அந்தப்பக்கம் திரௌபதி படத்தைப் பற்றி எழுதியதை வாசித்தீர்களா? News 7 சேனலின் நெல்சன் சேவியர், திரௌபதி படத்துக்கு ஜனங்கள் அதிக வரவேற்பளிப்பதில் நொந்து ட்வீட்டரில் பொங்கியது சேனலுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்றோ என்னவோ திரௌபதி படக்குழுவினருடன் ஒரு நேர்காணலை நடத்தி சமன் செய்திருக்கிறார்கள் போல!
நாடகக் காதல், ஆணவக்கொலைகள் என்ற பரப்புரை தாண்டி, ஒரு மிகப்பெரிய மோசடி நடந்ததும், அப்படியே அமுங்கிப்போனதுமாக இருந்த விஷயத்தை திரௌபதி படம் மீண்டும் கவனப்படுத்தி இருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், அவர்களுக்குத் துணையாக இருந்தவர்கள் மீது இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால், அரசும், பார் அசோஸியேஷனும் ஊமைச் சாமிகளாக அப்படியே அடக்கிவாசிப்பது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடுவதற்குப் பதிலாக, பாமகவுக்கு அரசியல் ஆதாயம் தேடித்தருவதோடு திரௌபதி படம் நின்றுவிடுமானால், என்வரையில் அது பெருத்த ஏமாற்றம் என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டி இருக்கிறது.
இதை எப்படி எடுத்துக்கொள்வது? கமல் காசர் வந்து தான் பொழிப்புரை எழுதித்தர வேண்டுமோ? அப்புறம் அந்த என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் என்பதன் வரையறை என்னவோ??
எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் லந்து அடிப்பதில் திமுகவின் சாயம் என்ன ஆகிறதாம்? வந்து பாருங்கள்!
தீமிதித்து கருணாநிதியிடம் திட்டு வாங்கிய அந்தியூர் செல்வராஜை ராஜ்யசபைக்கு நியமித்து இருப்பதன் மூலம் திமுக இந்துக் கட்சியே என ஸ்டாலின் தெள்ளத்தெளிவாய் தெரிவித்திருப்பதை, செயற்குழு லெவல் ஐடி பிரிவின் மைனாரிடி அணி உறுப்புல்லாஹ் எப்படியெல்லாம் முட்டு கொடுக்கவேண்டி இருக்கிறது😂😂😂
மதன் ரவிச்சந்திரன் வேறு நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.
அப்போ இவ்ளோ நாள் பெயர் இருந்ததாக சொல்லப் பட்ட hmm hmm நிலைமை...
எசமான்: தம்பி நீங்க திறமையானவர் தான் நல்ல செல்வாக்கு இருக்கு அதுவே நாளைக்கு சின்னவற்கு பிரச்னையா வந்துட்டேனா... போ போய் வழக்கம் போல பூண்டு தட்டி போட்டு சூடா மசால் வடை வாங்கிட்டு வா...
hmm hmm : சரிங்க எசமான்🔥🔥🔥
எசமான்: தம்பி நீங்க திறமையானவர் தான் நல்ல செல்வாக்கு இருக்கு அதுவே நாளைக்கு சின்னவற்கு பிரச்னையா வந்துட்டேனா... போ போய் வழக்கம் போல பூண்டு தட்டி போட்டு சூடா மசால் வடை வாங்கிட்டு வா...
hmm hmm : சரிங்க எசமான்🔥🔥🔥
இந்த முகநூல்தான் எப்படி ஒவ்வொருவருடைய மன வக்கிரத்தையும் வெளிப்படுத்துகிற கருவியாக இருந்து வதைக்கிறது!!
இது ஒன்றுதான் பாக்கி இருந்தது! இன்றிரவு அதுவும் தீருகிறது. திருப்திதானே!
மீண்டும் சந்திப்போம்.
படித்தவர்கள் திமுக வில் வளர வேண்டும். அது திமுக வில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை.
ReplyDeleteவாருங்கள் ஜோதிஜி!
Deleteநீங்கள் சொல்வது புரியவில்லை. படித்தவர்களே திமுகவில் இல்லை என்றா சொல்கிறீர்கள்? படித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பண்புள்ளவர்களாக இருக்கிறார்களா, அல்லது வசதி வாய்ப்புக்காகத் தலைமையைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்களா என்பது தான் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.
கழகங்களுடைய so called திராவிடக் கொள்கைகளுக்காக எவரும் கட்சியில் இல்லை என்பது மட்டும் தெளிவு.