Showing posts with label சேகர் குப்தா. Show all posts
Showing posts with label சேகர் குப்தா. Show all posts

Thursday, March 11, 2021

ஜனநாயகம் சரி! அது என்ன லிபரல் ஜனநாயகம்?

சுதந்திரத்தை எதைவைத்து எப்படி அளவிடுவது? இது மார்ச் 5ஆம் தேதியன்று இந்தப்பக்கங்களில் எழுதியது தான்!ஆனால், நண்பர்களுக்கு இந்தப்பதிவின் மீது என்ன கருத்து இருந்தது என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. இந்திய ஜனநாயகத்தைப்பற்றி மதிப்பீடு செய்வதில்,புதிது புதிதாகக் கிளம்பி யார் யாரெல்லாமோ வருகிறார்கள்.


2004 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட ட்வீட்டரில் எதையாவது கீச்சிவிட்டுப்போவது மட்டுமே முழுநேர அரசியலாகத் தெரிந்து வைத்திருக்கிற ராகுல் காண்டிக்கு கிளாஸ் எடுக்க யாரோ ஒரு அமெரிக்க NGO அல்லது V DEM மாதிரி ஒரு சுவீடிஷ் அமைப்போதான் வர வேண்டியிருக்கிறது. அதை எடுத்துக்கொடுக்கவுமே கூட உள்ளூரில் யாரோ சுபாங்கி மிஸ்ரா தான் வரவேண்டி இருக்கிறது என்பது சோனியா வாங்கிவந்த வரம். 


அந்த சுவீடிஷ் அமைப்பு வெளியிட்டிருக்கிற 52 பக்க அறிக்கையில்  என்ன அடிப்படைகளை வைத்து இப்படி இந்தியா ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று மதிப்பிட்டார்களாம்? ராகுல் காண்டிக்கு அதெல்லாம் தெரியாது, புரியவும் புரியாது! மோடி ஒயிக என்று கூவ ஒரு வாய்ப்பு என்பதற்குமேல் பப்புவுக்கு எதுவும் தெரியாது.


அமெரிக்கா, ஸ்வீடன்ல இருந்து ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கியிருந்தால் இப்படி லிபரல் ஜனநாயக க்ளாஸ் எல்லாம் எடுத்திருக்க மாட்டார்களே #சேகர்குப்தா ஐயா!
Quote Tweet
Shekhar Gupta
@ShekharGupta
·
Ok, people, the world hasn’t ganged up on India. We need to look within. After Freedom House Sweden’s respected @vdeminstitute downgrades Indian democracy to an electoral autocracy, with Kenya & Lebanon. The full report here. v-dem.net/files/25/DR%20
Image

ஜனநாயகம் சரி! ஏதோ குன்ஸாவாகப் புரிகிறது. அது என்ன லிபரல் ஜனநாயகம்? 

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சொல்லுங்களேன்!     

Friday, March 5, 2021

சுதந்திரத்தை எதைவைத்து, எப்படி அளவிடுவது? #சேகர்குப்தா

Freedom House என்றொரு அமைப்பு இருப்பது யாருக்காவது தெரியுமா? ஜனநாயகம், சுதந்திரம் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு இருக்கிறது என்று இவர்கள் மதிப்பீடு செய்வதை இதற்கு முன்னால் கேள்விப்பட்டது உண்டா? ட்வீட்டர், முகநூல் முதலான big tech ஊடகங்கள் மீதான அவநம்பிக்கையும் கோபமும்  எதிர்ப்பாகப் பெருகி வருகிற நேரம் பார்த்து இந்த அமெரிக்க அமைப்பு, இப்படி ஒரு  மதிப்பீட்டை வெளியிட்டிருப்பது தற்செயலானது தானா? பாகிஸ்தான், இந்தியா இருநாடுகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கிற இந்த மதிப்பீடு நம்பக கூடிய ஒன்றாக இருக்க முடியுமா? 

  

சேகர் குப்தா இந்த 27 நிமிட வீடியோவில் விளக்கிச் சொல்லியிருப்பது எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலை நீங்கள்தான் வந்து சொல்ல வேண்டும்!


சீன விவகாரத்தில் மட்டும் மத்திய அரசின் அணுகுமுறை மீது கடுமையாகச் சாடும் ப்ரம்ம செலானி சொல்கிற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.

சுதந்திரத்தை, இங்கே கூக்குரலிடும் Paid Media வை வைத்து மதிப்பிடமுடியாதென்பது எவ்வளவு நிஜமோ அதுபோலவே வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்று அதை இந்த நாட்டுக்கெதிராகவே பயன்படுத்தும் PETA. AMENESTY போன்ற அமைப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவந்ததை வைத்தும் கூட மதிப்பிட முடியாது.

சேகர் குப்தா, அந்த அமைப்பு எது எதை வைத்து எப்படி மதிப்பீடு செய்தார்கள் என்று சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுடைய கருத்தை இங்கே கொஞ்சம் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, February 23, 2021

மீண்டும் #பாண்டிச்சேரி ::: சத்திய மூர்த்தி பவனில் விசும்பல் சத்தம்!

மாற்றுக்கருத்தையும் தெரிந்து கொள்வதும் அதை இங்கே பகிர்வதும் எனக்கும் இங்கே வரும் நண்பர்களுக்கும் புதிது அல்ல ஒரு முனிசிபாலிடி அளவே இருக்கும் பாண்டிச்சேரி அரசியலுக்கு இத்தனை முக்கியத்துவமா என்றால், ஆமாம் என்பதே பதிலாக இருக்கும்! காரணம் ஊடகங்கள் தேர்தல் பரபரப்புச் செய்திகள் வேறெதுவும் இல்லாமல் இந்த விஷயத்துக்குக் கொடுத்த ஓவர் தம்பட்டம் தான்! சேகர் குப்தா, நான் மதிக்கும் ஒரு அனுபவமுள்ள ஊடகக் காரர், இந்த விஷயத்திலும் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆவலோடு இருந்தேன்.


இந்த 20 நிமிட வீடியோவில் சேகர் குப்தா கடந்த ஏழு வருடங்களில் பிஜேபி ஒரு தெளிவான அரசியல் நோக்கத்துடன் கவிழ்த்திருக்கிற /கைப்பற்றியிருக்கிற 9வது ஆட்சி என்று சொல்லிவிட்டு, அதே மூச்சில் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றும் சொல்கிறார். மாற்றுப் பார்வை என்ற வகையில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை உண்டு என்று இதே பாண்டிச்சேரி காங்கிரசார் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டதை, சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். வேறுவழியே இல்லாமல் அவையை விட்டு வெளியே(றிய) ஓடிய  நாராயணசாமி கேலிப்பொருளானார் என்பதை சேகர் குப்தா சொல்லவில்லை. ஆனால் வேறு சில பயனுள்ள தகவல்களை சொன்னதென்னவோ நிஜம் ஆனால் தமிழக ஊடகங்கள் எப்படி இந்தவிஷயத்தைப் பார்க்கின்றன? ஆயுத எழுத்து::தந்திடிவி  வேடிக்கை பார்த்த திமுக இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்! 


தினமலருக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி! மொய்லி வந்தா மட்டும் கருணாநிதி அன்றைக்கு 63 சீட் அள்ளிக் கொடுத்தது போல இன்றைக்கும் கிடைத்துவிடுமா என்ன?

மீண்டும் சந்திப்போம்    


           

Monday, March 16, 2020

மூன்று நல்ல விஷயங்கள்! சேகர் குப்தா! ஓடி ஒளியும் காங்கிரஸ்!

சேகர் குப்தாவின் இந்த 20 நிமிட வீடியோவை நேற்றே The Print தளத்தில் பார்த்தேன். இந்தியாவுக்கு மூன்று நல்ல தொடக்கங்கள் என்று இந்தவீடியோவில் ஃபரூக் அப்துல்லாவின் விடுதலை, யெஸ் பேங்கை மீட்க எடுக்கப்படும் முயற்சிகள், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் முயற்சி இந்த மூன்றையும் இந்தியாவின் மூன்று நல்ல தொடக்கங்களாகப் பார்ப்பது ஏனென்று சேகர் குப்தா கொஞ்சம் காரணகாரியங்களோடு விளக்குகிறார்.

     
சேகர் குப்தா சொல்வதை குண்டுசட்டிக்குள் அரசியல் செய்து பழகிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?  ஃபரூக் அப்துல்லாவின் விடுதலை ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஒரு புதிய துவக்கமாக இருக்கும் என்று சொல்வதோடு சேகர் குப்தா வேறு சிலவிஷயங்களையும் சேர்த்தே சொல்வது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஆர்டிகிள் 370, 35A  இவையெல்லாம் முடிந்துபோன விஷயம். மறுபடியும் மாநில அந்தஸ்து வேண்டும் என்பதைத் தாண்டி, லடாக் தனி யூனியன் பிரதேசமாக ஆனதுகூட விஷயமில்லை! ஃபரூக் அப்துல்லாவுக்கு அவருடைய மகன் ஒமர் அப்துல்லாவும் விடுதலையாகவேண்டும் என்பதில் தான் முதல் கவனம். மெஹபூபா முப்தியின் கட்சி சிதைந்து விட்டது. ஆக இந்த மூன்று முன்னாள் முதல் அமைச்சர்கள் ஏழுமாதங்களாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டது தான் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் இதுவரை கண்டிராத அமைதி நிலவுவதற்குக் காரணம் என்று சொல்வதிலும் தவறில்லை. யெஸ் பேங்க் விஷயத்தில் மாறுபட்ட கருத்தைச் சொல்வது இரண்டே பேர்! ஒன்று சுசேதா தலால், இன்னொன்று தன்னைத்தானே பொருளாதார மேதையாக நினைத்துக் கொண்டிருக்கிற ப.சிதம்பரம்! பானாசீனா வங்கிகள் எப்படி இயங்குகின்றன என்று ஒரு ஆறு விஷயங்களைச் சொன்னதில், அந்த ஆறும் யெஸ் பேங்க் விஷயத்தில் தோற்றுப்போயினவே என்பதை சேகர் குப்தா சும்மா அப்படியே ஊதிவிட்டுப் போய் விடுவதை ரசிப்பதற்காகவாவது இந்த வீடியோவை நீங்கள் முழுமையாகப்பார்க்க வேண்டும்! அப்புறம் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இதுவரை எடுத்திருக்கிற முயற்சிகளைக் குறைசொல்லமுடியாது என்பது! பப்பு ராகுல் காண்டி ஏன் இன்னமும் பப்புவாகவே இருக்கிறார் என்பது அமெரிக்கை நாராயணன்களுக்குத் தெரிந்தாலும் வெளியே சொல்ல முடியாத பரிதாபம்!


மத்தியப்பிரதேச சட்டசபை இன்று கூடியதில் கொரோனா வைரஸ் தொற்றைக் காட்டி வருகிற 26 ஆம் தேதிவரை சபாநாயகர் ஒத்திவைத்து விட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா, 16 MLA க்கள் ராஜினாமா மீது சபாநாயகர் முடிவென்ன இப்படி எதையும் பேசாமல் கொரோனா பின்னால் காங்கிரஸ் ஒளிந்து கொண்ட கேவலம் இன்றைக்கு அரங்கேறி இருக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களவையில் ராகுல் காண்டி வங்கித்துறை சிக்கலைப் பற்றி இன்று என்னமோ பேசினாராம்!

இப்படி ஓடி ஒளிகிற ஒருகட்சி எதற்காக இன்னமும் பிழைத்திருக்க வேண்டும்? காங்கிரசுக்கு சரியான தலைமையும் இல்லை, ஜனநாயக நடைமுறைகள் எதையும் பின்பற்றும் குணமுமில்லை. காங்கிரசுக்கு ஏதோவொரு நம்பிக்கையில் வாக்களிக்கிற ஜனங்கள் கொஞ்சம் இருக்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் போதுமா? அந்த ஜனங்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றுகிற அமைப்பு, தலைவர்கள், பாசிட்டிவான செயல்திட்டங்கள் என்று எதுவுமே இல்லாமல் ஜீவிக்க அந்தக்கட்சிக்கு உரிமையோ தகுதியோ இருக்கிறதா? 

மீண்டும் சந்திப்போம்.    
             
    

Wednesday, March 4, 2020

சேகர் குப்தா! #போட்டுத்தாக்குகிறார்

சேகர் குப்தா மாதிரியான கருத்து கந்தசாமிகளிடம் தினசரி சிக்கிக் கொண்டு அல்லாடுகிறோமே, ஒரு மாறுதலுக்காகப் புத்தகங்களை பற்றிப் பேசலாம் என்றால் அபிஷேக் மனு சிங்வி  புத்தகம் மாதிரியோ Woody Allen சுயசரிதை மாதிரியோ வந்து நின்றதில் சேகர் குப்தாவே தேவலாம் என்றாகிவிட்டது!


ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானிடம் விட்டுவிட்டு இந்தியா ஒதுங்கிக்கொள்ள 5 காரணங்கள் என்று இந்த 19 நிமிட வீடியோவில் போட்டுத்தள்ளுகிறார்.

ஆப்கானிஸ்தானைக் கட்டிக்கொண்டு அழப்போவதாக யாராவது இவரிடம்  வந்து சொன்னார்களா?

என்னமோ போடா மாதவா! ஒன்றுமே புரியவில்லை என்றாலும் விடமாட்டேனென்கிறாரே! என்ன செய்ய?

மீண்டும் சந்திப்போம்.      

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)