வாய்ப்புள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற மாதிரி சமீப காலங்களில் அரசியல்வாதிகள் தங்களுடைய நினைவுகள் அல்லது சுயசரிதையை எழுதிக்கொள்வது ( காசுபார்ப்பது என்பது ரசக்குறைவான நேரடி அர்த்தம்) வாடிக்கையாகி வருவதில் காங்கிரசின் அபிஷேக் மனு சிங்வியும் சேர்ந்து கொண்டிருக்கிறார். From the trenches என்ற தலைப்பில் அவர் நடத்திய சில பிரபலமான வழக்குகளைப் பற்றிய புத்தகம் போல இருக்கிறது. ரூ.599/- என்று விலைகுறிக்கப்பட்ட புத்தகத்தை Flipkart தளம் ரூ.404/- என்று கூவிக்கூவி விற்கப் பார்க்கிறது.
The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ராவும் அபிஷேக் மனு சிங்வியும் இந்தப்புத்தகத்தைப் பற்றிய அறிமுகமாகப் பேச ஆரம்பித்து, அவருடைய இறந்துபோன அல்சேஷன் ஷெப்பர்ட் நாய் அப்புறம் சில வழக்குகள், கடைசியில் காங்கிரஸ் கட்சி தலை(மை)யில்லா முண்டமாக நிற்பதில் வந்து முடிகிற வேடிக்கையைப் பாருங்கள்!

34 வயதில் சீனியர் அட்வொகேட், 37 வயதில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல், 39 வயதில் உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனுடைய துணைத்தலைவர் என்று மிக இளம் வயதிலேயே சாதித்தவர் என்பதை இவருடைய சாதனையாகச் சொல்வதா, காங்கிரஸ் அரசியல் சார்பு நிலைக்குக் கிடைத்த பரிசுகளா என்பதை இப்போது கிளறுவது அனாவசியம்! ஊரறிந்த ரகசியத்தைக் கிளறித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன! வெள்ளித்தட்டில் வைத்துக் கொடுத்தாலும், இதை நான் வாசிப்பதாயில்லை என்பதைப் பதிவு செய்தாலே போதுமானது!
A memoir by Woody Allen, rumoured for years and once thought unpublishable in the #MeToo era, is coming out next month. Grand Central Publishing, a division of Hachette Book Group, announced on Monday that the book is called Apropos of Nothing and will be released on 7 April. “The book is a comprehensive account of his life, both personal and professional, and describes his work in films, theatre, television, nightclubs and print,” according to Grand Central. “Allen also writes of his relationships with family, friends and the loves of his life.”
Woody Allen! அமெரிக்காவின் மிகச்சிறந்த காமெடியன்! புகழ் பெற்ற எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனரும் கூட! ஒருவரி பன்ச்சுக்கு மிகவும் புகழ் பெற்றவர்! இவருடைய இந்த சுயசரிதை ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே வெளிவந்திருக்க வேண்டியது! 1990களில் தான் சிறுமியாக இருந்த நாட்களில், தன்னைப் பாலியல்சீண்டல் செய்தார் என்று ஒரு #MeToo விவகாரத்தை சொந்த மகள் டைலன் சொன்னதில் இந்த 84 வயது பிரபலத்தின் செல்வாக்கு மளமளவென்று சரிய ஆரம்பித்தது. தயாரிப்பு நிறுவனங்கள் இவருடனான தொடர்பைக் கத்தரித்துக் கொண்டன. இவருடைய பலபடங்களில் நாயகியாக நடித்த மியா ஃபாரோவுடைய மகனும் மகளும் ஆலனுடைய சொந்தக்குழந்தைகள் அல்ல. Woody Allen இடமிருந்து மியா ஃபாரோ பிரிந்து வாழ்கிறார் என்பது வேறு விஷயம். நிரூபிக்கப்படாத 25 வருடங்களுக்கு முந்தைய விவகாரம் ஒரு பிரபலத்தை அனேகமாகக் கவிழ்த்தே விட்டிருக்கலாம்! ஆனால் சென்ற வரு டம் அமேசான் நிறுவனம் இவருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதில் ஆலன் தொடர்ந்த வழக்கில் 68 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கொடுத்து அமேசான் நிறுவனம் கோர்ட்டுக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டது என்பதில் ஆலன் தரப்பு நியாயமும் எடுபட்டிருக்கிறதென்றே சொல்லலாம்.
In February, Allen filed a $68 million lawsuit against Amazon that claimed the tech giant’s streaming video branch wrongfully terminated his contract due to the “25-year old, baseless allegation” of sexual abuse leveled by his adoptive daughter Dylan Farrow. The suit stated that Amazon didn’t have the legal authority to terminate the director’s contract and claimed that Amazon was aware “that its actions would cause substantial damage to Mr. Allen.” The contract termination effectively canceled the release of the writer-director’s next four films, which would have resulted in “minimum guaranteed payments totaling between $68 million and $73 million.” செட்டில் மென்ட் தொகையை எப்படி முடிவுசெய்தார்கள் என்று புரிகிறதா?

வளர்ப்பு மகன் ரோனன் ஃபாரோவும் கூட ஒரு எழுத்தாளர்தான்! சென்ற ஆண்டு #MeToo சர்ச்சையில் சிக்கிய இன்னொரு திரைப்படப்பிரபலம் ஹார்வி வெயின்ஸ்ட்டீனைப் பற்றி எழுதி இதே புத்தக நிறுவனத்தின் துணை நிறுவனம் வெளியிட்ட Catch and Kill புத்தகத்துக்கு புலிட்சர் விருதும் கூடக் கிடைத்தது. இனிமேல் ஹாட்செட் புத்தக நிறுவனத்துடன் எந்த விதமான ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று சூளுரை செய்திருக்கிறார்!
ஆலனுடைய சுயசரிதையையும் கூடத்தான் படிப்பதாய் இல்லை! காரணம் விசேஷமாக எதுவுமில்லை. இதுவரை கிளம்பிய அக்கப்போர்களிலேயே நிறைய நேரம் செலவிட்டபிறகு, புத்தகம் கொடுக்கக் கூடிய சுவாரசியம் நிச்சயம் குறைவாகத்தான் இருக்கும்!
படித்த, படிக்க விரும்புகிற புத்தகங்களைப் பற்றிப் பேச மீண்டும் சந்திப்போம்.

No comments:
Post a Comment