சுதந்திரத்தை எதைவைத்து எப்படி அளவிடுவது? இது மார்ச் 5ஆம் தேதியன்று இந்தப்பக்கங்களில் எழுதியது தான்!ஆனால், நண்பர்களுக்கு இந்தப்பதிவின் மீது என்ன கருத்து இருந்தது என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. இந்திய ஜனநாயகத்தைப்பற்றி மதிப்பீடு செய்வதில்,புதிது புதிதாகக் கிளம்பி யார் யாரெல்லாமோ வருகிறார்கள்.
2004 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட ட்வீட்டரில் எதையாவது கீச்சிவிட்டுப்போவது மட்டுமே முழுநேர அரசியலாகத் தெரிந்து வைத்திருக்கிற ராகுல் காண்டிக்கு கிளாஸ் எடுக்க யாரோ ஒரு அமெரிக்க NGO அல்லது V DEM மாதிரி ஒரு சுவீடிஷ் அமைப்போதான் வர வேண்டியிருக்கிறது. அதை எடுத்துக்கொடுக்கவுமே கூட உள்ளூரில் யாரோ சுபாங்கி மிஸ்ரா தான் வரவேண்டி இருக்கிறது என்பது சோனியா வாங்கிவந்த வரம்.
அந்த சுவீடிஷ் அமைப்பு வெளியிட்டிருக்கிற 52 பக்க அறிக்கையில் என்ன அடிப்படைகளை வைத்து இப்படி இந்தியா ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று மதிப்பிட்டார்களாம்? ராகுல் காண்டிக்கு அதெல்லாம் தெரியாது, புரியவும் புரியாது! மோடி ஒயிக என்று கூவ ஒரு வாய்ப்பு என்பதற்குமேல் பப்புவுக்கு எதுவும் தெரியாது.
ஜனநாயகம் சரி! ஏதோ குன்ஸாவாகப் புரிகிறது. அது என்ன லிபரல் ஜனநாயகம்?
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? சொல்லுங்களேன்!
உலக மக்களையெல்லாம் வறுமையில் வாட்டி, அரசாங்க, மக்கள் சொத்துக்களைக் கொள்ளயடித்து ஸ்விஸ் வங்கியில் பதுக்க வழி செய்யும் உலகக் கொள்ளையரான ஸ்விஸ்தான் நம் ஜனநாயகத்தைப் பற்றிச் சொல்லணுமா?
ReplyDeleteSwiss உலகின் ஏகபோக வாங்கிக்கொள்ளையர்களாக இருந்ததெல்லாம் அந்தக்காலம்! இங்கே குறைத்திருப்பது Sweden நாட்டில் இருக்கும் ஒரு இன்ஸ்டிட்யூட். அமெரிக்காவும் சரி, சுவீடனும் சரி தங்களுடைய ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய /தலையில் கட்ட முடியாமல் இருக்கிற நிலையில், மறைமுகமாக செய்யப்படும் lobby. swedish Gripen போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயன்று தோற்று , ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டது நினைவுக்கு வருகிறதா?
Delete