சரியாகப் பிரசங்கம் கூடச் செய்யத் தெரியாத எஸ்ரா சற்குணம் எப்படிப் பாதிரியானார், எப்போது பேராயர் ஆனார் என்பதெல்லாம் கிறித்தவர்கள் படவேண்டிய கவலை! இந்தப் பாதிரி எப்படி திமுகவின் ஆஸ்தானப் பேச்சாளராக நீடிக்கிறார் என்பது ஒரு அரசியல் கேள்வி என்பதை எவராலும் மறுக்க முடியாதே! முந்தைய பதிவில் எஸ்ரா சற்குணம் திமுகவுக்கு பிரசார பீரங்கியாக செயல் படுவதை விட, திமுகவின் மீது வெறுப்பும் அதிருப்தியும் அதிகரிப்பதற்கே உளறிக் கொண்டிருக்கிறார் என்பதை ஒரு கோடி காட்டியிருந்தேன். வின் டிவியில் இருந்து விலகி, பிஜேபியில் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் இப்போது மதன் டயரி என்று தனியாக ஒரு யூட்யூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார். அதில் நேற்றிரவு எஸ்ரா சற்குணத்துடன் சுடச்சுட ஒரு நேர்காணலை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த 36 நிமிட நேர்காணலில் எஸ்ரா சற்குணம் உளறல் கொஞ்சமல்ல, மொத்தமும் அதுவே தான்! இவர்களைத் திருத்தமுடியாது, ஆனாலும் காமெடியை ரசிக்கலாம் இல்லையா! மதன் குறிப்பிட்டு எழுப்புகிற கேள்விகள், சொல்லப்படும் பதில்களில் இந்தக் கோமாளிப் பாதிரிக்கு கிறித்தவத்தில் இருக்கும் கோளாறுகளைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பதே பெரும் குழப்பம் அந்த வகையில் பார்த்தால் திமுகவுக்கு மிகவும் பொருத்தமான வசைப் பேச்சாளர் தான் என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால் இவரால் திமுகவுக்கு எத்தனை கிறித்தவ ஓட்டுக்கள் கிடைத்துவிடும்? எப்படி இவரையும் ஒரு பொருட்டாக நம்புகிறார்கள்?
தயாநிதி மாறன் ஏதோ தெரியாமல் பாமகவின் ராமதாசு, அன்புமணி இருவர் மீதும் கூட்டணி சேர்வதற்கே பலநூறு கோடிகளில் பணம் கேட்டு பேரம் பேசுவதாக, சொல்லிவிட்டார் என்று சொல்ல முடியுமா? துரைமுருகன் ஆசைப்படுவது போல திமுக கூட்டணிக்கு பாமக வந்துவிடக்கூடாது என்பதற்காக வேண்டும் என்றே பாமகவைச் சீண்டிப்பார்த்தது மாதிரித் தெரிகிறதோ? தயாநிதியின் மனக்கிடக்கை எதுவானாலும், பின்விளைவென்னவோ பாமக இதற்கு மேலும் திமுக கூட்டணிக்குள் வராது என்பது தான்! அப்படியே வந்தாலும் சில நூறு கோடிகளில் அல்ல, சில ஆயிரம் கோடிகளில் தான் பேரம் இருக்குமோ? யாருடன் யார் கூட்டு என்பதில் தயாநிதி மாறனுடைய பேச்சு, பாமகவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இனிமேல் அங்கும் இங்கும் போய்விடுவதாகப் போக்குக்காட்ட முடியாது. தவிர அதிமுகவிலும் கூட பாமகவுக்கு அதிக இடம் கொடுத்துவிடக்கூடாது என்ற குரல் வலுத்துவருவதாகவும் தெரிகிறது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையை மருத்துவர் ராமதாசு எப்படி சமாளிக்கப் போகிறார்? 20% வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை,போராட்டத்தை அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கைவிடப்போகிறாரா? துணை முதல்வர் போன்ற அதீதமான கோரிக்கைகள், சீட்டுகள் என வற்புறுத்தாமல் தகுதிக்குத் தகுந்த எள்ளுருண்டை கிடைத்தாலே போதுமென்று பதுங்கப்போகிறாரா? OR அன்புமணி4CM என்ற பழைய கோஷத்தை முன்னிறுத்தி, தனித்தே களம் காணப்போகிறாரா?
எப்படி முடிவெடுத்தாலும் அது பாமகவுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகள், விசிக, மதிமுக போன்ற உதிரிகளுக்கும் கூட்டணி யாருடன் என்பதில் பெரிய குழப்பத்தையும் சேர்த்தே கொண்டு வந்திருக்கிறது
கமல்காசருக்கு அசாதுதீன் ஒவைசி கூட்டு நிச்சயம்! சீமான் தனித்தே நிற்பாரா அல்லது ஒவைசியுடன் கூட்டு என்று போவாரா? #அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பீகியால் நிறுத்தப்பட்டதில் ரஜனிகாந்த் சென்னை திரும்பிவிட்டாரா? டிசம்பர் 31 அன்று கட்சி பற்றி அறிவிப்பு இருக்குமா? ஜனவரியில் மெய்யாலுமே கட்சி ஆரம்பித்து விடுவாரா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே தமிழக அரசியல்களம் சூடுபிடித்து விட்டதாக எப்படிச் சொல்வது ஸ்ரீராம்?
.
பக்குவம் தவறி அடி பிடித்துத் தீய்ந்து போகாமல் இருக்கட்டும்!...
ReplyDeleteதமிழக அரசியல் களம் கழகங்கள் செய்கிற அரசியலில் அடிப்பிடித்துத் தீய்ந்து போய் நாற ஆரம்பித்து 60 வருடங்களுக்கும் மேலாகிறதே துரை செல்வராஜு சார்!
Deleteகாணொளி குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் கேட்க வேண்டும்! அதுசரி, இந்த நிலைகள் எல்லாம் ஏற்படுவதே சூடு பிடிக்கத் தொடங்குவதுதானே!!
ReplyDeleteபற்ற வைக்க பரட்டை வரவேண்டுமே ஸ்ரீராம்!
Delete