எங்கேயோ ஏதோ ஒரு நாற்காலி காலியாகிறதென்றால்கூட காங்கிரசில் உடனடியாகக் குடுமிப்பிடி சண்டை, போட்டி ஆரம்பித்து விடும்! இந்த வரலாறு கூடத் தெரியாது என்றால் காங்கிரஸ் கட்சியில் ராகுல் ராஜினாமா நாடகத்துக்குப் பின் நடந்துகொண்டிருக்கும் கூத்துகளைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளலாமே!
NDTV சொல்கிறமாதிரி சுசீல் குமார் ஷிண்டே மல்லிகார்ஜுன கார்கே இருவர் மட்டுமே போட்டியில் இல்லை. அசோக் கெலாட் உள்ளிட்டு வேறுசில பெயர்களும் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.
இந்தியா டுடே ராகுல் காண்டியின் sacks himself ட்ராமாவுக்குப் பிறகு யார் யார் என்ன சொன்னார்கள் என்பதை இந்த 25 நிமிட செய்தித் தொகுப்பில் சொல்கிறார்கள். ஆனால் இந்த நாடகத்துக்குப் பின்னாலும் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் முதலமைச்சர்களோ பெருந்தலைகளோ அடுத்து வரும் நாட்களில் ராஜினாமா செய்வார்களா, கிழடுதட்டிப் போன பெருந்தலைகள் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்களா என்கிற விடைதெரியாத கேள்வி காங்கிரசைத் துரத்திக் கொண்டிருக்கிறது. பெரிய முதலாளி சோனியா என்ன பஞ்சாயத்து செய்யப்போகிறார் என்பது கூட இன்னமும் வெளியே தெரியாத மர்மமாக மட்டும் நீடிக்கிறது.
இடைகாலத்தலைவரா? எனக்குத்தெரியாதே!
என்கிறார் மோதிலால் வோரா
1987களில் குரைக்கிற நாய்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று திமிராகப் பதில் சொன்ன ராஜீவ் காண்டிக்கு, ராம்ஜேத் மலானி தினசரி 10 கேள்விகள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்கிற பழைய கதையைத் தெரிந்து கொள்ள இங்கே
ராகுல் காண்டி படிப்பில் மட்டுமல்ல எல்லாவற்றிலுமே வீக் என்பதாலோ என்னவோ அர்னாப் கோஸ்வாமி வெறும் ஐந்தே கேள்விகளை மட்டுமே முன்வைக்கிறார். அதில் முதலாவது:
ராகுல் காண்டி நிஜமாகவே ராஜினாமா செய்து விட்டாரா? அல்லது முட்டாள்தனமான நாடகத்தின் முதல் அத்தியாயமா?
உங்களில் எவருக்கேனும் விடை தெரிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.