சாகரிகா கோஸ்! ராஜ்தீப் சர்தேசாயுடைய மனைவி, பத்திரிகையாளரும் கூட என்று மட்டும் சொன்னால் போதாது. கணவனும் மனைவியும் லிபரல்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டாலும் காசுக்காகக் கூவுவதைப் பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் என்று சுருக்கமாகச் சொல்லவும் வேண்டுமே! சரி, சாகரிகாவுக்கு என்ன இப்போது என்கிறீர்களா? ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசை உதறி எறிந்துவிட்டு பிஜேபிக்குப் போனது இங்கே காசுக்காகக் கூவிக் கொண்டிருந்தவர்களில் பலபேரை ரொம்பவுமே பாதித்திருக்கிறது. சோனியா பரிவார் காங்கிரசை விட்டு வெளியேபோனால் நல்லது என்று வெளிப்படையாகச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! With Jyotiraditya Scindia’s departure, there are predictions of the imminent demise of the Congress. But it’s not the Congress that’s about to die — it’s the Gandhi family’s political authority that has evaporated. இப்படித் தன் புலம்பலை இன்றைக்கு TOI இல் எழுதி ஆரம்பித்து இருக்கிறார்.
When even such a close family friend ups and leaves after a bitter exchange of words, it’s clearly a resounding vote of no-confidence in the Gandhi parivar. Ironically though, the precipitous decline of Brand Gandhi is an opportunity to revive Brand Congress இப்படி சோனியாG ப்ராண்ட் மீது நம்பிக்கையில்லாமல் போனது காங்கிரஸ் ப்ராண்ட் உயிர்த்தெழ ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது என்று அம்மணி, காங்கிரசில் இருந்து பிரிந்து போன சரத் பவார், ஜெகன் மோகன் ரெட்டி முதலானவர்களை மறுபடியும் இணைத்து, காங்கிரஸ் ப்ராண்ட் தழைப்பதற்கு இதுவே நல்ல தருணம் என்று கனவுக் கோட்டைகளைக் கட்டுகிறார்!வரவர மாமியார் கழுதை போலாகி, அந்தக் கழுதையும் தேய்ந்து கட்டெறும்பாகி நிற்பதில் கட்டெறும்பு தேய்ந்து என்ன ஆகுமாம்? எதற்காக சாகரிகா போன்றவர்கள் கதறுகிறார்கள்? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
வீடியோ 4 நிமிடம்
காங்கிரசுக்கு ஒரு நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியவில்லை என்பதால் தான் தொடர்ந்து இருமுறை தோற்க வேண்டிவந்தது.பொறுப்பான எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியவில்லை என்றால் காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்ன?
இந்தக் காமெடி விவாதத்தை, வீடியோ 44 நிமிடம், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் பார்த்துவிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு ஏதேனும் இருக்கிறதா, அல்லது வாக்காளர்களே கருணைக்கொலை செய்துவிட வேண்டியதுதானா? இந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
மீண்டும் சந்திப்போம்.
அமெரிக்கை நாராயணன் பேச்சு வந்தால் நான் மியூட் ல் போட்டு விடுவேன் அல்லது நகர்த்தி விடுவேன்.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteபாவம் அமெரிக்கை! அவருக்கு இது பிழைப்பு. திருச்சி வேலுசாமி மாதிரி உரத்தகுரலில் அடாவடியாகப் பேசுகிறவர் காங்கிரசுக்கு ஓகேவா ?