கண்டனூர் ப(ழனியப்பன்) சிதம்பரம் செட்டியாருக்குத் தன்னை விட வேறெவருக்கும் இங்கே பொருளாதாரம் தெரியாது என்ற மிதப்பு நிறையவே உண்டு. பட்ஜெட் உரை மீது மாநிலங்களவையில் பேசும்போது தன்னுடைய மேதைமையைக் காட்டிக் கொள்ள முயற்சித்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டதை எத்தனைபேர் பார்த்தீர்கள் என்று தெரியாது. முதலில் பானாசீனா பேசியது சுருக்கமாக 3 நிமிடம் தான்.
நான் பார்த்த முழு வீடியோ ஒன்றேமுக்கால் மணிநேரம் என்பதால் இங்கே முதலில் பகிரத் தயங்கினேன். இன்று ஒரு சுருக்கமான 18 நிமிட வீடியோ கிடைத்தது.
நிதியமைச்சர் பதில் சொன்னது மிகச் சுருக்கமாக 6 நிமிடம்
செட்டியார் வாயைக் கொடுத்து
வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சமா?
நான் பார்த்த முழு வீடியோ ஒன்றேமுக்கால் மணிநேரம் என்பதால் இங்கே முதலில் பகிரத் தயங்கினேன். இன்று ஒரு சுருக்கமான 18 நிமிட வீடியோ கிடைத்தது.
நிதியமைச்சர் பதிலளித்துப் பேசியதன் முழுக் காணொளி அரசியல் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் பட்ஜெட் விவாதம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பதிலுரை. முந்தைய காங்கிரஸ்காலத்து பட்ஜெட் பம்மாத்துகளுக்கும் இப்போது பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு என்னென்ன மாறுதல், வளர்ச்சி என்பதற்கும் உண்டான வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளவும் கூட இது உதவும்.
இது ஒரு லைவ் நிகழ்ச்சி. The Print தளத்தில் சேகர் குப்தா மேற்குவங்க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளம் MP இருவருடன் நுஸ்ரத் ஜஹான், மிமி சக்ரபர்தி.. உரையாடிக் கொண்டிருக்கிறார். நாளை, நிகழ்ச்சி முடிந்த பிறகு இதே லிங்கில் பார்க்க முடிகிறதா என்று ஒரு சோதனை முயற்சி.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment