருப்பது சாப விமோசனம் பற்றி. .
இன்னொன்றும் சொல்லியாக வேண்டும்! வாஜ்பாய் காலத்தில் பிஜேபி தனது பெரும்பான்மையை ஹிந்தி பெல்டில் ருந்து மட்டுமே பெற்றது மாதிரியான நிலைமை நிச்சயமாக இப்போதில்லை. ஆனாலும் அப்படி ஒரு மாயத்தோற்றம் இருப்பதை உடைப்பதில் பிஜேபி கொஞ்சம் அவசரப்படுகிறார்கள் என்று மட்டுமே நினைக்கிறேன்.
Delete//இப்போதும் சொன்னால் மனவருத்தம்தான் அதிகமாகும்.//
ReplyDeleteநிச்சயம் இருக்காது. ஏனென்றால் நான் கருத்துக்களைத் தான் முன் வைக்கிறேன்.
தனி நபர்களை அல்ல. காங்கிரஸ் ஏன் வேண்டும் என்பதற்கு நான் சொல்லும் காரணங்களை
நீங்கள் எதிர்கொள்ளாமல் தனி நபர்களின் கோணல் மாணல்களுக்குப் போய் விடுவதால் தான்
நாம் தொடர்ந்து பேச முடியமல் போய் விடுகிறது.
சின்ன விஷயம். ஜனநாயக நாட்டில் ஆளும் பெரும்பான்மைக் கட்சிக்கு கடுகளவேனும் பலமுள்ள
ஒரு எதிர்கட்சி வேண்டும். அப்படியிருந்தால் தான் ஆளும் கட்சியாலேயே 'ஜனநாயகப்
போர்வை'யைப் போர்த்திக் கொண்டாவது செயல்பட முடியும்.. Am I correct? இதற்கு
பதில் சொல்லுங்கள். மேல் கொண்டு தொடரலாம்.
நேரு காலத்தைய நாடாளுமன்றத்தையே கொஞ்சம் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால், அங்கே வலுவான எதிர்க்கட்சி என்பது இருந்ததே இல்லை! ஆனால் நேர்மையான தனிமனிதர்கள் தான் நேருவையே அடக்கும் அளவுக்கு அங்குசமும் வைத்திருந்தார்கள் ஜீவி சார்! கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், சுதந்திராக் கட்சி என்று உறுப்பினர் எண்ணிக்கை என்னவோ கொஞ்சம்தான், ஆனால் நேர்மையான, சுயசிந்தனை உள்ள தனிமனிதர்கள் அவற்றில் இருந்தார்கள்.தனிமனிதர்கள், அவர்கள் தலைவர்களாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர்களுடைய கோணல் மாணல்களைப் பேசாமல் தவிர்க்கவே முடியாது.
Deleteசோனியா பிராண்டு ஊழல் தனிமனித .கோணல் என்று விட்டுவிட முடியுமா? வளர்ச்சியோ சிதைவோ ஒரு சிறு புள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது , இங்கே தனிமனித கோணல்மாணல்களில் காங்கிரஸ் கட்சி அழுகிப்புரையோடிப்போய் கிடப்பதை புரிந்து கொள்ள முடியவில்லையானால் இதே பக்கங்களில் change management என்ற தலைப்பில் முன்பு எழுதிய பதிவுகள் கொஞ்சம் உதவலாம்!
இது கரெக்ட். அங்குசம் வைத்திருந்திருந்தார்கள். ஆனால் அவர்களின் விமரிசனம் சமூக நலன் சார்ந்து தான் இருந்தனவே தவிர நேருவை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தவில்லை.
Deleteபண்டித நேரு என்கிற பொழுது எனக்கு தேசத்தின் கோயில் என்று அவர் வர்ணித்த பக்ராநங்கல் அணை நினைவுக்கு வருகிறது.
ஆனால் நேரு என்றாலே உங்களுக்கு வேறு சில நினைவுக்கு வருகின்றன. அது தான் உங்கள் விமர்சனத்தை கூர் மழுங்கி திசை திருப்பி விடுகின்றன.
மக்களின் நலன் சார்ந்து விமர்சனங்களை முன் வைக்கும் பொழுது தான் அவற்றின் மதிப்பு கூடும் என்பது என் அபிப்ராயம். மற்றவை அந்த நேரத்து நையாண்டியோடு மறக்கப்பட்டு விடும்.
அப்படியான நாட்டு நலன் சார்ந்து, மக்கள் நலன் சார்ந்து மற்ற கட்சியினரையும் நீங்கள்
Deleteவிமர்சனங்களுக்கு உள்ளாக்கும் பொழுது தான் எந்தவித சார்பற்ற நிலையும் உங்கள்
விமர்சனங்களில் வெளிப்படும். அதெல்லாம் என் வேலையில்லை என்றால் இது மட்டும்
தான் உங்கள் வேலையா என்ற கேள்வி எழும்.