வினய் சீதாபதி எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கிற புத்தகம் : Jugalbandi: The BJP Before Modi பெங்குவின் வெளியீடாக நவம்பர் 23 அன்று வெளியான இந்தப் புத்தகம், இதுவரை வெளியான விமரிசனங்களை, தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, நான் வாசிக்க விரும்பும் புத்தகங்களில் இது முதலிடத்தில் இருக்கிறது என்று இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிப் பதினெட்டு நாட்கள் தான் ஆகியிருக்கிறது. The Wire தளத்தில் கரண் தாப்பர், நூலாசிரியருடன் அவர் சொல்ல வந்ததையும் தாண்டி வார்த்தைகளை வலுக்கட்டாயமாக வாயில் திணிக்க முயற்சி செய்கிற ஒரு 54 நிமிட பேட்டி வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலே வெறும் ஸ்க்ரீன்ஷாட் மட்டும்தான்! ஒரிஜனல் வீடியோ இங்கே
In an interview that will create considerable controversy and perhaps provoke the wrath of Bharatiya Janata Party supporters, the author of a recent study of Atal Bihari Vajpayee and Lal Krishna Advani has claimed that in 1998, when he was 33 and a young MLA, now Union home minister Amit Shah had been critical of the nuclear tests என கரண் தாப்பர் தன்னுடைய மனக் கிடக்கையை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். Vinay Sitapati, the author of Jugalbandi, an account of the Vajpayee-Advani relationship, and who teaches at Ashoka University, claims that in 1998 Amit Shah wrote to prime minister Vajpayee sharply criticising the nuclear tests.In his alleged letter he wrote: “Respected Vajpayee Ji, because of your greed for publicity you have forever lost Pakistan Occupied Kashmir”. Sitapati adds that when Vajpayee summoned him to Delhi for an explanation Shah told him that Morarji Desai had told him: “If we both (India and Pakistan) become nuclear powers, we can never win back PoK through war”.
"ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப் பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன் புரிந்து கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும். மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற பொதுவான பண்பு இது". இப்படி 10 வருடங்களுக்கு முன்னால் ஆலிவர் ட்விஸ்டும் ஏய்ப்பதில் கலைஞனும்...! என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியதை இன்றும் நான் உறுதியாக நம்புகிறேன். ஆனாலும் இப்போது எழுதிக் குவிக்கப்படும் புத்தகக் குப்பைகள் தவறான தகவல்களை வாசிப்பவர் மீது திணிப்பதற்காகத் தெரிந்தே செய்யப்படுபவை என்பதை சேர்த்தே சொல்லியிருக்க வேண்டுமென்று தோன்றுகிற அளவுக்கு disinformation பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது.
சரி! இப்போது எதற்காக பழைய கதை என்று கேட்கிறீர்களா?புஸ்பா புருசன் காமெடி மாதிரி சுனந்தா புஷ்கரைத் திருமணம் செய்து கொண்டதாலேயே மிகப்பிரபலமும் ஆனவரும் சோனியா காங்கிரசின் MPயுமான சசிதரூர் Battle of belonging என்ற தலைப்பில் புத்தகம் எழுதி அது கடந்த அக்டோபரில் வெளியாகியிருக்கிறது.இந்தத்தகவலே Outlook தளத்தில் நடப்பு இதழில் வெளியான புத்தக விமரிசனம் பார்த்த பிறகுதான் தெரிய வந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! புஸ்பா புருசன் மவுசு போய்விட்டதா என்ன?😂😂
சசி தரூர் 220 வருஷ அரதப்பழசான ஒரு ஆங்கிலப் புத்தகத்திலிருந்து ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, தப்பு மேல் தப்பாகத் தன்னுடைய வாதங்களை இந்தப் புத்தகத்தில் அடுக்கிக் கொண்டே போகிற மாதிரி இருக்கிறது.
Shashi Tharoor’s brilliant but deeply flawed thesis in The Battle of Belonging takes off from where G.K Chesterton left it off long back when he said: “‘My country, right or wrong’, is a thing that no patriot would think of saying except in a desperate case. It is like saying, ‘my mother, drunk or sober’.” (செஸ்டர்டன் The Defendant என்ற புத்தகத்தில் எழுதியது 1901 இல்) Tharoor is brilliant with words, which he uses not to convince but to confuse, obfuscate and deceive. He writes brilliantly, except this time around his core arguments are fundamentally flawed.
Tharoor fails to examine the counterfactual in any great detail—why can’t a nationalist be a patriot, or a patriot a nationalist if they meet some, but not all, of the elements of his own definitions? For example, if someone criticises the government’s policies and still admires an authoritarian leader is he a nationalist or a patriot as per the Tharoorian construct? என்று ஸ்ரீவத்ச கிருஷ்ணா விமரிசனமாக எழுதுவதிலேயே இந்த 462 பக்கப் புத்தகத்தை ரூ.799/- கொடுத்து வேண்டாத குழப்பம் தலைவலியையும் சேர்த்தே வாங்கியாக வேண்டுமா என்ற எண்ணம் வலுவாக எழுகிறதா இல்லையா?
புத்தகங்கள் நல்லவைதான்! வலிமையானவைதான்! நல்லதும் வலிமையும் எப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடிப் படிக்கிறோம்? திரித்துச் சொல்லும் குப்பைகளை எந்த அளவுக்கு நிராகரிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment