இந்தப்பக்கங்களில் சிறுகதை எப்படி எழுதுவது? அது சிறுகதைதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது? என்று இரு கேள்விகளை முன்வைத்து எழுதிய பதிவு , அந்தக் கேள்விகளுக்கான விடையைச் சொல்லாமல் அந்தரத்தில் தொங்குவதை , யாருமே கேள்வி கேட்கவில்லை என்பது நிறைய ஆச்சரியம்! கவனிக்க விடுபட்டுப் போய்விட்டதா? அதுதவிர இந்தப் பக்கங்களிலேயே சிறுகதை என்று தேடி இருந்தால் ஒரு 18 சிறுகதைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, (கொஞ்சம் நீளம் , அதிக நீளம் என பாகுபடுத்தாமல்) எடுத்துக் காட்டி இருப்பதைக் கூட கவனித்திருக்க முடியும்!
எட்கர் ஆலன் போ என்கிற அமெரிக்க எழுத்தாளர் (1801-1849) ஒரு சிறுகதை என்றால் ஒரேமூச்சில் படித்துவிட முடிகிறதாக இருக்க வேண்டும் என்று The Philosophy of Composition என்ற கட்டுரையில் சொல்வதை நவீன விமரிசகர்கள் 1000 முதல் 20000 வார்த்தைகளுக்குள் இருக்கலாம் என்பதாக எடுத்துக் கொள்கிறார்கள். இணையத்தில் எழுதுவது எப்படி என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்த 2002 வாக்கில், ஒரு ஆராய்ச்சி இணையத்தில் எவரும் 600 வார்த்தைகளுக்கு மேல் படிப்பது இல்லை என்று வந்தது. அதுவும் பெங்களூரு டெக்கீஸ் தனிப்பட்ட விஷயங்களை blogஇல் எழுதுவது அனேகமாக 40 முதல் 100 வார்த்தைகளுக்கு மேல் இருந்து பார்த்ததில்லை. தமிழ் இணையச் சூழல் இன்னும் மோசம்! இங்கே மேம்போக்காக மேய்ந்துவிட்டுப் போவதுதான் அதிகம் என்ற பின்னணியை வைத்துப் பார்த்தால், வலைப்பதிவோ, சிறுகதையோ எதுவானாலும் 600 வார்த்தைகளுக்குள் இருப்பது நல்லது, 1000 வார்த்தைகள் என்பது அதிகபட்சம்!
ஆக ஒரு சிறுகதை போஸ்ட் கார்ட் அளவுக்குள் அடங்கி விடுகிற மாதிரிக் கால் பக்கக் கதையாக இருக்க வேண்டுமா அல்லது எழுத்தாளர் விருப்பப்படி 50,100 பக்கங்கள் வரை போகலாமா என்பது ஒருபக்கம்! வாசகர் அதே அளவுக்குப் பொறுமையாக வாசிப்பாரா என்பது இன்னொரு பக்கம்! எது முக்கியமானது என்றால், ஒரு சிறுகதையை போஸ்ட்கார்ட் அளவுக்கோ அல்லது இதே பக்கங்களில் பேசப்பட்டிருக்கிற சாண்டில்யனுடைய கதை கோழைச்சோழன் மாதிரியோ கூட இருக்கலாம்! சாண்டில்யனா? சிறுகதையா? என்று ஆச்சரியம் கொள்கிறவர்களுக்காக ஒரு தகவல், இது 1960 ஆம் ஆண்டில் அமுதசுரபி மாத இதழில் வெளிவந்த சிறுகதைதான்!
ஆக, யோசித்துப் பார்த்தால் எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடிய ஒன்றாக சிறுகதை இருக்கிறது, ஒரு நாவல் என்பது அப்படியல்ல! ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதைக்களம் வேண்டும், பாத்திரங்கள், சம்பவங்களைக் கோர்வையாக இணைக்க வேண்டும், லாஜிக் இடிக்காமல் கதை சொல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட இக்குகள் நாவலுக்கு இருப்பது போல சிறுகதை வடிவத்துக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை!
கொஞ்சம் யோசித்துவிட்டு வாருங்கள்! இன்னும் கொஞ்சம் சுவாரசியமான அலசல்களுடன் மேற்கொண்டு பேசலாம்!
மீண்டும் சந்திப்போம்.

சிறுகதையின் இலக்கணங்கள் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. சிறுகதை என்றில்லை, எதற்கும் இதுபொருந்தும்!
ReplyDeleteஎனக்கென்ன தெரியும் ஸ்ரீராம்? நமக்குத் தெரிந்த சிறுகதை எழுத்தாளர்கள், முயற்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எங்கள் பிளாகில் ஒரு கேள்வியைப் போட்டு வையுங்களேன்! என்ன மாதிரி பதில் வருகிறதென்று தான் பார்க்கலாமே! :-)))))
Delete