இங்கே தமிழகத்தில் காஷ்மீர் பிரச்சினை எங்கே, எப்படி ஒரு பிரச்சினையாக வளர்ந்தது என்பதை பற்றிக் கவலைப் படுகிறவர்கள், உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் எத்தனைபேர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் காஷ்மீர் தொடர்ந்து ஒருபிரச்சினையாகவே வளர்க்கப் பட்டு, மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா போல இந்திய அரசியலில் வெகுதாராளமாக அனுபவித்தவர்கள் கூட, இன்று ஆர்டிகிள் 370 இல்லையென்றால் காஷ்மீரும் இந்தியாவில் இல்லை என்று தைரியமாகச் சொல்ல முடிகிற அரசியல் கோமாளித்தனத்தைப் பார்க்க முடிகிறது என்றால், காஷ்மீர் எப்படி ஒரு பிரச்சினையாக்கப்பட்டது என்பதை இப்போதாவது தெரிந்துகொள்வதில் தவறென்ன?
.
ஆர்டிகிள் 370 தற்காலிகமானதுதான் என்று அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெளிவு படச் சொன்னதை வைத்து கரண் தாப்பர் இந்த விவாதத்தை ரத்தன் சாரதா (எழுத்தாளர், நூலாசிரியர், RSS ஆதரவாளர்) ம்ருதுளா முகர்ஜி (சரித்திர பேராசிரியர், நேரு நினைவு மியூசியம்&நூலக முன்னாள் இயக்குனர், காங்கிரஸ் ஆதரவாளர்) இருவருடன் இந்த 29 நிமிட வீடியோவில் நடத்துகிறார். நேரு ஆதரவாளரான ம்ருதுளா முகர்ஜி, நேரு மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலெதுவும் சொல்லாமல் மழுப்புகிறார், கரண் தாப்பர் அடிக்கடி இடைமறித்து விவாதத்தை நீர்த்துப்போகச் செய்கிறார் என்பதிலிருந்தே, நேருவுக்கு நியாயம் கற்பிக்க முயற்சித்தது பலிக்கவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்து விட்டது. அமித் ஷா நாடாளுமன்றத்தில் நேருவைக் குற்றம் சாட்டிப் பேசியது சரிதான் போல! இந்த HTN News Tiranga TV இவைகளின் உரிமையாளர் காங்கிரசின் கபில் சிபல் என்பது தெரிந்தே தான் மாற்றுக் கருத்துக்காக இங்கே பயன்படுத்துகிறேன்! பர்க்கா தத்துக்கு மறுவாழ்வு கொடுத்துக் கொண்டிருப்பதும் கூட இதே ஊடகம் தான்!
முகநூலில் CK ராமன் என்பவர் இந்தச் செய்தியைத்தொட்டு வேறு சிலவிஷயங்களையும் சொல்கிறார்.
கபில் சிபல் மோடி அரசுக்கு எதிராக இங்கே கக்கிக் கொண்டிருந்த விஷயங்களுக்கு ஆகாரமாகக் காட்டிக் கொண்டிருந்த லண்டன் TNN (standing for Tri Colour News Network Ltd) கடையை மூடி விட்டதாம்! Offline mode உரிமையாளர்கள் வேறுதொழிலுக்குப் போய் விட்டார்களாம்!
கபில் சிபலுக்கு இந்தியாவில் Tiranga TV என்றொரு சேனல் இருக்கிறது Tiranga என்றால் Tri Colour மூவண்ணம் TNN, Tiranga இரண்டும் தற்செயலானது தானா? சந்தேகம் தான்!
And now, two weeks after the vote count of Indian general election - the owner of the same UK-based news portal ( Tri Colour News Network Ltd) turned to an unusual domain, starting an EROTIC body-massage service.
( So much for all the news channels and media houses who gave importance to the so called Kapil Sibal exposè - today when Sibal stands exposed (literally) - there is silence in the same media houses. ) என்று முடித்திருக்கிறார்
என்னதான் காசுக்கு கூவுகிறவராய் இருந்தாலும்கூட கபில் சிபலாய் இருப்பதுமே கஷ்டம் தான் போல!
அதைவிட தாத்தன் நேருவின் பெயரைக்காப்பாற்றுவது ரொம்பவே கடினம் என்று கரண் தாப்பர் நிரூபித்திருக்கிறார்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment