கொஞ்சம் பழசாகிப்போன விஷயம் தான்! சாணக்யா தளம் அறிவித்த விருதை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு ஏற்கமாட்டார் இது கட்சியின் கொள்கை முடிவு என்று அறிவித்த விஷயம் தான்! CPI இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொள்கை என்ற ஒருவிஷயம் இருப்பதே அந்தக் கேலிக்கூத்தான அறிவிப்புக்குப் பிறகுதான் தெரிந்தது. எமெர்ஜென்சி நாட்களில் இந்திராவுடன் சேர்ந்து கொண்டு இந்திராதான் இந்தியா என்று முழங்கியபோது, எமெர்ஜென்சிக்குப் பிறகு தேர்தலில் செம அடி வாங்கியபிறகு, சிபிஎம்முடன் சேர்ந்து கொண்டது, முதல் சமீபத்தில் திமுகவிடம் தேர்தல் கொடையாக 15 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டது வரை அவர்களுடைய லட்சியம், கொள்கை எல்லாம் வசதிக்குத் தகுந்தபடி காற்றில் பறக்க விடப் பட்டிருக்கிற கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது.
12 நிமிட சப்பைக்கட்டு
வலது கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் சாணக்யா பெயரில் விருது என்பதால்தான் ஏற்க மறுத்தார்கள் என்று புதிதாக ஒரு சப்பைக்கட்டு கட்டுகிறார். அந்த விருதை ரங்கராஜ் பாண்டேவின் தளம் வழங்குகிறது. அதுவும் ரஜனிகாந்த் கையால்! இரண்டு விஷயமும் இப்போது ஒட்டிக்கொண்டிருக்கிற திமுக கூட்டணிக்கு குறிப்பாக திமுக வுக்குப் பிடிக்காது. திமுகவுக்குப் பிடிக்காத எதையும் செய்யக்கூடாது என்பதுதான் CPI கட்சியின் இப்போதைய கொள்கை என்று வாய் திறந்து உண்மையைச் சொல்லிவிட முடியுமா? 15 கோடி ரூபாய் கொடுத்தவர்களுக்கு கொஞ்சமாவது நேர்மை, விசுவாசத்துடன் இருக்கவேண்டாமா?
வீடியோ 17 நிமிடம்
குமரி அனந்தன்! ஒரு நல்ல பேச்சாளர்! காமராஜரின் தொண்டராக இருந்தவர் சோனியாவின் குடும்பக் கட்சியில் தொடர்வது என்பது நகை முரண். என்னமோ தேசியம் இவரிடம்தான் வாழ்வதாக எதைவைத்து ரங்கராஜ் பாண்டே முடிவு செய்தாரோ? கொடுத்தார், குமரி அனந்தனும் பெரிய மனது பண்ணி வாங்கிக் கொண்டார் என்பதற்குமேல் வேறென்ன இருக்கிறது?
வீடியோ 10 நிமிடம்
பிஜேபியின் இல. கணேசன்! எளிமைக்கான சாணக்யா விருது அறிவிக்கப்பட்டதை, ஏற்றுக் கொண்டது மிகவும் பொருத்தமானதுதான்! ஆனால் யார் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்? அவரை ஞாபகப் படுத்துவதற்காகவே கொடுத்தமாதிரி இருக்கிறது.
ரங்கராஜ் பாண்டே ரஜினிகாந்தை வைத்து நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி, ரஜனியின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துகிற மாதிரி மட்டுமே இருந்தது. அவ்வளவுதான்! தமிழருவி மணியன் இடத்தை ரங்கராஜ் பாண்டே பிடித்துக் கொண்டாரா அல்லது இது தனி டிராக் தானா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment