முந்தைய பதிவில் உங்கள் பார்வையில் நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்கள் யார் என்று எழுப்பியிருந்த ஒரு கேள்விக்கு இன்னமும் நண்பர்களிடமிருந்து பதில் எதுவும் இல்லை. ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே பதில் சொல்ல இத்தனை தயக்கம் என்றால், முன்பின் தெரியாதவர்கள் மைக்கை நீட்டிக் கொண்டு உங்கள் ஒட்டு யாருக்கு என்ற கேள்வியோடு வந்தால் ஜனங்கள் மனம் திறந்து பதில் சொல்லிவிடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கருத்துக் கணிப்புக்கள் என்ற பெயரில் ஊடகங்கள் தொடர்ந்து காசுக்கு கூவுவதைப் பார்க்கையில் என்ன நினைக்கத் தோன்றும்?கருத்தும் கணிப்பும் என்ற குறியீட்டுச்சொல்லை வைத்து 17 பதிவுகள் எழுதியிருக்கும் எனக்கே அலுப்புத் தட்டுகிற அளவுக்குத் திகட்டி விட்டது. தேர்தலுக்குத் தேர்தல் கருத்துக் கணிப்பு என்கிற கேலிக்கூத்தை நடத்தி வந்த லயோலா கல்லூரி கூட மானம் கெட்டுப்போனதில் இந்த 2021 தேர்தல்களத்தில் தாங்கள் எந்தக்கணிப்பையும் செய்யப்போவதில்லை என்று பெரிய கும்பிடாகப் போட்டிருப்பதைப் பார்த்தும் கூடத்திருந்தவில்லை என்றால் என்ன செய்ய?
இது 2019 மே 21 அன்று அந்தப்பக்கங்களில் பகிர்ந்த ஹிந்து ஆங்கில நாளிதழ் கார்டூன்! லோலாய்த்தனம் செய்வதில் கெட்டிக்காரர்களாக இருந்த லயோலா கல்லூரி என் இந்தத் தேர்தலில் கருத்துக்கணிப்புகள் நடத்தி இதுவரை பட்டதே போதும் என்று ஜகா வாங்க என்ன காரணம், பின்னணி என்பது எனக்கும் தெரியாது!“லயோலா கல்லூரி 2021- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று இதன்மூலம் அறிவிக்கின்றனது. தேர்தல் போக்குகளைப் பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பயிற்றாப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே லயோலா கல்லூரி என்ற பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால் ஊடக நண்பர்கள் அதனைப் புறக்கணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை லயோலா கல்லூரி என்ற பெயரைப் பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம்” இப்படி அழாத குறை தான்! லயோலா கல்லூரி வெளியிட்டிருக்கும் அறிக்கை தேம்புகிறதே!
தேர்தல் ஆணையம் இப்படி ஒரு முழுப்பக்க விளம்பரம் செய்யலாமா என்கிற ஒரு விவாதம் முகநூலில் கொஞ்சம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சொல்லுங்களேன்!
நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்களே இல்லாதபோது யாரால் என்ன பதில் சொல்ல முடியும்? இல்லையா?!!
ReplyDeleteமுழுக்க முழுக்க அவநம்பிக்கையோடு பார்க்கிற மிடில் கிளாஸ் மாதவனாக இருந்தால் அர்விந்த் கேஜ்ரிவால் மாதிரி அச்சுப்பிச்சு தான் கிடைக்கும் ஸ்ரீராம்! இந்த வாக்குச்சீட்டு ஜனநாயகத்தில் உங்களுக்கு ஓட்டுப்போடுகிற உரிமை மட்டுமே உண்டு. யாரோ ஒரு நபர் தேர்ந்தெஎடுக்கப்பட்ட பிறகு, அந்த நபர் உங்களுடைய குரலாக ஒலிக்கச் செய்ய முடியாது, அந்த நபரைக் கட்டுப்படுத்தவும் முடியாது என்பதால் எழுகிற கையறுநிலை இது.
Deleteஇருப்பதை வைத்துக் கொண்டு என்ன செய்யவேண்டும், என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிற நிலைக்கு நண்பர்கள் உயரவேண்டும் என்பதற்காகத்தானே இங்கே மல்லுக் கட்டிக்க கொண்டிருக்கிறேன்?
//முழுக்க முழுக்க அவநம்பிக்கையோடு பார்க்கிற மிடில் கிளாஸ் மாதவனாக இருந்தால் அர்விந்த் கேஜ்ரிவால் மாதிரி அச்சுப்பிச்சு தான் கிடைக்கும் ஸ்ரீராம்! //
Deleteசிரித்து விட்டேன்.
நம்பிக்கை ஊட்டும் வேட்பாளர்கள் - பாஜக அண்ணாமலை இருக்கார். (as of now) மத்தவங்களையும் யார் யார் என்று ரொம்பவே யோசித்துப் பார்க்கணும். ஆனா மனசுல, அதிமுக, பாஜகவை கூட்டுச் சேர்க்காமல் இருந்திருந்தால், நிச்சயம் 80-90+ வாங்கியிருக்குமே என்று தோன்றாமல் இல்லை.
ReplyDeleteஎ.வ.வேலு - இவர்தானே ரேஷன் பொருட்களை தங்கள் கல்லூரி ஹாஸ்டலுக்குக் கடத்தினார் என்று செய்தி வந்தது. துரைமுருகன் - உலகப் பெரும் பணக்காரர் வரிசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவர்தானே இவர். அடுத்து பொன்முடி, டி.ஆர்.பாலு......... உலக மகா ஊழல் சக்கரவர்த்திகள் இவர்கள். ஆரம்ப காலத்தில் ஒரு டீக்குக் கஷ்டப்பட்டவங்க இவங்க என்பதை நம்புவதே கடினம்.
நெல்லைத்தமிழன் சார்!
Deleteஉங்களுடைய பின்னூட்டத்தில் இரண்டாவது பகுதியில் எதை, எவரைக் கழிக்கவேண்டும் என்பதற்கான தெளிவு இருக்கிறதே! அங்கே இருந்து ஆரம்பிப்பதுதான் நமக்கிருக்கும் முதலாவது திறப்பு. விடிவுக்கான வாசல்.
ரமண வழி மாதிரி இது இல்லை இது தேறாது என்று கழித்துக்கொண்டே வந்து கடைசியில் மிஞ்சுவது எதுவோ அதைப்பிடித்துக் கொள்வது ஒன்று மட்டுமே இந்த தேர்தல் முறையில் நமக்கிருக்கிற ஒரே சாய்ஸ். இதைப்புரிந்து கொண்டு செயல்பட முடியுமானால் ரமணருக்கு தான் யார் என்கிற ஞானம் சித்தித்த மாதிரி நமக்கும் நடக்கலாம்.
அதுவரை பிஜேபி மீதான aversion ஐ கொஞ்சம் ஒதுக்கி வையுங்களேன்!