முகநூல் வம்பர்களால் மட்டுமே ஆனதல்ல கொஞ்சம் உருப்படியாக, விஷயம் தெரிந்து எழுதுகிற சிலரும் இருக்கிறார்கள் என்பதற்காக கொஞ்சம் சாம்பிள்கள்! #முகநூல்சுவாரசியங்கள்
இது கார்ட்டூனிஸ்ட் மஞ்சுள் முகநூல் பகிர்வில் இருந்து எடுத்ததுதான்! இங்கே தமிழக அரசியல் கோமாளிகளைத் தாண்டியும் என்னைப் பரவசப் படுத்துவது ஆம் ஆத்மி கட்சியின் கேசரிவாலு தான்!நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு மண்ணைக்கவ்விய AAP வஸ்தாது கேசரிவாலு வருகிற 2022 உத்தரப்பிரதேச சட்டசபைத்தேர்தலில் போட்டியிடப்போகிறாராம்!
எப்போதும் கொஞ்சம் கேலியும் கிண்டலுமாகவே எழுதிவரும் நண்பர்/பதிவர் சேட்டைக்காரன் மனம் நொந்துபோய் முகநூலில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார்
என்ன பொய் சொன்னாலும் அதை ஜனங்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்று யாரோ எழுதிக்கொடுக்கும் வசனத்தைப் பன்ச் டயலாக் ஆகப் பேசிப் பிரபலமான ஒரு நடிகன் சிலகாலத்துக்கு முன்னால் எம்ஜியார் கொடுத்த நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று உளறியது நண்பர்களுக்கு மறந்தே போயிருக்கும்! அதே மாதிரி எம்ஜியார் மடியில் வளர்ந்தவன் நான் என்று இன்னொரு கோமாளி சிலநாட்களுக்கு முன்னால் உளறியதாவது ஞாபகம் வருகிறதா? நண்பர் சாட்டையை எடுத்தது ஏனென்று இப்போது விளங்கியிருக்குமே!
இது ஹோம் டிபார்ட்மென்ட் சமாசாரம் என்பதால் என்னால் உடனடியாகச் சரிபார்க்க முடியவில்லை! யாராவது வந்து சரிபார்த்துச் சொன்னால் நல்லது!
அக்கப்போர்களுக்கும் ஆபாசப் பின்னூட்டங்களுக்கும் பெயர்போன முகநூலில் இன்னமும் கூட சுவாரசியமான பல விஷயங்கள் பகிர்வுகள் கிடைக்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்! #மஞ்சுள்டூன்ஸ் இலிருந்து இன்றைய அரசியல் நிலவரத்தைச் சொல்கிற இன்னொரு கார்ட்டூனுடன் பதிவை நிறைவு செய்து விடலாம்!
வீசப்படும் கற்களையில்லை கொண்டே பிஜேபி மேற்கு வங்கத்தில் கோட்டை கட்டுகிறது என்பதில் முழு உண்மையில்லை! மம்தா ஆத்திரத்தில் தன்னுடைய கோட்டைச் சுவர்களைப் பெயர்த்தே வீசுவதில் பிஜேபியின் கோட்டை மிக வேகமாக கட்டப்பட்டு வருகிறது என்றல்லவா இருக்க வேண்டும்!
மீண்டும் சந்திப்போம்.
மாயாவதி மம்தா இந்த நூற்றாண்டில் மிக மிக மோசமான முகம்.
ReplyDeleteஅப்படியானஸ்ல் சோனியாவுக்கு என்ன அளவீடு வைத்துச் சொல்வீர்கள் ஜோதி ஜி? :-)))))
Deleteநண்பர் சேட்டைக்காரன் இப்போதெல்லாம் தன் முகத்தை மாற்றிக்கொண்டு சீரியஸ் பதிவுகள் இட்டு வருகிறார்.
ReplyDeleteஅவரைக் குறை சொல்லிப் பிரயோசனமில்லை ஸ்ரீராம்! தமிழக பிஜேபி, அவர் மாதிரி முகநூல் நண்பர்கள் சொல்கிற மாதிரி திராவிட ஜனதா கட்சியாகவே தமிழிசை போனபின்னாலும் இருக்கிறதே! சீரியஸ் ஆகாமல் வேறென்ன செய்வார்?
Delete