Tuesday, March 24, 2020

ஜெயமுண்டு! #கொரோனா பயம் வேண்டாம் மனமே!

கரோனா தொற்று! ஓடவும் வேண்டாம், ஒளியவும் வேண்டாம்! இப்படிப் பதினைந்து நாட்களுக்கு முன்பு இந்தப் பக்கங்களில் எழுதியதைத்தான் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் சொந்த ஊர்ப்பக்கம் இன்று கிளம்பிய பெருங்கூட்டமும், தள்ளுமுள்ளுகளும் ஒரு மருத்துவ நெருக்கடியை மனவுறுதியுடன் எதிர்த்து வெல்கிற இயல்பைத் தமிழகத்தில் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க உதவுகிற KIT இந்தியாவிலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது விலை வெறும் 80000 ரூபாய்கள் தான்! ஒருவரைச் சோதனை செய்ய ஆகிற செலவு ரூ.1500/- க்குள் தான் ஆகும் என்கிற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் அதே நேரம், தேவையில்லாத பயம் ஜனங்களைத் தவறுக்கு மேல் தவறாகத் தொடர்ந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறதோ? 

 

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு மறுபடியும் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், சுகாதார அமைச்சகமும் என்ன தான் நிலைமையை சமாளிக்க சுறுசுறுப்பாக இயங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஜனங்களுடைய பங்களிப்பில்லாமல் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக   இன்று நள்ளிரவிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஜனங்களும் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயத்திலிருந்து விடுபட முடியும்.   


அதே வேளையில் குறுகிய உள்நோக்கம் கொண்ட கட்சி அரசியல் செய்கிற நேரமில்லை இது என்பதை இங்கே இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ், கழகங்களுக்கும் யார் எடுத்துச் சொல்வது?  

கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் 11-ம் தேதி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போதே அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கால்பந்து போட்டி நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார். இரண்டு எம்எல்ஏ.க்களை சந்தித்து அவர்களோடு கைகுலுக்கி ஆரத்தழுவி பேசி இருக்கிறார். அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. காசர்கோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார். இதற்கிடையில், கோவிட்-19 காய்ச்சலோடு குறைந்த பட்சம் 3000 பேரை அவர் சந்தித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மல்லுதேச துபாய் ரிடர்ன் ஆசாமி ஒருவருடைய பொதுநல சேவையை இந்து தமிழ்திசை நாளிதழ் செய்தி இன்றைக்குச் சொல்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பவர்கள் இவர்மாதிரி வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தான் என்பது என்னமாதிரியான சமூகப் பொறுப்புணர்வு? 


ஈரோட்டுக்கு கொரோனா வந்தவிதம் இதே போலத்தான் என்பது நினைவிருக்கிறதா? இப்போது சேலத்துக்கும்,


ஜெயமுண்டு பயமில்லை மனமே என்கிற பாரதியார் கவிதை வரியிலிருந்துதான் பதிவுக்குத் தலைப்பு உருவானதே! பதிவை முடிப்பதும் கூட பாரதியார் கவிதை வரிகளோடுதான்என்றால் பொருத்தமாக இருக்கும்!


தேடி உன்னை சரணடைந்தேன் தேச முத்து மாரி
கேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம் தருவாய்
 பாடி உனை சரணடைந்தேன் பாசமெல்லாம் களைவாய்

கோடி நலம் செய்திடுவாய் குறைகளெல்லாம் களைவாய்       

மீண்டும் சந்திப்போம்.

6 comments:

  1. தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்து மாரி - பொருத்தமான பாடல்.

    ReplyDelete
    Replies
    1. பிரதமர் தன்னுடைய உரையில் அடிக்கடி மகாமாரி என்று பரவலாக அறியப்பட்ட அம்மை நோய்த்தொற்றைக் குறிப்பிட்டுப் பேசியதைக் கேட்டதில் பாரதியின் இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது நெ.த.சார்!

      Delete
  2. எவ்வித பரிசோதனைகளும் இன்றி
    இந்தோனேசிய தப்லிக்கில் இருந்து சேலம் வரைக்கும் வர முடிந்தது எப்படி!...

    ReplyDelete
    Replies
    1. பத்தேமாரி என்கிற கள்ளத்தோணி வழியாக அரபுதேசங்களுக்குப் போக முடிந்ததேசத்தில், இப்படி இவர்கள் உள்ளேவந்தது அதிசயமா துரை செல்வராஜூ சார்!

      Delete
  3. சுய கட்டுப்பாடு இல்லாதவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.  குழந்தைகளை தெருவில் கிரிக்கெட் விளையாட அனுப்புவதும், டீக்கடைகளில் தேநீர் அருந்திக்கொண்டு உலகநடப்பை அலசுவதும், ஏதோ வேலையாக இருசக்கரவாகனத்தில் இங்கும் அங்கும் அலைவதும்...

    ReplyDelete
    Replies
    1. அந்தநாட்களில் அம்மைநோய்த்தொற்று வந்தால் சுத்தபத்தமாக இருப்பதன் அவசியத்தைப் பெரியவர்கள் சொல்ல, கீழ்ப்படிந்தது உண்டு. நினைவிருக்கிறதா? நோய்த்தொற்றுடன் விளையாடுவது என்னவோ மிகப்பெரிய அட்வென்ச்சர் என்று நினைக்கிற விடலைத்தனம் ஒருபக்கம் .

      நோயைப்பரப்புவதற்காகவே வருகிறவர்களாய் சிலர் இருக்கிறார்களே ஸ்ரீரஃம்! மதுரைக்கு, ஈரோட்டுக்கு கொரோனா தொற்று வந்தவிதத்தைக் குறித்த செய்திகள் கவலையளிக்கின்றன.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)