கரோனா வைரஸ் தொற்று அங்கே இங்கேயென்று ஆட்டம் காட்டிவிட்டு இந்தியாவுக்குள்ளும் நுழைந்து விட்டது. அலட்சியமாக இருப்பது தனக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் பெரும் கேடு என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது . மத்திய மாநில அரசுகள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து இந்த விஷயத்தில் செயல்படுகிறார்கள் என்றே நான் நம்புகிறேன்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிற ஒன்றரை நிமிட வீடியோவில் மிக எளிமையான முன்னெச்சரிக்கைகள் என்னென்ன என்று சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். இப்போது அலைபேசிகளில் சுகாதாரத்துறை சில குறிப்புக்களை ஆங்கிலத்தில் சொல்வதைக் கேட்டாலும் போதும். வரும்நாட்களில் பிராந்திய மொழிகளிலும் வரும் என்று நம்புகிறேன்.
1. கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். சோம்பல் கொள்ளாமல் பலமுறை சுத்தம் செய்து கொள்வது முக்கியம். Hand Sanitisers கைவசம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.சானிடைசர் இல்லையா? இருக்கவே இருக்கிறது லைஃபாய் சோப், நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்துகொண்டால் போதும்.
2. இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது துண்டால் பொத்திக்கொண்டு செய்வது அவசியம். இருமல் தும்மலோடு கைகளை கண் மூக்கு பகுதிகளைத் தொடாதீர்கள்! கைகளை மறுபடி சுத்தம் செய்துகொள்வதும் அவசியம்! இதோடு காய்ச்சலோ, மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவோ உணர்ந்தால் தயங்காமல் மருத்துவரிடம் காண்பித்து தகுந்த ஆலோசனையை பெறவும். வீட்டிலேயே காய்ச்சலை அறிய கருவிகள் நிறையக் கிடைக்கின்றன. வெறும் காய்ச்சல் என்றாலும் ஒருநாளைக்கு இருமுறை டெம்பெரேச்சர் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
3. அதிகக் கூட்டம் உள்ள இடங்கயக் ள், பயணங்களைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
4. அரசு சுகாதாரத்துறை வெளியிடும் எச்சரிக்கைகளைத் தவறாமல் பின்பற்றுவது நல்லது. அரசின் முயற்சிகளை ஏளனம் செய்யாமல், வதந்தி பரப்பாமல் இருப்பது மிகமிக நல்லது.
5. மாஸ்க் அணிவது சாதாரண நிலைகளில் அவசியம் இல்லை. இருமல் தும்மல் தொடர்ந்து இருந்தால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்தாமல் இருக்க அணிவது நல்லது. பானு கோம்ஸ் கொஞ்சம் வருத்தப் பட்டு ஒரு முகநூல் பகிர்வில், மாஸ்க் அணிந்த ஒருவர் கர்மசிரத்தையாகக் கழற்றித் தும்மிவிட்டு மறுபடி அணிந்து கொண்டது போலாகி செய்வதற்கு மாஸ்க் அணியாமலேயே இருந்துவிடலாம்.
நீண்டபட்டியலாக இதை வளர்த்துக் கொண்டு போக வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மருத்துவ மனைகளில், இணையதளங்களில் வேண்டிய அளவு முன்னெச்சரிக்கைகள், தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழும்போது செய்யவேண்டியவைகள் என்று கிடைக்கின்றன. பதற வேண்டியதில்லை தான்! அதற்காக அலட்சியமாக இருந்துவிடவும் வேண்டாமே!
கொஞ்சம் சுதாரிப்புடன் இருந்தாலே போதுமானது எங்கே தொற்றிக்கொள்ளுமோ, சீரியல் பார்க்க விடாமல் சோஷியம் மீடியாவில் அரட்டையடிக்க விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்களோ என்று ஓடவும் வேண்டாம்! ஒளியவும் வேண்டாம்!
மீண்டும் சந்திப்போம்.
கொஞ்சம் சுதாரிப்புடன் இருந்தாலே போதுமானது எங்கே தொற்றிக்கொள்ளுமோ, சீரியல் பார்க்க விடாமல் சோஷியம் மீடியாவில் அரட்டையடிக்க விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்களோ என்று ஓடவும் வேண்டாம்! ஒளியவும் வேண்டாம்!
மீண்டும் சந்திப்போம்.
பயனுள்ள பதிவு...
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் எல்லாருக்கும் நல்ல புத்தியைக் கொடுத்து காத்தருள்வானாக...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteகரோனா வைரஸ் சீனர்களால் உருவாக்கப்பட்ட கொடூரம் என்கிறார்கள். இங்கே பொறுப்பில்லாத ஊடகங்கள் வீணாக வதந்திகளையும் அச்சத்தையும் விதைக்கிற வேலையைத்தான் செய்யும் என்பதுதான் கவலைதரும் விஷயம். ஒரு சரியான புரிதலை சக மனிதர்களிடம் ஏற்படுத்த வேண்டியது ஒவொருவருடைய கடமையும் கூட !
வெய்யில் என்றார்கள், சூடு என்றார்கள்... சென்னையிலேயே கொரானா கேஸ்கள் ரிபோர்ட் ஆகின்றன.
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்!
Deleteதவறான செய்திகளைப் பரப்புவதே பெரிய பாவம் என்று உணராதவர்கள் செய்கிற வேலை நிறைய! எங்கள் பிளாகிலும் கரோனா பற்றிய ஒரு விழிப்புணர்வை சுருக்கமாக எழுதலாமே.