Monday, March 16, 2020

மூன்று நல்ல விஷயங்கள்! சேகர் குப்தா! ஓடி ஒளியும் காங்கிரஸ்!

சேகர் குப்தாவின் இந்த 20 நிமிட வீடியோவை நேற்றே The Print தளத்தில் பார்த்தேன். இந்தியாவுக்கு மூன்று நல்ல தொடக்கங்கள் என்று இந்தவீடியோவில் ஃபரூக் அப்துல்லாவின் விடுதலை, யெஸ் பேங்கை மீட்க எடுக்கப்படும் முயற்சிகள், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் முயற்சி இந்த மூன்றையும் இந்தியாவின் மூன்று நல்ல தொடக்கங்களாகப் பார்ப்பது ஏனென்று சேகர் குப்தா கொஞ்சம் காரணகாரியங்களோடு விளக்குகிறார்.

     
சேகர் குப்தா சொல்வதை குண்டுசட்டிக்குள் அரசியல் செய்து பழகிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?  ஃபரூக் அப்துல்லாவின் விடுதலை ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஒரு புதிய துவக்கமாக இருக்கும் என்று சொல்வதோடு சேகர் குப்தா வேறு சிலவிஷயங்களையும் சேர்த்தே சொல்வது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஆர்டிகிள் 370, 35A  இவையெல்லாம் முடிந்துபோன விஷயம். மறுபடியும் மாநில அந்தஸ்து வேண்டும் என்பதைத் தாண்டி, லடாக் தனி யூனியன் பிரதேசமாக ஆனதுகூட விஷயமில்லை! ஃபரூக் அப்துல்லாவுக்கு அவருடைய மகன் ஒமர் அப்துல்லாவும் விடுதலையாகவேண்டும் என்பதில் தான் முதல் கவனம். மெஹபூபா முப்தியின் கட்சி சிதைந்து விட்டது. ஆக இந்த மூன்று முன்னாள் முதல் அமைச்சர்கள் ஏழுமாதங்களாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது தான் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் இதுவரை கண்டிராத அமைதி நிலவுவதற்குக் காரணம் என்று சொல்வதிலும் தவறில்லை. யெஸ் பேங்க் விஷயத்தில் மாறுபட்ட கருத்தைச் சொல்வது இரண்டே பேர்! ஒன்று சுசேதா தலால், இன்னொன்று தன்னைத்தானே பொருளாதார மேதையாக நினைத்துக் கொண்டிருக்கிற ப.சிதம்பரம்! பானாசீனா வங்கிகள் எப்படி இயங்குகின்றன என்று ஒரு ஆறு விஷயங்களைச் சொன்னதில், அந்த ஆறும் யெஸ் பேங்க் விஷயத்தில் தோற்றுப்போயினவே என்பதை சேகர் குப்தா சும்மா அப்படியே ஊதிவிட்டுப் போய் விடுவதை ரசிப்பதற்காகவாவது இந்த வீடியோவை நீங்கள் முழுமையாகப்பார்க்க வேண்டும்! அப்புறம் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இதுவரை எடுத்திருக்கிற முயற்சிகளைக் குறைசொல்லமுடியாது என்பது! பப்பு ராகுல் காண்டி ஏன் இன்னமும் பப்புவாகவே இருக்கிறார் என்பது அமெரிக்கை நாராயணன்களுக்குத் தெரிந்தாலும் வெளியே சொல்ல முடியாத பரிதாபம்!


மத்தியப்பிரதேச சட்டசபை இன்று கூடியதில் கொரோனா வைரஸ் தொற்றைக் காட்டி வருகிற 26 ஆம் தேதிவரை சபாநாயகர் ஒத்திவைத்து விட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா, 16 MLA க்கள் ராஜினாமா மீது சபாநாயகர் முடிவென்ன இப்படி எதையும் பேசாமல் கொரோனா பின்னால் காங்கிரஸ் ஒளிந்து கொண்ட கேவலம் இன்றைக்கு அரங்கேறி இருக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களவையில் ராகுல் காண்டி வங்கித்துறை சிக்கலைப் பற்றி இன்று என்னமோ பேசினாராம்!

இப்படி ஓடி ஒளிகிற ஒருகட்சி எதற்காக இன்னமும் பிழைத்திருக்க வேண்டும்? காங்கிரசுக்கு சரியான தலைமையும் இல்லை, ஜனநாயக நடைமுறைகள் எதையும் பின்பற்றும் குணமுமில்லை. காங்கிரசுக்கு ஏதோவொரு நம்பிக்கையில் வாக்களிக்கிற ஜனங்கள் கொஞ்சம் இருக்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் போதுமா? அந்த ஜனங்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றுகிற அமைப்பு, தலைவர்கள், பாசிட்டிவான செயல்திட்டங்கள் என்று எதுவுமே இல்லாமல் ஜீவிக்க அந்தக்கட்சிக்கு உரிமையோ தகுதியோ இருக்கிறதா? 

மீண்டும் சந்திப்போம்.    
             
    

2 comments:

  1. ராகுல் மன அழுத்தத்தில் உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளத்தான் அடிக்கடி வெளிநாட்டுக்குத் தப்பியோடி விடுகிறாரே ஜோதிஜி! அப்படியும் மன அழுத்தம் தீரவில்லையென்றால் நாட்டில் மனநலக்காப்பகங்களா இல்லை?!

      விஷயம் வேறு! இந்திரா பேரன் ஆளப்பிறந்தவன் எவருக்கும் அடங்க மாட்டேன் எவர்சொல்லையும் கேட்கமாட்டேன்! வாய்க்குவந்ததைப் பேசுவேன் என்றிருந்தால் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதுதான்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)