பார்த்தது, கேட்டது, படித்தது! எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக!
Sunday, December 13, 2020
இரண்டு புத்தகங்கள்! புத்தகம் எழுதியே சோனியா காங்கிரசை மிரட்டுகிறார்களே!
தற்குறிகளைத் தலைமையாகக் கொண்ட சோனியா காங்கிரசுக்கு, யாராவது அவர்களைப் பற்றிப் புத்தகம் எழுதிவிட்டால் ஜன்னி வந்துவிடும் என்பதை ஸ்பானிஷ் எழுத்தாளர் ஜேவியர் மோரோ எழுதிய சிவப்புச் சேலை::வாழ்க்கையே அதிகாரத்தின் விலை(The Red Saree: When Life is The Price of Power) ஒரு புத்தகம் எவ்வளவு மிரட்டியது என்பதை சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்! பதிவில்அந்தப்பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தகே.நட்வர்சிங்கை எண்ணெய் பேர ஊழலில் பலிக்கடாவாக்கி மந்திரிசபையில் இருந்து வெளியேற்றிய பிறகு, அவர் தன்னுடைய சுயசரிதையை எழுதப்போகிறார் என்ற செய்தி கசிந்ததும் சோனியாவும் பிரியங்காவும் அவரது வீட்டுக்கே போய்த் தாஜா செய்த கதையையும் அந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நினைவுகளை புத்தகமாக எழுதி வெளியிட்டதில் இது வரை மூன்று பகுதிகள் வந்தாயிற்று. நான்காவது பகுதி அவர் ஜனாதிபதியாக இருந்த 2012 -- 2017 காலத்தைய நினைவுகளாக வருகிற ஜனவரி மாதம் வெளிவர இருப்பதாக, பதிப்பாளர்களான ரூபா பப்ளிகேஷன்ஸ் அறிவித்திருக்கிறது. அதிலிருந்து சின்னச் சின்னதாக சில பகுதிகள் வெவ்வேறு ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.வாங்கின காசுக்காகக் கூவுகிற ஊடகங்களில் வந்த செய்தி ஒன்று இங்கே சாம்பிளாக
ஆனால் முன்னைப்போலப் பதறக் கூடப் பொழுது இல்லாமல் தலைக்குமேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன என்ற கையறு நிலையில் சோனியா & கோ இருக்கிற மாதிரித்தான் தெரிகிறது.
தேர்தலுக்குத் தேர்தல் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருந்தால் மாமியார் மெச்சின மருமகள் என்பதைத்தாண்டி அரசியலே தெரியாத இத்தாலிய மம்மி தான் என்ன செய்வார்? மகன், மகள் இருவருமே அரசியலை வெறும் விளையாட்டாகவும், வெறும் பொழுதுபோக்காகவும் எடுத்துக் கொள்கிறவர்களாக இருக்கையில் என்னதான் செய்வது? ராமச்சந்திர குஹாக்கள் குமுறிக் கதறி அழுவது ஏனென்று இப்போது புரிகிறதா?
Sanjay Jha's new Twitter bio reads: "Congressi by DNA. Sacked & Suspended. My big blunder: Fought for internal democracy, suggested changes to revive Congress, challenged Rip Van Winkle leadership. (sic)"இப்படித்தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சஞ்சய் ஜா காங்கிரசின் முன்னாள் தேசிய ஊடகத் தொடர்பாளர். கடந்த ஜூலையில் கட்சித்தலைமையை விமரிசித்ததற்காக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவர். இவர் எழுதிய புத்தகம் ஒன்று இந்த டிசம்பர் 21 அன்று வெளியாகிறது. அமர்த்யா சென் இந்தப்புத்தகத்தைப் பற்றிச் சொன்னதிலிருந்து ஓரிரு வாக்கியங்களை முகப்பில் போட்டு இருப்பதிலிருந்தே சஞ்சய் ஜா காங்கிரஸ் DNA தன்னுள் இருப்பதாகச் சொல்வது அந்த DNA கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு, வெறுப்பைத்தவிர வேறொன்றுமில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டிவிடுகிறது.
அப்படி சஞ்சய் ஜா என்னதான் சொல்லி இருக்கிறார் என்பதை இங்கே நூலின் ஒருசிறுபகுதியை எடுத்துப்போட்டுச் சொல்லி இருக்கிறார்கள்! அதிலிருந்தும் ஒரு சிறுபகுதி The Congress is its own worst enemy, the saying goes. Infighting is in the party’s DNA, and internecine feuds are exhausting. Scurvy wheeler-dealers forget that the real adversary is the BJP, the default beneficiary of the Congress’s self-destruction.
2014 ஜனவரியில் டைம்ஸ் நவ் டிவிக்கு ராகுல் காண்டி அளித்த முழுப்பேட்டியிலிருந்தே காங்கிரசின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாக சஞ்சய் ஜா பொருமியிருக்கிறார். அதில் இருந்தே பிஜேபியினர் ராகுல் காண்டியை பப்பு எனக்கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக இப்போது புலம்புவதில் என்ன பிரயோசனம்?
காங்கிரசைப் பீடித்திருக்கும் பெரிய வியாதி தேர்தல் தோல்விகள் அல்ல! சோனியாவும் வாரிசுகளும் தான் என்பது இந்த இரண்டு புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?
ஆனாலும் வாசிப்பதே சுவாசமாக நினைக்கிற ஒருவன் இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்தாமல் இருந்து விட முடியுமா?
புத்தகங்கள் புழுதியைக் கிளப்புமா? புரட்சி செய்யுமா? கொஞ்ச நாட்கள் ஊடகங்களுக்கு தீனி. நாற்காலியில் அமர்ந்து மைக்கை வாயில் கவ்வி கத்தும் பங்காளர்களுக்கு பொழுது போகும்! அப்புறம் எல்லாம் மறந்துபோய் அடுத்த தீனிக்கு காத்திருக்கவேண்டும் - பொழுது போக! ஆனாலும் புத்தகங்கள் சுவாரஸ்யம்தான்.
பழுதியைக் கிளப்புவதும் புரட்சி செய்வதும் புத்தகங்கள் அல்ல! வாசிக்கிற நம்முடைய பக்குவத்தைப் பொறுத்தவை அவை. புத்தகங்கள் எப்போதுமே சுவாரசியம் தான்! ஆனாலும் எல்லா புத்தகங்களும் எல்லோருக்கும் சுவாரசியமாக இருப்பதில்லை. உதாரணமாக பிரணாப் முகர்ஜி! அரசியலில் மிகவும் கெட்டிக்காரர் பிரதமராகத் தகுதியும் இருந்தவர். ஆனால் என்ன நடந்தது? காசின் மீதே குறியாக இருந்தவர்களுக்கு, அப்படி தகுதியானவர் தேவைப்படவில்லை அரசியலே தெரியாத டம்மிப்பீஸ் மன்மோகன் சிங்கே தேவைப்பட்டார். ஆக, பிரணாப் முகர்ஜியின் நினைவுகளில் இருந்து புதிதாகத் தெரிந்து கொள்ள எதுவுமில்லை! எல்லாமே பொதுவெளியில் தெரிந்தவைதான் என்பதால் அதன் சுருக்கமான பகுதிகள் வெளியாகியிருப்பதில், புத்தகம் என்வரையில் சுவாரசியப்படவில்லை.
சஞ்சய் ஜா! அமேசானில் இவருடைய பல புத்தகங்கள் மீதான விமரிசனங்களை படித்ததுண்டு.பெரிதாக அபிப்பிராயம் இருந்ததில்லை.
ஆனாலும் இந்தப்புத்தகங்களிலிருந்து எதையேனும் தெரிந்துகொள்ள இளம் நண்பர்கள் எவருக்கேனும் விருப்பம் எழலாம் என்பதற்காகவே இந்த அறிமுகக் குறிப்பு.
agni rama என்ற புது blogger இடமிருந்து வந்த பின்னூட்டத்தை மட்டுறுத்தியிருக்கிறேன். பின்னூட்டமிடவிரும்புகிறவர்களுக்கு ஒரு சிறு தகவல் கமெண்ட் பெட்டிக்கு மேலேயே இருப்பதைக் கவனித்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. 1. தன்னைப் பற்றிய சுயவிவர எதுவுமில்லை அதுதவிர, 2. மார்வாடி ஜாதி என்று குறிப்பிட்டு எழுதியிருந்த ஒருவரிப் பின்னூட்டம் இந்தப்பக்கங்களில் அனுமதிக்கத் தகுதியில்லாதது என்பதும் சேர்கிறது.
காலம் போன காலத்துல புத்தகங்கள் எழுதுவதால் என்ன பிரயோசனம்? உயிரோடு இருக்கும்போது part of the problemஆக இருந்துவிட்டு, அதனால் கிடைத்த நன்மைகளை அனுபவித்துவிட்டு, பிறகு உண்மையை எழுதி என்ன பிரயோசனம்?
இன்னொன்று, when one is not ready to get into leadership role, he should not give any interview. ராகுல் காந்தி தெரிந்தே இந்தத் தவறைச் செய்துவிட்டார். அவர் மட்டும் 2009லிருந்து activeஆக இருந்திருந்தால் சிறப்பாக வந்திருப்பார்.
முகநூலில் கஸ்!தூரி சுதாகர் முகர்ஜிகளைப் பற் றி பொதுப்படையாக ஒரு பகடி சமீபத்தில் எழுதியிருக்கிறார்! முடிந்தால் வாசித்துப் பாருங்கள் பிரணாப் முகர்ஜி தான் தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்! ஆனால் ஏமாந்தார். நினைவுகளை மிக மென்மையாக எழுதியிருக்கிறார் என்பதோடு எந்த ஒரு ரகசியத்தையும் புதிதாக வெளியிட்டுவிடவில்லை
ராகுல் காண்டி பேட்டி கொடுத்தவிதமே அவர் எத்தனை பெரிய அசடு என்பதை வெளிப்படுத்தி விட்டது. சித்தாந்தமென்றால் என்னவென்றே தெரியாத, சுயசிந்தனை இல்லாத, பொறுப்பற்ற விடலைப் பேச்சாக மட்டுமே இருந்த அந்த 2 மணிநேர Frankly Speaking இன்டர்வியூவை மறுபடி முழுக்கப் பார்த்து விட்டே, சஞ்சய் ஜா புத்தகத்தை இங்கே ஒரு அறிமுகமாக எழுதினேன்
2004 இலிருந்தே எம்பியாக இருக்கிறார் ஆக்டிவாக இருக்க வேண்டாமென்று யார் தடுத்தது?
புத்தகங்கள் புழுதியைக் கிளப்புமா? புரட்சி செய்யுமா? கொஞ்ச நாட்கள் ஊடகங்களுக்கு தீனி. நாற்காலியில் அமர்ந்து மைக்கை வாயில் கவ்வி கத்தும் பங்காளர்களுக்கு பொழுது போகும்! அப்புறம் எல்லாம் மறந்துபோய் அடுத்த தீனிக்கு காத்திருக்கவேண்டும் - பொழுது போக! ஆனாலும் புத்தகங்கள் சுவாரஸ்யம்தான்.
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteபழுதியைக் கிளப்புவதும் புரட்சி செய்வதும் புத்தகங்கள் அல்ல! வாசிக்கிற நம்முடைய பக்குவத்தைப் பொறுத்தவை அவை. புத்தகங்கள் எப்போதுமே சுவாரசியம் தான்! ஆனாலும் எல்லா புத்தகங்களும் எல்லோருக்கும் சுவாரசியமாக இருப்பதில்லை. உதாரணமாக பிரணாப் முகர்ஜி! அரசியலில் மிகவும் கெட்டிக்காரர் பிரதமராகத் தகுதியும் இருந்தவர். ஆனால் என்ன நடந்தது? காசின் மீதே குறியாக இருந்தவர்களுக்கு, அப்படி தகுதியானவர் தேவைப்படவில்லை அரசியலே தெரியாத டம்மிப்பீஸ் மன்மோகன் சிங்கே தேவைப்பட்டார். ஆக, பிரணாப் முகர்ஜியின் நினைவுகளில் இருந்து புதிதாகத் தெரிந்து கொள்ள எதுவுமில்லை! எல்லாமே பொதுவெளியில் தெரிந்தவைதான் என்பதால் அதன் சுருக்கமான பகுதிகள் வெளியாகியிருப்பதில், புத்தகம் என்வரையில் சுவாரசியப்படவில்லை.
சஞ்சய் ஜா! அமேசானில் இவருடைய பல புத்தகங்கள் மீதான விமரிசனங்களை படித்ததுண்டு.பெரிதாக அபிப்பிராயம் இருந்ததில்லை.
ஆனாலும் இந்தப்புத்தகங்களிலிருந்து எதையேனும் தெரிந்துகொள்ள இளம் நண்பர்கள் எவருக்கேனும் விருப்பம் எழலாம் என்பதற்காகவே இந்த அறிமுகக் குறிப்பு.
சிவப்பு சேலை பதிவு இல்லை என்கிறது உங்கள் தளம்.
ReplyDeleteஇணைப்பு இந்தப்பதிவுக்கே வருவதை உங்கள் பின்னூட்டத்தில் இருந்துதான் பார்த்தேன். இப்பொது சரி செய்தாகிவிட்டது. நன்றி ஸ்ரீராம்!
Delete
ReplyDeleteagni rama என்ற புது blogger இடமிருந்து வந்த பின்னூட்டத்தை மட்டுறுத்தியிருக்கிறேன். பின்னூட்டமிடவிரும்புகிறவர்களுக்கு ஒரு சிறு தகவல் கமெண்ட் பெட்டிக்கு மேலேயே இருப்பதைக் கவனித்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. 1. தன்னைப் பற்றிய சுயவிவர எதுவுமில்லை அதுதவிர, 2. மார்வாடி ஜாதி என்று குறிப்பிட்டு எழுதியிருந்த ஒருவரிப் பின்னூட்டம் இந்தப்பக்கங்களில் அனுமதிக்கத் தகுதியில்லாதது என்பதும் சேர்கிறது.
காலம் போன காலத்துல புத்தகங்கள் எழுதுவதால் என்ன பிரயோசனம்? உயிரோடு இருக்கும்போது part of the problemஆக இருந்துவிட்டு, அதனால் கிடைத்த நன்மைகளை அனுபவித்துவிட்டு, பிறகு உண்மையை எழுதி என்ன பிரயோசனம்?
ReplyDeleteஇன்னொன்று, when one is not ready to get into leadership role, he should not give any interview. ராகுல் காந்தி தெரிந்தே இந்தத் தவறைச் செய்துவிட்டார். அவர் மட்டும் 2009லிருந்து activeஆக இருந்திருந்தால் சிறப்பாக வந்திருப்பார்.
வாருங்கள் நெ.த. சார்!
Deleteமுகநூலில் கஸ்!தூரி சுதாகர் முகர்ஜிகளைப் பற் றி பொதுப்படையாக ஒரு பகடி சமீபத்தில் எழுதியிருக்கிறார்! முடிந்தால் வாசித்துப் பாருங்கள் பிரணாப் முகர்ஜி தான் தான் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்! ஆனால் ஏமாந்தார். நினைவுகளை மிக மென்மையாக எழுதியிருக்கிறார் என்பதோடு எந்த ஒரு ரகசியத்தையும் புதிதாக வெளியிட்டுவிடவில்லை
ராகுல் காண்டி பேட்டி கொடுத்தவிதமே அவர் எத்தனை பெரிய அசடு என்பதை வெளிப்படுத்தி விட்டது. சித்தாந்தமென்றால் என்னவென்றே தெரியாத, சுயசிந்தனை இல்லாத, பொறுப்பற்ற விடலைப் பேச்சாக மட்டுமே இருந்த அந்த 2 மணிநேர Frankly Speaking இன்டர்வியூவை மறுபடி முழுக்கப் பார்த்து விட்டே, சஞ்சய் ஜா புத்தகத்தை இங்கே ஒரு அறிமுகமாக எழுதினேன்
2004 இலிருந்தே எம்பியாக இருக்கிறார் ஆக்டிவாக இருக்க வேண்டாமென்று யார் தடுத்தது?