இன்று பார்த்த செய்திகளில் முக்கியமான வேடிக்கை எதுவென்றால் பிரியங்கா வாத்ராவுக்கு ஏப்ரலில் நடக்கவிருக்கிற ராஜ்யசபா தேர்தல்களில் வாய்ப்பளிக்க சோனியாG முட்டுக்கட்டை போட்டு விட்டதாக வருகிற செய்திதான்! பிரியங்காவின் வருகை ராகுல் காண்டியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்று தயங்குவதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
எனக்கென்னவோ ஏற்கெனெவே 15 வருடம் எம்பியாக இருக்கும் ராகுல் காண்டியே, வாயைக் கொடுத்து நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிற நிலையில் பப்பியும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, சரக்கு ஏதுமில்லை என்பது அம்பலமானால், இன்னும் கேவலம் என்று தாய் மனசு கிடந்து அடித்துக்கொள்வதாகவே தோன்றுகிறது. பாட்டி மாதிரி மூக்கு இருந்தால் மட்டும் போதுமா? பாட்டிக்கு இருந்தமாதிரி மூளை இருக்க வேண்டாமா? 😄😆😈
இஸ்லாமியர்களுக்கு CAA NPR NRC குறித்து எழுந்திருக்கும் அச்சம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதும், அதைப்போக்குவதற்கான முயற்சியும் .. என்ன சொல்கிறார்கள்? ரஜனிகாந்த் மட்டும் என்ன செய்து விடுவார்? எனக்கு எதுவும் புரியவில்லை. உங்களுக்காவது புரிகிறதா? ரஜனிகாந்த் ரசிகர் முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவதை ரஜனியிடமே காட்டியிருக்கலாம் #ஆணியேபுடுங்கவேணாம்
கழகம் இல்லாத தமிழகம் என்றானால் நன்றாகத் தான் இருக்கும்! அதற்காக பிறந்தநாள் பேபியை இப்படியா கலாய்ப்பது?
இவர்கள் சப்பைக்கட்டு கட்டும் பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் தேசிய அடையாள அட்டை ஏற்கனவே பல்லாண்டு காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசியல் குட்டையைக்குழப்ப இவ்வளவு போதாதா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment