ஸ்டேன்லி ராஜன் வழக்கம் போலத் தனது கூர்மையான வார்த்தைகளில் என்ன சொல்கிறாராம்?
கொரோனாவின் பாதிப்பு விமான போக்குவரத்து சுற்றுலா போன்றவற்றை அடியோடு சாய்த்திருப்பதும், வாழ்வே புதிய இயல்புக்கு மாறி இருப்பதும் இந்த ஆண்டு கொடுத்த அதிர்ச்சிகள்
தமிழகத்தை பொறுத்தவரை 2020லும் எதிர்கட்சி வழக்கம் போல் காமெடி சொதப்பல்களை செய்தது, எந்த நெருக்கடியும் அவர்களால் கொடுக்கமுடியவில்லை
பழனிச்சாமி தன் 5ம் வருடத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கும் வந்துவிட்டார்
2020ல் தமிழகம் கண்ட மிகபெரும் முடிவு ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பது, ஒருவழியாக அந்த புயல் கரையினை கடக்காமலே கரைந்து விட்டது.
2021 தமிழகத்தில் தேர்தல் வருடம், அது என்னாக போகின்றது என்பதை காலமே காட்டும்
2020ல் பள்ளி விடுமுறை ஆண்டு முழுக்க தொடர்ந்ததில் மாணவ சமுதாயமும் முககவசம் மற்றும் சானிட்டைசர் தயாரிப்பாளர்கள் மட்டும் மகிழ்ச்சி, வேறு எந்த தரப்பும் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை எல்லாம் கொரோனா செய்த கோலம் உலகம் புதிய வாழ்வியல் முறைக்கு மாறிவிட்டது முழுப்பகிர்வையும் படிக்க இங்கே
இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் ரஜனிகாந்த் அறிவிப்பைக் கிண்டல் செய்து சுரேந்திரா வரைந்த ஒரு கார்டூனுடன் என் ராம் கும்பலுக்கு இந்த ஆண்டு விடைபெறுகிறதாம்! தினமலர் நாளிதழில் கூட ரஜனியைக் கிண்டல் செய்கிற மாதிரி கேலிப்படங்கள் வந்துகொண்டிருக்கிறதாம். அவர்களைக் குறை சொல்லிப்பயனில்லை! களிமண் கால்களுடைய ஒருவர் இப்படி வீராவேசமாக நான் அரசியலுக்கு வருவது உறுதி. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று டயலாக் பேசிவிட்டு , பின்வாங்கினால் வேறென்ன நடக்குமாம்?
கொரோனா செய்த கொடுமைகள் நிறைய உண்டு என்றாலும் அது செய்த நல்ல விஷயம் இந்த ஆண்டு முழுக்க தமிழக சினிமா இம்சைகளை முடக்கி வைத்தது
இல்லையேல் இந்நேரம் இந்த ஆண்டின் சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த புதுமுகம், சிறந்த புது மூக்கு, கண் என ஆளாளுக்கு பட்டியலிட்டு பெரும் களபேரம் செய்து கொண்டிருப்பார்கள்
கொரொனா அடித்த அடியில் எல்லோரும் மகா அமைதி
ஆக தியேட்டர்கள் அடைபட்டால் தமிழகத்தில் பெரும் அமைதி நிலவும் என்பது தெரிகின்றது, திராவிட கட்சி இம்சைகளுக்கு முன்பு தமிழக சினிமாவோடு தமிழகம் எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.
இந்த கொரோனா ஒழியட்டும் ஆனால் சினிமா உலகத்தை மட்டும் முடக்கி வைக்கும் புதிய வகை கொரோனா உருவாகி வரட்டும், அப்படி ஒன்று வந்தால் நிச்சயம் வரவேற்கலாம்
கொரோனாவால் விளைந்த நல்ல விஷயங்களில் ரஜனி ஜகா வாங்கியதைச் சொல்லாமல் விட்டுவிட்டாரே! அது இன்னமும் உறுத்தலாய்த் தான் இருக்கிறது.
திமுக எம்பி கிச்சுகிச்சு மூட்டுகிறார்! KDbrothers பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது போல இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பதே விசுவாசத்தினால் அல்ல! வியாபாரத்துக்காகத்தான் என்பது கூடாது தெரியாத இவரெல்லாம் எப்படித் திமுக எம்பியானார்?
புதிய ஆண்டில் மீண்டும் சந்திப்போம்.
//மாணவ சமுதாயமும் முககவசம் மற்றும் சானிட்டைசர் தயாரிப்பாளர்கள் மட்டும் மகிழ்ச்சி// - மருத்துவமனைகள், கிளினிக்குகள் - பெரிய லாபத்தை ஈட்டியிருக்காங்க. எந்த ராஜா எங்க போனாலும் மருத்துவமனைகள், டாக்டர்கள் காட்டில் அடைமழைதான்.
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் புத்தாண்டு சித்திரை, நமக்கு மிகச் சிறப்பானதாக அமையட்டும்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்! என்னதான் மரபு, கலாசாரம் அடிநீரோட்டமாக இருந்தாலும், ஜனவரி முதல்நாள் நம்மோடு ரொம்பவுமே ஒட்டிக் கொண்டுவிட்டது இல்லையா ? :- ))))
Deleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் ஸ்ரீராம் !
Delete