Showing posts with label ரஜனி வாய்ஸ். Show all posts
Showing posts with label ரஜனி வாய்ஸ். Show all posts

Thursday, December 31, 2020

விடைபெறும் #2020 வரவிருக்கும் #2021 #தேர்தல்களம்

2020 ஆம் ஆண்டு நிறையக் களேபரங்களுடன் ஒருவழியாக இன்றுடன் முடிகிறது. 2021 என்று புதிய ஆண்டு துவங்க இருக்கும் வேளையில், நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்? நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மனோநிலை, கருத்து இருக்கும். கார்டூனிஸ்ட் மஞ்சுள் இப்படித் தனது கருத்தைச் சொல்கிறார்.
கொரோனாதாக்கம், பாதிப்பு இன்னும் சிலகாலத்துக்கு நீடிக்கும் என்றுதான் சொல்கிறார்கள். அதற்காக இடிந்துபோய் உட்காரவேண்டியதும் இல்லை. முகக்கவசம், சானிடைசர், இப்படி சில முன்னெச்சரிக்கைகளோடு கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ளவேண்டியதுதான்! வேறு வழி? !! 

ஸ்டேன்லி ராஜன் வழக்கம் போலத் தனது கூர்மையான வார்த்தைகளில் என்ன சொல்கிறாராம்?

கொரோனாவின் பாதிப்பு விமான போக்குவரத்து சுற்றுலா போன்றவற்றை அடியோடு சாய்த்திருப்பதும், வாழ்வே புதிய இயல்புக்கு மாறி இருப்பதும் இந்த ஆண்டு கொடுத்த அதிர்ச்சிகள்
தமிழகத்தை பொறுத்தவரை 2020லும் எதிர்கட்சி வழக்கம் போல் காமெடி சொதப்பல்களை செய்தது, எந்த நெருக்கடியும் அவர்களால் கொடுக்கமுடியவில்லை
பழனிச்சாமி தன் 5ம் வருடத்தை பூர்த்தி செய்து தேர்தலுக்கும் வந்துவிட்டார்
2020ல் தமிழகம் கண்ட மிகபெரும் முடிவு ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பது, ஒருவழியாக அந்த புயல் கரையினை கடக்காமலே கரைந்து விட்டது.
2021 தமிழகத்தில் தேர்தல் வருடம், அது என்னாக போகின்றது என்பதை காலமே காட்டும்
2020ல் பள்ளி விடுமுறை ஆண்டு முழுக்க தொடர்ந்ததில் மாணவ சமுதாயமும் முககவசம் மற்றும் சானிட்டைசர் தயாரிப்பாளர்கள் மட்டும் மகிழ்ச்சி, வேறு எந்த தரப்பும் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை எல்லாம் கொரோனா செய்த கோலம் உலகம் புதிய வாழ்வியல் முறைக்கு மாறிவிட்டது   முழுப்பகிர்வையும் படிக்க இங்கே  
 
இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் ரஜனிகாந்த் அறிவிப்பைக் கிண்டல் செய்து சுரேந்திரா வரைந்த ஒரு கார்டூனுடன் என் ராம் கும்பலுக்கு இந்த ஆண்டு விடைபெறுகிறதாம்! தினமலர் நாளிதழில் கூட ரஜனியைக் கிண்டல் செய்கிற மாதிரி கேலிப்படங்கள் வந்துகொண்டிருக்கிறதாம். அவர்களைக் குறை சொல்லிப்பயனில்லை! களிமண் கால்களுடைய ஒருவர் இப்படி வீராவேசமாக நான் அரசியலுக்கு வருவது உறுதி. இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று டயலாக் பேசிவிட்டு , பின்வாங்கினால் வேறென்ன நடக்குமாம்?
சுத்திச் சுத்தி வந்தீக என்று ஜோடிபோட்டு டூயட் பாடியவருக்கு, இதெல்லாம் தேவைதான்! 

கொரோனா செய்த கொடுமைகள் நிறைய உண்டு என்றாலும் அது செய்த நல்ல விஷயம் இந்த ஆண்டு முழுக்க தமிழக சினிமா இம்சைகளை முடக்கி வைத்தது
இல்லையேல் இந்நேரம் இந்த ஆண்டின் சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த புதுமுகம், சிறந்த புது மூக்கு, கண் என ஆளாளுக்கு பட்டியலிட்டு பெரும் களபேரம் செய்து கொண்டிருப்பார்கள்
கொரொனா அடித்த அடியில் எல்லோரும் மகா அமைதி
ஆக தியேட்டர்கள் அடைபட்டால் தமிழகத்தில் பெரும் அமைதி நிலவும் என்பது தெரிகின்றது, திராவிட கட்சி இம்சைகளுக்கு முன்பு தமிழக சினிமாவோடு தமிழகம் எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது.
இந்த கொரோனா ஒழியட்டும் ஆனால் சினிமா உலகத்தை மட்டும் முடக்கி வைக்கும் புதிய வகை கொரோனா உருவாகி வரட்டும், அப்படி ஒன்று வந்தால் நிச்சயம் வரவேற்கலாம் 

கொரோனாவால் விளைந்த நல்ல விஷயங்களில் ரஜனி ஜகா வாங்கியதைச் சொல்லாமல் விட்டுவிட்டாரே! அது இன்னமும் உறுத்தலாய்த் தான் இருக்கிறது.


திமுக எம்பி கிச்சுகிச்சு மூட்டுகிறார்! KDbrothers பற்றி அவருக்கு அவ்வளவாகத் தெரியாது போல இருக்கிறது. அவர்கள் திமுகவில் இருப்பதே விசுவாசத்தினால் அல்ல! வியாபாரத்துக்காகத்தான் என்பது கூடாது தெரியாத இவரெல்லாம் எப்படித் திமுக எம்பியானார்?

புதிய ஆண்டில் மீண்டும் சந்திப்போம்.    

Saturday, March 21, 2020

சாணக்யா தள முதலாம் ஆண்டு விழா! சொல்ல விடுபட்டவை

கொஞ்சம் பழசாகிப்போன விஷயம் தான்! சாணக்யா தளம் அறிவித்த விருதை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு ஏற்கமாட்டார் இது கட்சியின் கொள்கை முடிவு என்று அறிவித்த விஷயம் தான்! CPI இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொள்கை என்ற ஒருவிஷயம் இருப்பதே அந்தக் கேலிக்கூத்தான அறிவிப்புக்குப் பிறகுதான் தெரிந்தது. எமெர்ஜென்சி நாட்களில் இந்திராவுடன் சேர்ந்து கொண்டு இந்திராதான் இந்தியா என்று முழங்கியபோது, எமெர்ஜென்சிக்குப் பிறகு தேர்தலில் செம அடி வாங்கியபிறகு, சிபிஎம்முடன் சேர்ந்து கொண்டது, முதல் சமீபத்தில் திமுகவிடம் தேர்தல் கொடையாக 15 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டது வரை அவர்களுடைய லட்சியம், கொள்கை எல்லாம் வசதிக்குத் தகுந்தபடி காற்றில் பறக்க விடப் பட்டிருக்கிற கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது.

12 நிமிட சப்பைக்கட்டு 

வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் சாணக்யா பெயரில் விருது என்பதால்தான் ஏற்க மறுத்தார்கள் என்று புதிதாக ஒரு  சப்பைக்கட்டு கட்டுகிறார். அந்த விருதை ரங்கராஜ் பாண்டேவின் தளம் வழங்குகிறது. அதுவும் ரஜனிகாந்த் கையால்! இரண்டு விஷயமும் இப்போது ஒட்டிக்கொண்டிருக்கிற திமுக கூட்டணிக்கு  குறிப்பாக திமுக வுக்குப் பிடிக்காது. திமுகவுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது என்பதுதான் CPI கட்சியின் இப்போதைய கொள்கை என்று             வாய் திறந்து உண்மையைச் சொல்லிவிட முடியுமா? 15 கோடி ரூபாய் கொடுத்தவர்களுக்கு கொஞ்சமாவது நேர்மை, விசுவாசத்துடன் இருக்கவேண்டாமா?  

 வீடியோ 17 நிமிடம் 

குமரி அனந்தன்! ஒரு நல்ல பேச்சாளர்! காமராஜரின் தொண்டராக இருந்தவர் சோனியாவின் குடும்பக் கட்சியில் தொடர்வது என்பது நகை முரண். என்னமோ தேசியம் இவரிடம்தான் வாழ்வதாக எதைவைத்து ரங்கராஜ் பாண்டே முடிவு செய்தாரோ? கொடுத்தார், குமரி அனந்தனும் பெரிய மனது பண்ணி வாங்கிக் கொண்டார் என்பதற்குமேல் வேறென்ன இருக்கிறது? 

 வீடியோ 10 நிமிடம் 

பிஜேபியின் இல. கணேசன்! எளிமைக்கான சாணக்யா விருது அறிவிக்கப்பட்டதை, ஏற்றுக் கொண்டது மிகவும் பொருத்தமானதுதான்! ஆனால் யார் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்? அவரை ஞாபகப் படுத்துவதற்காகவே கொடுத்தமாதிரி இருக்கிறது.

ரங்கராஜ் பாண்டே ரஜினிகாந்தை வைத்து நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி, ரஜனியின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துகிற மாதிரி மட்டுமே இருந்தது. அவ்வளவுதான்! தமிழருவி மணியன் இடத்தை ரங்கராஜ் பாண்டே பிடித்துக் கொண்டாரா அல்லது இது தனி டிராக் தானா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.  

மீண்டும் சந்திப்போம்.      

Thursday, March 12, 2020

ஜோதிராதித்ய சிந்தியா! சோனியா & கோவின் முடிவின் தொடக்கம்!

சோனியாG காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 2004 - 2014 இந்தப் பத்து வருடங்களில், காசுக்குக் கூவுகிற ஊடகக் காரர்களுக்கு யோககாலம் என்றிருந்தது நினைவுக்கு வருகிறதா? யார் யாரெல்லாம் மந்திரி, எந்த மந்திரிக்கு என்ன இலாகா என்பதைக் கூட தரகு வேலை செய்ய முடிந்த காலம் அது. அதிலும் கொடிகட்டிப் பறந்தவர் அந்தநாட்களில் NDTV யின் அறியப்பட்ட முகமாக இருந்த பர்கா தத். நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி அமைத்த இந்த ஆறாண்டுகளில், செல்லாக் காசாகிப் போனவர்களில் முதலிடம் வகிப்பதும் கூட  அதே பர்கா தத் தான்! காங்கிரஸ் சார்பு ஊடகங்களில் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) அவ்வப்போது எழுதுகிறார். Mo Jo Story என்கிற யூட்யூப் சேனலில் அடிக்கடி அம்மணியின் அரசியல் மேதாவித்தனத்தைக் காணமுடிகிறது என்பதில் ஆறுதலா? சோதனையா?

 
  
இந்த ஆறுநிமிட வீடியோவில் பர்கா தத் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுத் தான் பாருங்களேன்! மத்தியப்பிரதேசத்தில் சிந்தியா வெளியேறியது ஒரு ஆரம்பம்தான்! அடுத்த்து யார் யாராக இருக்கலாம் என்ற ஊகத்தை காரணத்தோடு சொல்கிறார் என்பதுதான் சுவாரசியம். எச்சரிக்கை மணியைச் சட்டைசெய்கிற மனோநிலையில் சோனியா குடும்பத்தினர் எவருமே இல்லை என்பது தான் காங்கிரஸ் கட்சியின் தொடர் சோகம். தலைமை தாங்கத் துப்பில்லாவிட்டாலும் அந்தக் குடும்பத்தைத் தவிர வேறு எவர்கைக்கும் கட்சி போய்விடக்கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறது சோனியா & கோ. தொடர்ந்து மாரடைப்புக்குள்ளாகிற ஒரு மனிதனுடைய கதை போலத்தான்! அடைப்பை சரி செய்யத் தலைமை முயற்சிக்க வேண்டும் முடியாவிட்டால் ஒதுங்கி வேறொருவருக்கு வழிவிட வேண்டும். இரண்டுக்கும் இடம் கொடுக்காத அடைப்பாக சோனியாG இருப்பது தான் காங்கிரசுடைய தற்போதைய பரிதாப நிலைமை.  

  
ஆதன் தமிழ் சேனல் மாதேஷுடைய கேணத்தனமான குறுக்கீடுகள், கேள்விகளைக் கொஞ்சம் சகித்துக் கொள்ள முடியுமானால், இந்த 26 நிமிட நேர்காணலில் கோலாகல ஸ்ரீனிவாஸ் மத்தியப்பிரதேச காங்கிரசின் அரசியல் குளறுபடிகளை, பொறுமையாக விளக்கிச் சொல்கிறார். சொன்னதில் கொஞ்சமாவது மாதேஷுக்குப் புரிந்ததா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்!

   
தமிழகத்தின் நிரந்தரக் குழப்பமாக இருப்பது என்று ரஜனி முடிவு செய்து விட்டார் என்பதற்குமேல் தராசு ஷ்யாம் வேறு புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறார்? இதற்குப்போய்  13 நிமிடம்  நீட்டி முழக்கலா?



மீண்டும் சந்திப்போம்.    

Monday, March 2, 2020

திங்கள் மாலை! சுவாரசியமான செய்தி அலசல்!

அந்தப்பக்கம் திரௌபதி படத்தைப் பற்றி எழுதியதை வாசித்தீர்களா?  News 7 சேனலின் நெல்சன் சேவியர், திரௌபதி  படத்துக்கு ஜனங்கள் அதிக வரவேற்பளிப்பதில் நொந்து ட்வீட்டரில் பொங்கியது சேனலுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்றோ என்னவோ திரௌபதி படக்குழுவினருடன் ஒரு நேர்காணலை நடத்தி சமன் செய்திருக்கிறார்கள் போல!


நாடகக் காதல், ஆணவக்கொலைகள் என்ற பரப்புரை தாண்டி, ஒரு மிகப்பெரிய மோசடி நடந்ததும், அப்படியே அமுங்கிப்போனதுமாக இருந்த விஷயத்தை திரௌபதி படம் மீண்டும் கவனப்படுத்தி இருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அவர்களுக்குத் துணையாக இருந்தவர்கள் மீது இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், அரசும், பார் அசோஸியேஷனும் ஊமைச் சாமிகளாக அப்படியே அடக்கிவாசிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடுவதற்குப் பதிலாக, பாமகவுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதோடு திரௌபதி படம் நின்றுவிடுமானால், என்வரையில் அது பெருத்த ஏமாற்றம் என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது.

  
இதை எப்படி எடுத்துக்கொள்வது? கமல் காசர் வந்து தான் பொழிப்புரை எழுதித்தர வேண்டுமோ? அப்புறம் அந்த என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் என்பதன் வரையறை என்னவோ??

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் லந்து அடிப்பதில் திமுகவின் சாயம் என்ன ஆகிறதாம்? வந்து பாருங்கள்!

‪தீமிதித்து கருணாநிதியிடம் திட்டு வாங்கிய அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபைக்கு நியமித்து இருப்பதன் மூலம் திமுக இந்துக் கட்சியே என ஸ்டாலின் தெள்ளத்தெளிவாய் தெரிவித்திருப்பதை, செயற்குழு லெவல் ஐடி பிரிவின் மைனாரிடி அணி உறுப்புல்லாஹ் எப்படியெல்லாம் முட்டு கொடுக்கவேண்டி இருக்கிறது😂😂😂


மதன் ரவிச்சந்திரன் வேறு நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.

அப்போ இவ்ளோ நாள் பெயர் இருந்ததாக சொல்லப் பட்ட hmm hmm நிலைமை...
எசமான்: தம்பி நீங்க திறமையானவர் தான் நல்ல செல்வாக்கு இருக்கு அதுவே நாளைக்கு சின்னவற்கு பிரச்னையா வந்துட்டேனா... போ போய் வழக்கம் போல பூண்டு தட்டி போட்டு சூடா மசால் வடை வாங்கிட்டு வா...
hmm hmm : சரிங்க எசமான்🔥🔥🔥
               

இந்த முகநூல்தான் எப்படி ஒவ்வொருவருடைய மன வக்கிரத்தையும் வெளிப்படுத்துகிற கருவியாக இருந்து வதைக்கிறது!!


இது ஒன்றுதான் பாக்கி இருந்தது! இன்றிரவு அதுவும் தீருகிறது. திருப்திதானே!

மீண்டும் சந்திப்போம்.    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)