Wednesday, July 3, 2019

நாற்காலிக்கு குடுமிப்பிடி சண்டை, போட்டி! வேறெங்கே? காங்கிரசில் தான்!

எங்கேயோ ஏதோ ஒரு நாற்காலி காலியாகிறதென்றால்கூட  காங்கிரசில் உடனடியாகக் குடுமிப்பிடி சண்டை, போட்டி ஆரம்பித்து விடும்! இந்த வரலாறு கூடத் தெரியாது என்றால் காங்கிரஸ் கட்சியில் ராகுல் ராஜினாமா நாடகத்துக்குப் பின் நடந்துகொண்டிருக்கும் கூத்துகளைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளலாமே!
  
  
NDTV சொல்கிறமாதிரி சுசீல் குமார் ஷிண்டே மல்லிகார்ஜுன கார்கே  இருவர் மட்டுமே போட்டியில் இல்லை. அசோக் கெலாட் உள்ளிட்டு வேறுசில பெயர்களும் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.


இந்தியா டுடே ராகுல் காண்டியின் sacks himself ட்ராமாவுக்குப் பிறகு யார் யார் என்ன சொன்னார்கள் என்பதை இந்த 25 நிமிட செய்தித் தொகுப்பில் சொல்கிறார்கள். ஆனால் இந்த நாடகத்துக்குப் பின்னாலும் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் முதலமைச்சர்களோ பெருந்தலைகளோ அடுத்து வரும் நாட்களில் ராஜினாமா செய்வார்களா, கிழடுதட்டிப் போன பெருந்தலைகள்  இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்களா என்கிற விடைதெரியாத கேள்வி   காங்கிரசைத் துரத்திக் கொண்டிருக்கிறது. பெரிய முதலாளி சோனியா என்ன பஞ்சாயத்து செய்யப்போகிறார் என்பது கூட இன்னமும் வெளியே தெரியாத மர்மமாக மட்டும் நீடிக்கிறது.

 இடைகாலத்தலைவரா? எனக்குத்தெரியாதே! 
என்கிறார் மோதிலால் வோரா 

1987களில் குரைக்கிற நாய்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று திமிராகப் பதில் சொன்ன  ராஜீவ் காண்டிக்கு, ராம்ஜேத் மலானி தினசரி 10 கேள்விகள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்கிற பழைய கதையைத் தெரிந்து கொள்ள இங்கே 


ராகுல் காண்டி படிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே வீக் என்பதாலோ என்னவோ அர்னாப் கோஸ்வாமி வெறும் ஐந்தே கேள்விகளை மட்டுமே முன்வைக்கிறார். அதில் முதலாவது:  

ராகுல் காண்டி நிஜமாகவே ராஜினாமா செய்து விட்டாரா? அல்லது முட்டாள்தனமான நாடகத்தின் முதல் அத்தியாயமா? 

உங்களில் எவருக்கேனும் விடை தெரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.
  

3 comments:

  1. எந்த எந்த விதங்களில் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் தேச ஒன்றுமைக்கும் ஏற்றது காங்கிரஸ் தலைமை?

    1. இவர்கள் வீம்புத்தனமாக 'அப்படித் தான் பேசுவேன்' என்ற தோரணையில் பொதுநிகழ்வுகளில்
    ப்ரஸ் மீட்டுகளில் இந்தியில் பேசுவதில்லை. அதனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது
    ஆங்கிலம் அறிந்த பெரும்பாலான இந்தியர்களுக்குப் புரிகிறது. இந்த விதத்தில் இவர்கள்
    வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைத்து செயல்பட தகுதி வாய்ந்தவர்களாகத் தெரிகிறார்கள்.

    2. வடக்குப் பிரதேசத்தைப் பொறுத்த மட்டில் இந்தியில் பேசும் பொழுது அங்கு அடித்தட்டு மக்கள்
    வரை நெருங்க முடியும் என்று தெரிந்திருந்தும் ஒரு மொழியை பகடைக் காயாக
    உபயோகப்படுத்த இவர்கள் விரும்புவதில்லை. அது வடக்கு--தெற்கு என்று தேச
    ஒருமைப்பாட்டை சிதைக்கும் என்று இவர்கள் இயல்பாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

    3. பரவலாக தேசம் பூராவும் தொண்டர்களைக் கொண்ட பரவலான கட்சி அமைப்பைக்
    கொண்டவர்கள். பொதுத்தேர்தல் போன்ற சாகச தேர்வுகளில் உள்ளார்ந்த சில விஷயங்கள்
    வெளிப்படாத சூழல் உண்டு. அதனால் ஒரு கட்சியின் பலத்தைத் தீர்மானிக்க அதுவே
    அளவுகோல் அல்ல. உண்மை நிலவரம் வேறு மாதிரியும் இருக்கும்.

    4. ஆளும் கட்சி - எதிர் கட்சி என்று எடுத்துக் கொண்டால் பாஜக - காங்கிரஸ் என்று நேர்-எதிராக
    இன்றைய நிலவரத்தில் இரு கட்சிகள் தாம் தெரிகின்றன. சில மாநிலங்களில் இந்த இரு
    கட்சிகளையும் விட பலம் வாயந்த கட்சிகள் இருப்பது உண்மை தான். அந்தந்த மானில அளவே
    அவற்றின் வீச்சு இருப்பதால், அகில இந்தியாவிற்கும் இவர்கள் தலைமை தாங்க முடியாத
    நிதர்சன உண்மைகள் இருக்கின்றன. அதனாலேயே இவர்கள் இந்த இரண்டு அ.இ.கட்சிகளை
    சார்ந்து செயல்பட வேண்டிய சூழல்கள் செயற்கையாக உருவாகியிருக்கின்றன.

    3. இந்த சூழலின் தேவை இல்லாது போகும் பொழுது, மாநில மக்கள் நாடாளுமன்றத்திற்கு என்றால் இந்த இரண்டில் ஒன்றையும், மாநிலத்திற்கு என்றால் மாநில கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யும் நிலை வரலாம்.

    4. இடதுசாரிகளைப் பொறுத்த மட்டில் அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கு நெருங்கி இருக்கிற இந்த இரண்டில் ஒன்றை ஆதரிக்கிற இப்போதைக்கான போக்கு உருவாகலாம். அவர்கள் பலம் பெறுகிற வாய்ப்பு இருக்கிற மாநிலங்களில் (இப்போதிருக்கிற நிலமை மாதிரி இல்லாமல்) மேலும் பலத்தைக் கூட்டலாம். அந்த வாய்ப்பு அ.இ.கட்சியான அவர்களையும் உள்ளடக்கிய மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கலாம்.









    ReplyDelete
    Replies
    1. மிகவும் பொறுமையாக ஆறுவிஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள் ஜீவி சார்! எனக்குத் தெரிந்த காங்கிரஸ் காரர்கள் கூடப் பொறுமையாக இத்தனை பாயிண்டுகளை சொன்னதில்லை! :-)))

      அந்த ஆறு விஷயங்களை நீங்கள் மனப்பூர்வமாகவே நம்புகிறீர்களா? தரவுகளோடு சொல்ல முடியுமானால் அதைத் தனிப்பதிவாகவே guest post ஆக வெளியிட நான் ரெடி.

      Delete
  2. நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கிற விஷயத்திற்கு தரவுகள் எதற்கு சார்?.. நாம் அனுபவிக்கிற உணர்வுகள் தானே முக்கியமாகிப் போகிறது?.. 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற கீதாசாரத்தின் வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.. பார்க்கலாம்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)