Friday, July 12, 2019

விளையாட்டுப் பிள்ளைகளின் கையில் காங்கிரஸ்!

ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் என்று இங்கே குறிப்பிட்ட போது, அதைக் கடுமையாக ஆட்சேபித்தது எழுத்தாளர் ஜீவி மட்டும்தான்! ஆட்சேபங்களையும் தாண்டி, ராகுல் காண்டி வரும் நாட்களில் நரேந்திர மோடிக்கு சரியான மாற்றாகவும் வளர்வார் என்று நம்பிக்கை தெரிவித்ததும் கூட அவர் ஒருவர் தான்! கர்நாடகா, கோவா இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே அல்ல, மத்தியப் பிரகேசம், ஹரியானா, குஜராத், ஜார்க்கண்ட்,  என்று பலமாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி என்னமாதிரி வெடித்துக் கிளம்பப் போகிறது என்பது எவருக்குமே புரியவில்லை. எல்லாத்துக்கும் பிஜேபி தான் காரணம் என்று மூன்று வார்த்தைகளில் அடக்கி விட முடியுமா?



காங்கிரஸ்கட்சியின் காசுக்கார வக்கீல் கபில் சிபல், தன் மனைவியுடன் நடத்துகிற திரங்கா டிவியில் நேற்று கரண் தாப்பர், நேற்று இரவு நடத்திய விவாதம் இது. 41 நிமிடம் தான். ஒரே ஒருவர் மட்டும்தான் பிஜேபி சார்புள்ளவர். மற்றவர்களெல்லாம் காங். ஆதரவாளர்கள். கொஞ்சம் கவனித்துக் கேட்க வேண்டிய விவாதம் இது. ராகுல் காண்டி ராஜினாமா செய்து ஆறுவாரங்கள் ஓடிவிட்டன. ராஜினாமா முடிவை திரும்பப் பெறுமாறு கெஞ்சிக் கொண்டிருந்ததைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாதவர்களை மட்டுமே வைத்திருக்கிற காங்கிரஸ் காரிய கமிட்டி என்ன முடிவெடுத்து விட முடியும்? 19 வருடங்கள் கட்சித்தலைமையை  வெற்றிகரமாகப் பிடித்து வைத்திருந்த சோனியா இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? 15 வருடங்களாக நாடாளுமன்ற  உறுப்பினராக பின்சீட்டில் வேடிக்கை மட்டுமே  பார்த்துக் கொண்டிருந்த  ராகுல் காண்டி, கட்சிக்குத் தலைமை தாங்கும் அளவுக்குத் தயாராகிவிட்டாரா என்பதுகூடத் தெரியாமல் தலைவராக்கப்பட்டு 2 வருடங்கள் ஆன பின்னால் சந்தித்த தேர்தல் தோல்விக்கு ராஜினாமா ஒன்று மட்டுமேதான் அவருக்கிருந்த  ஆப்ஷனா? அவலை நினைத்து வெறும் உரலை இடித்த கதையாகிப் போனது மட்டும் தான் மிச்சம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லையா?  கொஞ்சம் விவாதத்தைக் கவனியுங்கள்! 

அண்ணன் ராஜினாமாவை ஆதரித்து, அவருக்கு மட்டுமே அதற்கான தைரியம் இருந்தது என்று பிரியங்கா வாத்ரா சொன்னதையும் கொஞ்சம் சேர்த்துப் பார்த்தீர்களேயானால்  அனுபவமோ திறமையோ இல்லாத இந்த  விளையாட்டுப் பிள்ளைகளின் கைகளில் காங்கிரஸ் கட்சி  சிக்கிக் கொண்டு தனது எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறது என்பது நன்றாகவே புரியவரும். 

பாவம்! கர்நாடக சபாநாயகர் தன்னை உச்சநீதிமன்றம் விரைந்து முடிவெடுக்கும்படி வலியுறுத்தமுடியாது என்று அரசியல் சாசனக் காவலராகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் 400 காங்கிரஸ் ஆசாமிகள் ஒரு இன்டெர்வென்ஷன் பெட்டிஷன் தாக்கல் செய்து, ராஜினாமா செய்வதே கூடக்  கட்சித்தாவல்தான், அதனால் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று சொல்லியிருப்பது காங்கிரஸ் கட்சியின் gameplan என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஆனால் உச்சநீதிமன்றம் சபாநாயகர் முடிவெடுக்க வருகிற செவ்வாய் வரை அவகாசம் கொடுத்து, அதுவரை status quo என்று இப்போதுள்ள நிலையிலேயே வைத்திருக்க உத்தரவிட்டு இன்றைய விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது. கொறடா உத்தரவு  தகுதிநீக்கம் என்று எதையும் செய்ய முடியாது என்பதில் காங்கிரசின் திட்டம் தோல்வியடைந்திருக்கிறது.  
  
Fractured Verdict ஆகக்   குழப்பமாக  வாக்களித்த கர்நாடக ஜனங்கள், கடந்த 20 வருட அனுபவத்தில் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் தலையிலேயே பெரும் சுமையாக  விழுந்திருக்கிறது என்பது இந்தத் தேர்தல் முறையின் மிகப்பெரிய ஓட்டை! இந்த ஓட்டையைப் பயன் படுத்திக் கொண்டு, இதே உறுப்பினர்களை வைத்து  பிஜேபி ஆட்சியமைக்க முயலுமானால் அதன் பின்விளைவுகளை நீண்டகாலம் சுமக்க நேரிடும்.

மீண்டும் சந்திப்போம்           

6 comments:

  1. ராகுல் காந்தி ராஜினாமாவை திரும்பப் பெறும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பானேன்?
    அந்த கேப்பில் மத்திய அரசின் போற்றத் தகுந்த உள்நாடு நடவடிக்கைகளைப் பற்றி எழுதுங்களேன். நாங்களும் தெரியாதவைகளைத் தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! ராகுல் காண்டி ராஜினாமாவோ திரும்பப்பெறுவதோ இந்தப்பதிவின் முக்கியமான மையப்புள்ளி அல்ல. பேசுவதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருப்பது உண்மைதான்! ஆனால் ஒரு விஷயம் பரபரப்பாக இருக்கிற சமயத்தில் தான் சில விஷயங்களைச் சொல்ல முடியும். இந்தப்பதிவில் நான் சுட்டிக் காட்ட வந்தது கரண் தாப்பருடனான விவாதம், அடுத்து கடைசிப் பாராவில் எழுதியிருக்கிற விஷயம் மட்டுமே!

      என்வரையில் காங்கிரசோ ராகுல் காண்டியோ முக்கியச் செய்தி அல்ல. அவர்களால் ஏற்படுகிற சேதங்களைப் பற்றி மட்டுமே என் கவலை, அவ்வளவுதான்!

      Delete
  2. இந்தப் பதிவு என்றல்ல. கடந்த சமீபத்திய பல பதிவுகளையும் உள்ளடக்கித் தான். இந்தப் பதிவின்
    ஆரம்ப வரிகள் கூட அதைப் பற்றி தான்.

    //மத்திய அரசின் போற்றத் தகுந்த உள்நாட்டு நடவடிக்கைகளைப் பற்றி எழுதுங்களேன். நாங்களும் தெரியாதவைகளைத் தெரிந்து கொள்கிறோம். //

    அது அல்லது இது. அது என்னவாவது ஆகட்டும். இதையாவது செய்யலாமில்லையா?
    ஆக்கபூர்வமான விஷயங்களிலாவது உங்கள் எனர்ஜி படியும் என்பதினால்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் பிஜேபி கட்சிக்காரனோ ஆதரவாளனோ இல்லை. அதனால் //மத்திய அரசின் போற்றத் தகுந்த உள்நாட்டு நடவடிக்கைகளைப் பற்றி// எழுத வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது சொல்லுங்கள்! போகிற போக்கைப் பார்த்தால் நீங்களே பிஜேபி கட்சியில் சேர்த்து விட்டு விடுவீர்கள் போல இருக்கிறதே!: -)))

      Delete
  3. 1. வராகுல் காண்டி ராஜினாமா நாடகம் என்று இங்கே குறிப்பிட்ட போது, அதைக் கடுமையாக ஆட்சேபித்தது எழுத்தாளர் ஜீவி மட்டும்தான்! ஆட்சேபங்களையும் தாண்டி, ராகுல் காண்டி வரும் நாட்களில் நரேந்திர மோடிக்கு சரியான மாற்றாகவும் வளர்வார் என்று நம்பிக்கை தெரிவித்ததும் கூட அவர் ஒருவர் தான்

    2. போகிற போக்கைப் பார்த்தால் நீங்களே பிஜேபி கட்சியில் சேர்த்து விட்டு விடுவீர்கள் போல இருக்கிறதே!: -)))

    மூன்றாவது என்ன சொல்லப் போகிறீர்களோ, தெரியவில்லை! :))

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! இதற்கு அடுத்த பதிவில் அதையும் சொல்லியிருக்கிறேனே! :-)))

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)