பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும் 10% இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு சிலகாலத்துக்கு முன் கொண்டுவந்த மசோதா சட்டமான பின்னாலும் இன்னும் அதை ஒரு விவாதப்பொருளாக்கிக் கொண்டு சமூகநீதி, சமநீதி என்று குழப்புகிற, குழம்புகிற இருதரப்பினருக்காகவும்! தமிழகத்தில் மட்டும் இது மாநிலத்தில் மட்டும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற மாநிலக்கட்சிகளுக்கும், தேசியக் கட்சிகளுக்குமான விவாதம் என்றாகிப்போன வேடிக்கையைப் பார்க்க வேண்டாமா? முற்பட்ட வகுப்பு என்றால் பார்ப்பனர்கள் மட்டுமே இல்லை, 82 வகுப்புகள் இதன் கீழ் வருகிறார்கள் என்பதையே இங்குள்ள திராவிடப் புரட்டுகள் மறந்து அல்ல , மறைத்தே பேசுகிறார்கள்! கொஞ்சம் கவனித்துக் கேட்கவேண்டிய விவாதம்!
இங்கே தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு என்பதே மொத்த ஒதுக்கீடுகள் 50% மேல் இருக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தீர்ப்புக்கு முரணானது, இதுகுறித்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இதை வழக்கறிஞர் விஜயன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப்போன போது அவரைத் தாக்கியது, 1994 இல் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையின் கீழ் கொண்டுவந்து, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த முடியாததாக்கியது எல்லாமே ஜெயலலிதா அரசில் தான்! சமூக நீதிகாத்த வீராங்கனை என்று வீரமணி பட்டம் கொடுத்ததும் அதற்காகத் தான்! அப்போது பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவ் இதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. உச்சநீதிமன்றம் நிலுவையில் இருக்கிற வழக்கை எப்போது விழிப்பு வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் திராவிடங்கள் இந்த 10% இடஒதுக்கீட்டுக்கு 8 லட்ச ரூபாய் வருமான வரம்பு பற்றிக் கேள்வி எழுப்புகிறார்களே, அதுகூட க்ரீமி லேயர் பிரச்சினை வந்தபோது கொண்டுவந்தது யார் என்பதையோ, அதே வரம்புதான் இதற்கும் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை மறந்துபோய்க்கூடப் பேச மாட்டார்கள்! ஏனென்றால் அவர்களெல்லாம் சுத்தமான #பெரியார்மண் அது எப்படிப்பட்டதென்றால் ......
நல்லதும் கெட்டதும் இங்கே தமிழ்சினிமா நடிகர்களிடம் இருந்தே தான் வரவேண்டும் என்பதை ஒரு வியாதியாகவே வளர்த்து விட்டிருக்கிறோம் என்பதில் அவர்களுடைய தவறு என்பதை விட நம்முடைய தவறு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் அவமானமாக இருந்தாலும், அதைச் செய்யாமல் விடுவது இன்னும் பெரிய தவறாகிப் போய்விடும் என்பதைப் பதிவு செய்தே ஆகவேண்டும்!
மாரிதாஸ் இங்கே சில விஷயங்களைப் பளீரென்று கேட்கிறார். ஒரு நடிகனுக்கு கொடுக்கும் கவனத்தில் ஒரு சிறுபகுதியாவது மாரிதாஸ் போன்றவர்களுக்குக் கொடுக்கிறோமா?
குஷ்புவுக்குக் கோயில் கட்டிய இனமடா நாங்கள்! என்ன ஒரு ஆரியத் திமிர் உனக்கு?!
புரட்சிவீரன் விசய் சோசப்பு நீட்டும் ஒரு விரலில் 'மெர்சல்' ஆகி, அந்த அவனின் 'ஒற்றை விரல்' ஆட்டத்தில் சேகுவேரா, காஸ்ட்ரோ, மாவோ எல்லாரையும் தரிசிப்பவனடா நாங்கள்!
கைபர் கணவாய் வழி வந்த உனக்குப் புரியுமா, விசய் சோசப்பு வெள்ளித் திரையில் வீசி எறிந்த இலவச மிக்சியைத் திரையில் கண்டவுடன், வீட்டு மிக்சியைத் தெருவில் வீசிய எங்கள் பில்லைகலின் பகுத்தறிவு?
அக்ரகார வாசியே நீ அறியமாட்டாய் ஐட்ரோ கார்பன் எனும் நச்சுவாயுவின் வீர்யத்தை - எமது அறிவியல் மேதை மயில்சாமியைக் கேட்டுப்பார், கொங்கு நாடு தந்த சிங்கம் சூர்யாவைக் கேட்டுப்பார், 'ஆட்டு' ஆர்வலர் அமீரைக் கேட்டுப்பார்... ஐட்ரோகார்பன் தமிழினத்தை அழிக்க வந்த ஆரியவாயு எனப் புரியவைப்பார்கள்!
உனது தர்ப்பைப்புல் புத்தி குயுக்தியாக வேலை செய்யும் - 'ஒரு அறிவியல் பேராசிரியரை ஐட்ரோ கார்பனை விளக்கச் சொல்லி...'
போதும் நிறுத்து உன் ஆரிய சூழ்ச்சியை! சீமானை விடவா விஞ்ஞானி வேண்டும்! டேனியலை விடவா ஆய்வறிஞர் வேண்டும்? முத்தரசனை விடவா முற்றிய ஞானி வேண்டும்?
நீ பி.எச்டி படித்த பேராசிரியர் என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு 'தமிழ் இனப் பகைவரை' க் கொண்டு வந்து சொல்ல வைப்பாய்...
அறிவுடைமை என்பதே ஆரிய சூழ்ச்சி! இதை அறிந்தே எமது ஆசான்கள் வழி காட்டலில் மயில்சாமி முதல் மண்ணாங்கட்டி வரை, பட்ஜெட் முதல் ராக்கெட் வரை பதிலடி கொடுக்க சிந்தனைப் போராலிகலைக் கொம்பு சீவி வைத்துள்ளோம்!
நாளை வருவாள்கள் பார் எமது வீரத்தமிலச்சிகல் 'தமில் வால்க' முலக்கத்துடன்!
உனது ஆரிய முகமூடியைக் கிழித்தெறிய...
அறிவு, விவரம், படிப்பு , விவாதம் என்றெல்லாம் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு சதிக்கும் எதிரடியாக...
இந்த அளவுக்கு நையாண்டி செய்யப்படுகிற அளவுக்கு இணைய வெட்டிப் போராளிகள் கும்பலாகக் குறுகி விடுவோமோ என்ற அச்சத்தைத் தருகிற அளவுக்கு.........! ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு இன்னமும் புரிபடாமல் உறுத்திக் கொண்டே இருக்கிறது. சூர்யாவின் திடீர்க் கோபாவேசத்துக்கு நிஜமாக என்ன காரணம் இருக்க முடியும்? இந்த அறக்கட்டளைகள் எல்லாம் வருமானவரித்துறையின் லென்ஸின் கீழே! முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அறக்கட்டளை அந்தஸ்து ரத்து! 47% வரிவிதிப்பு என்ற அறிவிப்பு காரணமாக இருக்குமோ?
அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா இன்றைக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக வரைந்த கார்டூன் இது. கர்நாடகக் குழப்பங்கள் பற்றி மதியமே இன்னொரு வலைப்பக்கத்தில் எழுதிய பிறகே கண்ணில் பட்டது. நாளை என்ன கூத்துடன் ஆரம்பமாகிறது என்பது தெளிவான பிறகு விரிவாகப் பார்க்கலாம். நம்மூரில் கூத்தடிப்பதில் எவன் நடிகன் எவன் அரசியல்வாதி என்பதே பெரும்பாலான சமயங்களில் புரிய மாட்டேன் என்கிறதே! என்ன செய்ய??
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment