இன்றைக்கு எங்குபார்த்தாலும் அத்திவரதர் பற்றிய செய்திகள் வீடியோ போட்டோக்கள் என்றிருப்பதில் நாம் மட்டும் பின்தங்கி விட முடியுமா? ஆனால் சேனலுக்கு சேனல் அத்திவரதர் தரிசனம் கிடந்த கோலத்தில் இத்தனைநாள் நின்ற கோலத்தில் இத்தனை நாள் என்பதில் மாற்றிமாற்றிக் குழப்புகிறார்கள். இந்த இரண்டுநிமிட வீடியோவில் திருமுக தரிசனம் நன்றாகக் கிடைத்தது. திருவடிகளை பலமுறை உன்னிப்பாகக் கவனித்தபிறகே தரிசித்தேன்!
இன்றைக்குப் பார்த்த மிக நல்ல வீடியோ இது.
மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு ராஜ்யசபா சீட்டா? காங்கிரசுக்கு திமுக மூக்கறுப்பு என்று ரிபப்ளிக் டிவி சொல்வதை நம்பமுடிகிறதோ இல்லையோ, எப்படியாவது ராஜ்யசபாவுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற மன்மோகன் சிங் தவிப்பில் மண் விழுந்தது மட்டும் உண்மை. கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத அதிசயமாக முன்னாள் பிரதமர்கள் எவரும் மக்களவையிலோ ராஜ்யசபாவிலோ இல்லை!
ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் பல காமெடிகளை உள்ளடக்கிய மெகாசீரியலாகக் கூட ஆகலாம் போல! இங்கே காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் ராஜினாமா முடிவை வாபஸ் வாங்கவேண்டுமென்று உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்! காங்கிரஸ் முதல் அமைச்சர்களோடு இன்றைக்கு ராகுல் காண்டி ஆலோசனை என்கிறது செய்தி!. சின்ன மீன்களாக ஒரு 200 பேர் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்து விட்டார்களாம்! இரன்டுநாட்களுக்கு முன்னால் ட்வீட்டரில் ராஜ்தீப் சர்தேசாய் சொன்னதுதான் சூப்பர் பன்ச்!
ஜீவி சார்! ராஜ்தீப் சரியாத்தான் சொல்றாரோ?
முசாபர்பூர் வட்டாரத்தில் AES Acute Encephalitic Syndrome என்கிற மூளைக்காய்ச்சல் நோய் தாக்கியதில் 24 ஜூன் நிலவரப்படி 152 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். செயல்படாமல் சோம்பிக் கிடந்துவிட்டு சட்டசபையில் தன்னுடைய அரசின் மீது எந்தத்தவறும் இல்லையென வாதாடிக் கொண்டிருக்கிறார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்! எதிர்க் காட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து முதல்வர் பதவியிலிருந்து வெளியேறுங்கள் என்கிறார்களாம்.
சந்திரபாபு நாயுடு ஜனங்கள் ஆதரவை இழந்த மாதிரியே, நிதிஷ் குமாரும் அடுத்த விக்கெட்டாக விழுவார் என்றுதான் தோன்றுகிறது.
மீண்டும் சந்திப்போம்.
மன்மோகன் பாவமா, எஸ்கேப்பா தெரியவில்லை!
ReplyDeleteஎஸ்கேப்பெல்லாம் இல்லை ஸ்ரீராம்! காங்கிரசில் சேர்ந்தபிறகு மனிதருக்கு ஏதோ ஒரு பதவி,நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்க விரும்புகிற வியாதியும் வந்துவிட்டது.
Deleteராஜ்தீப் விடியோ திறக்கவில்லை. என்ன சொல்லியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது.. அதெல்லாம் போகட்டும்.
ReplyDeleteநீங்களாவது பிஜேபிக்கு தென் மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைப் பற்றி ஏதாவது எழுதக் கூடாதா?.. எப்பப் பார்த்தாலும் காங்கிரஸ் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பதற்கு ஒரு மாற்றாகவானும் அமையும்.
தென் மாநிலங்களில் பிஜேபி கால்பதிக்கவில்லை என்று முன்னைமாதிரி இப்போதும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது ஜீவி சார்! கர்நாடகாவுக்கு அடுத்து கேரளாவில் அழுத்தமாகக் கால் பதித்திருக்கிறது.கொஞ்சம் போல தெலங்கானாவிலும்! ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி,சந்திரபாபு நாயுடு மீது காட்டும் வன்மத்தில் TDP சமஉக்கள் பிஜேபிக்குத் தாவுகிற வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. மீதமிருப்பது தமிழகம் ஒன்றுதான்!
Deleteஎன்னவோ நான் பிஜேபியின் செய்தித்தொடர்பாளராக இருக்கிறமாதிரி, இந்த வெற்றிடம் என்கிற கற்பனைக்கு நான் எப்படி, என்ன பதில் சொல்ல முடியும் சொல்லுங்கள்!
கவனத்துக்குக் கொண்டுவந்தது நச்சென்று பாயிண்டைப்பிடித்த ராஜ்தீப் ட்வீட்டர் செய்திதான்! அது ஸ்க்ரீன் ஷாட் என்பதால் வீடியோ லிங்க் இல்லை!
Delete//TDP சமஉக்கள் பிஜேபிக்குத் தாவுகிற வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.//
Deleteஇதைத் தான் எதிர்பார்த்தேன். மக்களுக்காக தேர்தல்கள். தேர்தல்களுக்கு அப்புறம் அரசியல் வியாபாரிகளின் அடுத்தக் கட்ட நகர்வுகள். இதையெல்லாம் ஊக்குவிக்காத ஒரு மாடல் அரசாக பிஜேபி இருக்கும் என்ற நம்பிக்கையும் உங்களவில் பொய்த்துப் போன ஒன்றா?..
Consolidation mode இல் இருக்கும் ஒரு கட்சி தனக்கான விதிகளை தானே உருவாக்கிக் கொள்கிறது என்பதற்கு மேல், என்னுடைய அல்லது உங்களுடைய விமரிசனம் பொய்த்துப்போனது என்பதெல்லாம் அதிகப்படி. தேவையே இல்லாததும் கூட!
Deleteஜீவி சார்! பிஜேபி கூட காங்கிரசின் replica தான் என்பதைப் பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேனே! ஒரு காங்கிரசுக்கு இன்னொரு காங்கிரஸ் மாற்று ஆகாது என்பதால் தான் நரேந்திர மோடிக்கு ராகுல் காண்டி ஒருநாளும் மாற்றாக வரவோ வளரவோ முடியாது.
பிஜேபிக்கு சரியான மாற்றாக, மண்ணுக்கேற்றபடி தங்களுடைய சித்தாந்தப்பிடிமானங்களை மாற்றிக்கொள்ளத் தயாராகும் இடதுசாரிகளே வரமுடியும் என்று ஸ்ரீராமுக்குச் சொன்ன பதில் தான் இங்கேயும்!
விளக்கமான பதிலுக்கு நன்றி, சார்.
Deleteஅத்தி வரதர் விஷயத்துல -
ReplyDeleteஎல்லாரும் மகா மகா ஞானிகள் மாதிரி ஆளாளுக்கு ஒரு சேதி சொல்லிக்கிட்டு இருக்காங்க...
இவிங்க பண்ற அலப்பரையில - ஆள விடுங்கடா... ந்னு ஸ்வாமி எழுந்து கொள்ளப்போகிறார்!?...
ஆளாளுக்கு என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும் துரை செல்வராஜூ சார்! அயல்நாட்டில் இருந்துகொண்டு நீங்களும் உள்ளூரிலேயே இருந்தும் போகமுடியாத எனக்கும் வீடுதேடி வந்து அத்தி வரதர் தரிசனம் கொடுக்க உதவினார்கள் அல்லவா, அதுவே பேருபகாரம்!
Delete