ஆபாசராசாபேச்சுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதைக் குறித்து திமுகவினர் யாரும் வாய்திறக்க வேண்டாம். கொஞ்சநாட்களில் சர்ச்சை, எதிர்ப்பெல்லாம் அப்படியே அமுங்கிப்போய்விடும் என்று இசுடாலின் கருதுவதாகத் தோன்றுகிறது. அதுபோலவே தேமுதிகவின் சரிவுக்கு என்ன காரணமாம்? அதை வெறும் இரண்டே முக்கால் நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா என்ன?
தேமுதிகவின் சரிவுக்கு விஜய பிரபாகரன் ஒருவரை மட்டுமே குறைசொல்கிற இந்தச் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தினமலர் தேர்தல்களம் 8 பக்க இணைப்பில் நல்லா இருந்த கட்சியும் நாலு சகுனி பசங்களும் என்று தலைப்புக்கொடுத்து,ஒரு மிமிக்ரி கலைஞன் விஜயகாந்த் மாதிரியே பேசியதைச் சொல்லி சப்பென்று முடித்திருக்கிற மாதிரியே இந்த வீடியோ செய்தியும் இருக்கிறது.
நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி பேச்சுக்கு கமல் காசரின் கட்சி பதில் சொல்லியிருப்பது திமுகவினருக்குத் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதாகவே இருந்தது.
முன்னதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு. ஏழை, எளிய மக்களை, அவர்களின் வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான ஓட்டு. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
காலைக் கடன்களைக் கழிக்க பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அதைச் சரிசெய்ய கோடிக்கணக்கிலான கழிப்பறைகளை நாடு முழுவதும் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் பெரும் பங்கு பயனாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.அதேபோல், கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், தேர்தலின்போது பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல், இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் தெரிவித்து அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
வானதி சீனிவாசன் போன்ற துக்கடாக்களுடன்.... என்ன ஒரு ஆணவமான அறிக்கை?! தைரியம் இருந்தால் சவால் விட்ட ஸ்ம்ருதி ஈரானியுடனேயே விவாதம் செய்ய கமல் காசர் விருப்பம் தெரிவித்திருக்க வேண்டியது தானே! ஏற்கெனெவே ஸ்ம்ருதியுடன் விவாதம் செய்து பப்பரப்பே என்று கமல் காசர் தவித்துத் தண்ணீர் குடித்த கதை மறந்து போய்விட்டதோ?
நினைவு படுத்திக்கொள்ள இங்கே 90 நிமிட விவாதம்
இது தமிழில் 5 நிமிடச் சுருக்கம்.
பிழைப்பு கெட்டுப்போன காங்கிரஸ், திராவிடங்களைச் சொல்கிறாரோ ராகுல் காண்டி?!
தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது? என்கிற கேள்வி எனக்குள் உறுத்திக்கொண்டே இருந்ததற்கு விடைசொல்கிற மாதிரி முகநூலில் ஒரு பகிர்வை இப்போது பார்த்தேன்:
மீண்டும் சந்திப்போம்
அண்ணாமலை!...
ReplyDeleteஆன்மீகத்தில் வெகு கம்பீரமான பெயர்.. நிகரானது ஏதும் இல்லை..
ஜெய்ஹிந்த்..
உண்மைதான் துரை செல்வராஜூ சார்!
Deleteஅரசியலிலும் இந்த நிஜ அண்ணாமலை சாதிப்பார் என்றே எனக்கும் உறுதியாகத் தோன்றுகிறது!
எரிகின்ற கொள்ளியில்
ReplyDeleteஎந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?..
காசர்களைப் பற்றி பேசற்க!..
தேர்தல் காலத்தில் சீமான், கமல் காசர், டிடிவி தினகரன் போன்ற சில்லறைகளை ஒதுக்கி வைக்க முடியாதே சார்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அஜெண்டா இருப்பதில், ஏற்கெனெவே குழம்பியிருக்கும் அரசியல் குட்டையை மேலும் குழப்புவது ஏன் எதற்காக என்பதைப்பேசியே ஆகவேண்டியிருக்கிறது இல்லையா?
Delete