2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பிறந்த மிக மோசமான கோமாளித்தனம் UPA என்கிற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 1.0 வெறும் 145 இடங்களில் மட்டுமே வென்றிருந்த சோனியா காங்கிரஸ், திமுக (16) இப்படிக் கதம்பமாக தேர்தலுக்கு முந்தைய கூட்டணி 218 இடங்கள், தேர்தலுக்குப் பின் ஆதரவுக்கரம் நீட்டிய உதிரிகளையும் சேர்த்து 335 இடங்கள் கொண்ட #ஐமுகூ வாக உருவெடுத்ததில் ஆதரவுக்கடிதங்களுடன் சோனியா அவசர அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்ததும், பிரதமராக முடியாத சூழ்நிலையில் தியாக சிகரமாகக் காட்டப்பட்டு மன்மோகன் சிங்கைப் பிரதமராக்கியதும் தெரிந்தகதை. இந்தக் கூட்டணிக்கு குழப்பத்துக்குத் தலைவராக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டதும், அது கேபினெட் அமைச்சருக்கு சமமானதாக அறிவிக்கப்பட்டதும் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ள முடிந்தால் மிகவும் நல்லது. இப்போது அந்தப்பழைய கதை எதற்காக?
நேற்றிலிருந்து, உடல்நலக்குறைவு காரணமாக கோவாவில் ஓய்வெடுத்து வரும் சோனியா காண்டிக்கு பதிலாக NCPயின் ஷரத் பவார் #ஐமுகூ வின் சேர்மன் ஆக வரலாமென்று ஹேஷ்யங்கள் உலாவிக் கொண்டு வருவதை, சோனியா காங்கிரசும், NCPயும் அவசர அவசரமாக மறுத்திருக்கின்றன. ஷரத் பவாருக்கு 80 வயதாகிறது என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளவும்.
நேர்வழியில் சோனியா பிரதமராக வரமுடியா விட்டாலும், UPA Chairperson என்கிற ஹோதாவில் defacto PM ஆகவே இருந்தது கூடத் தெரிந்த கதைதான் இல்லையா? காங்கிரஸ் கதை இப்போது கட்டெறும்பும் தேய்ந்து தித்தெறும்பு ஆகிப்போனதாக இருக்கிற இப்போதைய சூழலில் பை!சா பிரயோஜனமில்லாத UPA Chairperson ஆக ஷரத் பவார் விரும்பமாட்டார் என்பது மேலே 23 நிமிட வீடியோவில்! போகிற போக்கில் இந்த வீடியோ UPA மட்டுமல்ல NDA கூடக் காணாமல் போய் விட்டது என்கிற கள யதார்த்தத்தைப் புட்டு வைப்பதை கவனித்தீர்களா? இரண்டும் ஒன்றல்ல! அதுவேறு இதுவேறு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா
சோனியாக்கள் தாங்களாக இடத்தைக் காலிசெய்ய மாட்டார்கள் என்பது ஒருபக்கம்! ஒரு வலுவான கூட்டணி அல்லது எதிர்க்கட்சி எதுவுமில்லாத இன்றைய சூழலில் இப்படி ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு யார் தான் முன்வருவார்?
அது சரி, 2004 இல் சோனியாவை UPA Chairperson ஆக முன்மொழிந்த அரசியல் வித்தகர் யாரென்பதாவது நினைவிருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment