இங்கே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப் பற்றிப் பேசி நீண்ட காலம் ஆகிவிட்டதோ? ஆனால் மனிதர் எப்போதும் போல் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார். நரேந்திர மோடி தான் பேசுவது எதையும் கேட்பதில்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதையும் ஜூன் 30 அன்று வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதுமட்டும் தானா?
All media mendaciously headlines RG “quits”. The truth is that his resignation has been accepted and media is scared to say anyone accept RG’s resignation. Otherwise RG has been quitting since May 31st the longest quitting in history
9:55 AM · Jul 4, 2019 · TweetCaster for iOS
நேற்றைக்கு ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் குறித்து அவர் ட்வீட்டரில் நக்கலாகச் சொன்னது மேலே.
In para 8 of the FM speech on Budget it is said : “It(GDP) is now the sixth largest in the world....In Purchasing Power Parity terms, we are in fact the 3rd largest economy already...” But which is correct? 6th or 3rd—it cannot be both.
3:26 PM · Jul 5, 2019 · TweetCaster for iOS
இன்றைக்குத் தாக்கல் செய்யப்பட்டபட்ஜெட்டை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?
Para 10,FM: “ it took 55 years..to reach 1 trillion dollar(sic) ..we, in 5 years , added 1 trillion dollar(sic). Today we are nearing a 3 trillion dollar level.” I.e., 55 years from when? Added $1 tr by May 26, 2019? “Nearing $ 3 tr today” i.e., $1tr. in just six weeks? Hare Ram!
4:03 PM · Jul 5, 2019 · TweetCaster for iOS
பொருளாதாரம் அவருடைய ஸ்பெஷாலிட்டி. யார் கவனித்தார்களோ இல்லையோ சுவாமி கண்ணில் விரலைவிட்டு ஆட்டுகிறார். அது ஒருபக்கம் இருக்கட்டும்!
All in a rupee - a break-up of estimated government receipts and expenditure, as per #Budget2019
#BudgetForNewIndia
5:36 PM · Jul 5, 2019 · Twitter Web Client
சாதாரணமாக ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும் ஒவ்வொருரூபாய் வருமானமும் என்னென்ன செலவினங்களாக, பற்றாக்குறை எவ்வளவு என்று படம்போட்டுச் சொல்வதுண்டே! கொஞ்சம் பார்க்கலாமா?
How will public money be spent by the Government of India in the coming financial year? Take a look
#Budget2019 #BudgetForNewIndia
5:29 PM · Jul 5, 2019 · Twitter Web Client
மேலே படத்தில் சொல்லியிருப்பது அசல் செலவினமாக இந்த நிதியாண்டில் மட்டும்.
இது ஓர் தொழிலதிபருடைய பட்ஜெட் மீதான கருத்து. ஏய்த்துப் பிழைக்கும் தொழிலைமட்டுமே செய்துவருகிற பானாசீனா உப்புசப்பில்லை காரம்புளி கசப்புதுவர்ப்பு எதுவுமில்லை நான் பட்ஜெட் போட்டால் மட்டும் தான் இனிப்பாக இருக்கும் என்று யாராவது மைக்கை நீட்டினால் முழ நீள நாக்குடன் சொல்வார்.
நிதியமைச்சர் பேசுகிறார்
மீண்டும் சந்திப்போம்.
ம்...ப.சி தானே.... அறுக்கத் தெரியாதவன் கையில் 6 அருவாள் கொடுத்த மாதிரிதான். இவர் நிதி மந்திரியாக இருந்தபோது வங்கியில் பணம் எடுப்பதற்கு 10 ரூபாய் வரி போட்டவர்தானே...
ReplyDeleteசெட்டியாருக்குத் தன்னைவிடப் பொருளாதாரமேதை எவரும் இல்லை என்கிற நினைப்பு! ஆனால் அதையும் நம்புவதற்கு இங்கே ஒரு கேணையர்கள் கூட்டம் இருக்கிறது பாருங்கள், அதுதான் பெரும் கொடுமை!
Deleteநெல்லை. அந்த 10 ரூபாய் விஷயத்தை கொஞ்சம் விளக்க வேண்டும்.
ReplyDeleteஒரு நாளில் ஒரே தடவையில் 10000/- ரூபாய் ஒருவர் தன் வங்கிக் கண்க்கில் கேஷாக வித்ட்ரா செய்தால் ரூ.10/- அவர் கணக்கில் பிடித்துக் கொள்ளப்படும் என்பது ஏற்பாடு. ரூ.9999/- எடுத்தாலோ, செக் வித்ட்ராயல் செய்தாலோ இந்தப் பிடித்தம் இல்லை! நிஜமாகவே ரொம்ப சாதுர்யமாக சிலர் அந்த வேலையைச் செய்தார்கள்!..
கேஷ் பரிவர்தனைகளைக் குறைப்பதற்கும் ஓரளவு கறுப்புப்பண புழக்கத்தை தடுப்பதற்கு ப.சி. தன் நிதி ஆமைச்சர் வாழ்க்கையில் செய்த ஒரே ஒரு உறுப்படியான காரியம் இது என்று நான் நினைத்துக் கொண்டிருக்க நீங்களோ ஒரேடியாக வாருகிறீர்களே! எதிராளி எது செய்தாலும் தப்பு என்பது தப்பான வாதம்..
இதற்கே கருணாநிதி அய்யகோ என்று மூக்கால் அழுதார்! ஏதோ ஒவ்வொரு ஏழையும் தினமும் பத்தாயிரம் வங்கீயிலிருந்து கேஷாக எடுக்கிற மாதிரி, "ஏழை-பாழைகள் என்ன செய்வார்கள், பாவம்!
அவர்களை இப்படி வாட்டி வதைக்கலாமா?" என்று கண்ணீர் விட்டார்! பென்ஷன் பெறுவோர் என்ன செய்வார்கள் பாவம் என்று பரிதாபப்பட்டார். உண்மையில் இந்த கேஷ் வித்ட்ராயல் ரியல் எஸ்டேட் துறையை லேசாக அசைக்கும் என்பதும் அதற்காகத் தான் கண்ணீர் விடல் என்றும் அந்த நாட்களில் புரிந்து கொள்ளப்பட்டது.
கடைசியில் அவர் வேண்டுகோளில் தான் இந்த சமாச்சாரமும் அமுங்கிப் போயிற்று.
ஜீவி சார்! கேஷ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ் ப்ளஸ் சர்சார்ஜ் போட்டது ஒருவிதமான புதுவரி! அதை பிடித்தம் செய்து வாராவாரம் பெங்களூருக்கு ஸ்டேட்மெண்ட்டுடன் அனுப்புகிற ஒரு கூடுதல் வெட்டிவேலை வங்கிகளுக்கு! வெட்டிவேலை வாங்குவதில் செட்டிகள் சமர்த்தர்கள்! ஆனால் இதைப்போய்க் கறுப்புப்பண ஒழிப்பு என்கிறீர்களே, இன்னமும் இந்திராதான் இந்தியா என்று ஒரு கிறுக்குமாய்க்கான் சொன்னதை வழிமொழிந்த டாங்கே கல்யாணசுந்தரங்கள் காலத்திலேயே இருக்கிறீர்களா என்ன?
Deleteஸ்டேட் மெண்ட் அனுப்புவதே ஒரு வெட்டி வேலை என்றால், இன்றைய வங்கி ஊழியர்கள் படும் பாடு வாடிக்கையாளர்களிடம் சலித்துக் கொள்வதில் போய் முடிந்திருக்கிறது..
Deleteகேஷ் பரிவர்த்தனைக்களுக்கும் கருப்புப்பணத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று தானே கிரெடிட், டெபிட் என்று அட்டைகளை இன்று தேய்க்கச் சொல்கிறார்கள்?..
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்!.. இந்திராவில் ஆரம்பித்த வசவு கல்யாண சுந்தரத்தில் வந்து முடிந்திருக்கிறது..:)
அரசியல் என்பது வரலாறு.. அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி அதை எழுத முடியாது!
அரசியல் வேறு வரலாறு வேறு ஜீவி சார்! இதற்குமேல் இதை வளர்க்கவேண்டாமே என்று நினைக்கிறேன்.
Delete* செல் வித்ட்ராயலை by cheque transaction -- செக் பரிவர்த்தனை - என்று திருத்திப் படித்துக் கொள்ளவும்.
ReplyDelete