முதலில் மேற்குவங்கத்தைப் #புடிச்சபுளி மம்தா பானெர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கதை மிகவும் கந்தலாகி வருவதைப் பார்த்துவிடலாம். மேற்கு வங்க அரசியலைப் பார்த்தும் நாளாகி விட்டதல்லவா? மேற்குவங்கம், தமிழ்நாடு இரண்டிலும் தேர்தல் உத்தி வகுத்துக்கொடுக்கும் IPac பிரசாந்த் கிஷோர் இரு மாநிலங்களிலுமே பிரச்சினையின் ஆணி வேராக இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்.
மேற்குவங்க அமைச்சரவையில் போக்குவரத்து மந்திரியாக இருந்த சுவேந்து அதிகாரி கடந்த வெள்ளிக் கிழமை பதவியை ராஜினாமா செய்து, ஆளுநரால் ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. சுவேந்து அதிகாரியும் அவரது குடும்பமும் மேற்குவங்கத்தில் சுமார் 110 தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்குள்ளது என்பதை மனதில் வைத்துக் கொண்டு சில மாதங்களாகவே சுவேந்து அதிகாரி தான் பங்கேற்கும் கூட்டங்களில் திரிணாமுல் கட்சிக்கொடி, மம்தா பானெர்ஜி படம் எதுவுமில்லாமல் மேற்கு வங்க மக்களுக்காகவே தான் என்ற ரீதியில் பேசிவந்தது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்கள் அதிகரித்து வருவதையே காட்டியது. மம்தாவின் சகோதரர் மகன் அபிஷேக் பானெர்ஜி, பிரசாந்த் கிஷோர் இருவருடைய குறுக்கீடுகள் கட்சிக்குள் அதிகரித்து வந்ததே சுவேந்து அதிகாரி கட்சித்தலைமை மீது அதிருப்தி கொள்ளக் காரணம்! அதை அவர் வாய்விட்டுச் சொல்லாமலேயே வேறு வகைகளில் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்
நேற்றைக்கு கட்சியின் தலைவர் சௌகத் ராய், அபிஷேக் பானெர்ஜி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட சிலர் சுவேந்துவிடம் பேசிவிட்டு ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் சொல்கிற வசனம் All is Well என்பதையே சொல்லி பிரச்சினை ஏதுமில்லை, எல்லாம் சுமுகமாக முடிந்தது சுவேந்து அதிகாரி TMCயில் தான் இருக்கிறார் பிஜேபிக்கெல்லாம் போகவில்லை என்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த சிறிது நேரத்திலேயே எதுவும் சுமுகமாக முடியவில்லை என்பதை அவர்களே ஒத்துக்க கொள்கிற மாதிரி ஆகியிருக்கிறது.
ஏற்கெனெவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து யார் யாரெல்லாம் பிஜேபிக்குத் தாவப்போகிறார்கள் என்ற கேள்வியே மம்தாவுக்குத் தீராத தலைவலியாக ஆகிக் கொண்டிருப்பது ஒருபுறமென்றால், இஸ்லாமியர்களுடைய வாக்குகளைப் பங்குபோட அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி மம்தாவுடன் சோடி போடுவமா சோடி என்று கூட்டணிக்குத் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை இழந்ததும் அடையாளமே இல்லாமல் கரைந்து போன இடதுசாரிகள், அவர்களைப்போலவே வீணாய்ப்போன காங்கிரசுடன் கூட்டணி வைப்பதைத் தவிர வேறு கதியில்லாமல் தவிக்கிறார்கள். 2019 தேர்தல்களில் பெற முடிந்த வாக்குகளையாவது இப்போது பெறமுடியுமா? கேள்விக்குறிதான்! ஆனாலும் வீணாய்ப்போனவர்களுடைய கூட்டணிக்கும் ஓட்டுப் போடக் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்!
மம்தாவுக்கு அவருடைய எதேச்சாதிகாரம், ஊழல்கள், anti incumbency முதலானவை மக்களுடைய ஆதரவு சரிந்து வருவதற்கான காரணங்களாக இருக்கின்றன.அதை பிஜேபி வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்ள ஸ்தாபன ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் வளர்ந்து வருகிறது.
ரஜனிகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது என்பதுதான் நிஜம்! பாவம், தமிழருவி மணியனுக்கு மட்டும் தெரிந்திருக்குமா என்ன? ரஜனி குழம்பிருப்பது போலவே தமிழகத்தின் அரசியல் களமும் எவருடன் கூட்டுச் சேருவது, எவரைக் கழற்றிவிடுவது என்ற குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
பிரசாந்த் கிஷோரும் அவருடைய குழுவும் திமுகவைக் குழப்புவது போதாதென்று, அசாதுதீன் ஒவைசி வேறு தமிழகத்தில் 30 தொகுதிகளில் போட்டி போடப் போவதாக அறிவித்திருக்கிறார்.திமுகவுக்குள் இருக்கிற குழப்பங்கள் போதாதென்று உதயநிதி குழப்பமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
அதிமுக நிலைமை கூட சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை! பிஜேபியுடன் கூட்டணி தொடரும் என்று அமித் ஷா முன்னிலையில் அறிவித்தாயிற்று. பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களுக்கு அடிபோடுவதற்கு வசதியாக வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்ற அரதப்பழசான கோஷத்தை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது.
கழகங்களும், காங்கிரஸ், பாமக,விசிக, இடது சாரிகள் போன்ற உதிரிகளும் அவரவருக்கு என்ன தேவை என்பதில் மிகத் தெளிவாகத்தான்,இருக்கிறார்கள். இவர்களை அடியோடு நிராகரிப்பதில் தான் தமிழகத்துக்கு விமோசனம் என்பதில் நமக்குத் தெளிவும் உறுதியும் இருக்கிறதா?
#2021தேர்தல்களம் நமக்கு முன்னால் வைத்திருக்கிற கேள்வி,சவால் இதுதான்! தயாராக இருக்கிறோமா?
மீண்டும் சந்திப்போம்.
நீங்க எழுதுன நேரம் ரஜினி கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனாலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 10-15% வாக்குகள் வாங்கி என்ன செய்வாங்க?
ReplyDeleteபிரச்சனை அதிகமாகக்கூடாதுன்னு காங்கிரஸ், திமுகவுடன் ஒண்டிக்கொண்டது. என்ன கொடுத்தாலும் ஓகே என்ற டீலில்.
இஸ்லாமிய வாக்குகள் சிதறுமா? கிறித்துவ வாக்குகள் யாருக்குப் போகப்போகிறது என்பதில் இருக்கிறது தேர்தல் முடிவுகள்
வாருங்கள் நெ.த. சார்!
Deleteரஜனி கட்சி ஆரம்பிக்கிறாரா? எனக்கு அதில் நம்பிக்கை இல்லை! இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கேஸ்தான் ரஜனியும். அப்படியே கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டாலும் எத்தனை சதவீத வாக்குகளை வாங்குவார்? டெபாசிட்டாவது தேறுமா? எந்தக்கட்சியின் வாக்குகளை ரஜனி வந்து பிரிப்பார்? இதெல்லாம் யாராலுமே ஊகிக்க முடியாத கேள்விகள். தவிர கடந்த முப்பது ஆண்டுகளாக ரஜனியின் உள் வயணங்களை வைத்து திமுகவும், காங்கிரசும் (கருணாநிதி, பானாசீனா) மூக்கணாங்கயிற்றில் கட்டி வைத்திருந்தார்கள் என்பது ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது!
சிறுபான்மையினர் வாக்குகள் எப்படிப் பிரியும்? முந்தைய நாட்களைப்போல எவருக்கும் அது மொத்தக் குத்தகைக்குக் கிடைக்காது என்பது சமீபகாலங்களில் தெளிவாகி வருகிறது.
எந்தக் கூட்டணியில் இருந்தாலும், உதிரிக்கட்சிகளை அடியோடு புறக்கணிப்பதில் இருந்து ஒரு மாற்றத்துக்கான பாதையும் புலப்படும் என்பது என்னுடைய நம்பிக்கை.
ஒவைசி மாதிரி நேரடியாகவே மதரீதியாக வாக்குகளை பிரிப்பது இத்தனை நாள் செகுலரிசம் என்று ஏமாற்றிக் கொண்டிருந்த சிறுபான்மைக்காவலர்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறதோ இல்லையோ நேருவியன் செகுலரிசம் எத்தனை போலியானது என்பதை மெய்ப்பித்திருக்கிறது.
Delete