கர்நாடக அரசியலில் சபாநாயகர் முதல் தவணையாக மூன்று அதிருப்தி MLAக்களைத் தகுதிநீக்கம் செய்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். 76 வயதாகும் BS எடியூரப்பா, எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சற்று நேரத்துக்கு முன் 4வது முறையாக, கர்நாடக முதல்வராகப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். வருகிற திங்கட்கிழமை நம்பிக்கை கோரி வாக்கெடுப்பை நடத்திய பிறகே மந்திரிசபையில் யார் யார் என்பது முடிவாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னொரு செய்தி ஜூலை 31 வரை அவகாசம் ஆளுநர் கொடுத்திருப்பதாக! சபாநாயகர் அடுத்த தவணையில் இன்னும் 14 அதிருப்தி MLAக்கள் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன், அவர்களைவைத்துத் தன் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தேசித்திருக்கிறாரோ என்னவோ!
பிஜேபியின் மத்தியத் தலைமையில் இருந்து எவரும் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததில் ஆச்சரியம் இல்லை! 75 வயதுக்குமேல் பதவியில் எவரையும் அமர்த்துவது இல்லை என்று பிஜேபி எடுத்த முடிவுக்கு முரணாக எடியூரப்பா தன்னுடைய பிடிவாதத்தால், பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதாகச் சொன்னதால், கர்நாடகத்தில் எடியூரப்பாவைத் தவிர்த்து அடுத்து அடையாளம் காட்டக் கூடிய தலைவர் எவரும் இல்லை என்பதால், மகனே உன் சமர்த்து என்று தலைமை ஒதுங்கிக் கொண்டுவிட்டதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. சபாநாயகருடைய முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஏற்கெனெவே ஒரு சாம்பிள் காட்டியிருக்கும் நிலையில் கர்நாடக அரசியல் களத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலையே இன்னமும் நீடிப்பதாக எனக்குப் படுகிறது. ஜூலை மாத முதல் மூன்றரை வாரங்கள் ஒரு மார்க்கமாகவே போய்க்கொண்டிருந்த நிலைமையை, எதிர்க் கட்சிவரிசையில் இருக்கும் காங்கிரஸ் JDS நீட்டித்துக் கொண்டு போகவே செய்யும் என்பதான பின்னணியில் எடியூரப்பா தாக்குப் பிடிப்பாரா? எத்தனை காலத்துக்கு? என்ற கேள்விகளுக்கான விடையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! அது தெளிவாகிற வரை கரு "நாடகம்" குறித்து எழுதாமல் இருப்பது ஒன்றுதான் நான் செய்யக் கூடியது!
டொனால்ட் ட்ரம்பிடம் பிரதமர் என்ன சொன்னார் என்பதை அவரே நேரில் வந்து சபையில் சொல்லவேண்டும் என்று காங்கிரஸ் ஆசாமிகள் ரகளை செய்து ஓய்ந்துபோயிருக்கும் வேளையில் தினசரி தளத்தின் ஓனர் செங்கோட்டை ஸ்ரீராம் இந்தப்படத்தைப் பகிர்ந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்!
ஊடகக் கிறுக்கர்கள்! தெறிக்கவிட்ட வைகோ மிரண்டு போன வெங்கைய நாயுடு என்று தலைப்புக் கொடுக்கிறார்கள்! வீடியோவின் கடைசிப்பகுதியைப் பாருங்கள் 2.30 நிமிடத்தில் இருந்து! மிரட்டியது யார் மிரண்டது யார்?
தமிழ்மணத்துக்கு என்னாச்சு? fatal error என்றே தொடர்ந்து வந்துகொண்டிருந்ததே?
மீண்டும் சந்திப்போம்.
250 பேரில் ஒருவர் வைகோ. அவருக்கு தெரு மீட்டிங்கா இல்லை ராஜ்ஜிய சபையா என்ற சந்தேகம் போலிருக்கு. 2 நிமிஷத்துக்கு 5 பக்கங்கள் பார்த்துப் படிக்கிறார். ரொம்ப இதுபோல் கத்திக்கொண்டிருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆமாம் அவருக்குத்தான் நீதிமன்றம் 'தேச விரோதி' என்ற டைட்டில் கொடுத்திருக்கிறதே. அதை நீங்கள் உபயோகிக்கவில்லையே.
ReplyDeleteவைகோ ஒருவர் மட்டுமே தேசவிரோதமாகப் பேசினார் என்றால் அதை உபயோகித்தருக்கலாம்! சசிகலா புஷ்பாவும் சுப்ரமணியன் சுவாமியும் ராஜ்யசபா சேர்மனுக்கு கடிதம் கொடுத்துக் கூடப் பார்த்தார்கள். அவரே அதை ஏற்றுக்கொள்ளவில்லையே! நீதிமன்றம் சொல்லி என்ன செய்ய?
Deleteவெங்கையா நாயுடு சொல்வது, 'சப்ஜெக்டுக்குள் பேசவும். பாயிண்டை மட்டும் சொல்லுங்க. தேவையில்லாத வார்த்தையை உபயோகிக்காதீங்க' என்று அட்வைஸ் கொடுக்கிறார். வை.கோவிடம் (அல்லது திமுகவிடம்) காசு வாங்கிக்கொண்டு, தெறிக்கவிட்டார், பொளேர் என்று பேசினார், ராஜ்ஜியசபா நடுங்கியது என்றெல்லாம் ஊடகங்கள் எழுதும். இதே வைகோ, 'தனியார்
ReplyDeleteபொறியியல், மருத்துவக் கல்லூரிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்', 'திமுக சாராய அதிபர்கள் டெல்டா பகுதியில் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அங்கு நிலத்தடி நீரைக் காணாமல் அடித்துவிட்டார்கள்' என்றெல்லாம் பேச மாட்டார். ஏனென்றால், அவர் என்ன பேசலாம் என்ற லகான் ஸ்டாலினிடம் இருக்கிறது. அவர் போட்ட பிச்சை தானே இந்த எம்.பி சீட்.
இங்கே எம்பி சீட் கொடுப்பதே ஒருவித வியாபரக் கணக்கில்தானே! வைகோ மட்டும் விதிவிலக்கா என்ன?
Delete