னை சசிகலாவின் அரசியல் துறவறத்தைப் பற்றி இங்கே எதுவுமே பேசக்காணோமே என்று ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பிய படியே அண்ணாச்சி உள்ளே வந்தார். இதில் நான் பேச என்ன இருக்கிறது என்ற பதிலில் அவருக்குக் கொஞ்சம் கூடத் திருப்தி இல்லை. யார் இந்த அண்ணாச்சி, சசிகலா மீது என்ன இந்த திடீர்க் கரிசனம் என்றெல்லாம் கேள்வி எழுகிறதா? அண்ணாச்சி, நான் முன்னொரு காலத்தில் ஒரு வங்கி ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் உடன் பணியாற்றிய சீனியர்! அண்ணாச்சிக்கு அரசியல் ஆர்வம் உண்டு, ஆனால் வெளியே அதிகம் காட்டிக்கொள்ள மாட்டார். நான் எழுதுவதை சைலண்டாகக் கவனித்து வருகிறவர் என்ற தகவல் போதுமில்லையா! .
அண்ணாச்சியை சமாளிப்பதற்காக இந்த 3 நிமிட வீடியோ, மற்றும் பதிவில் ஒரு இடம் கொடுத்தாகி விட்டது. சசிகலா திடீரென அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் என்று அறிக்கை விட்டதற்கு புதிதாக ஒரு காரணம் சொல்கிறார்களே, நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது? சசிகலாவுக்கு டிடிவி தினகரன் மீது மிகவும் பாசமுண்டு என்பது தெரிந்த விஷயம். ஜெ.வால் கட்டம் கட்டப்பட்டு, கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்ட பிறகு இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர். அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து, பொறுப்பையும் கொடுத்து விட்டுத்தான் ஜெயிலுக்குக்குப்போனார் சசிகலா.எதிர் பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை என்பதால் கொஞ்சம் ராஜதந்திரமாக ஒதுங்கிக்கொண்டார் என்று சொன்னால் கூட நம்புகிற மாதிரி இருக்கும். அதைவிட்டு தம்பி திவாகரன் சொன்னார், சசிகலாவும் ஒதுங்கினார் என்று சொன்னால் சுவாரசியமே இல்லாமல் சப்பென்று முடிந்து விடாதா? ஆட்டத்தில் பிஜேபி, மோடி, அமிஷ் ஷா மிரட்டல் என்றெல்லாம் சேர்க்காமல் எப்படி தினமலர் கொஞ்சமும் அறிவில்லாமல் செய்தி போடுகிறதாம்? அண்ணாச்சி! இப்போது சந்தோஷமா?
அதே காமெடியை திமுக வழக்கறிஞர் அணி உதவியுடன் ஆர் எஸ் பாரதி, பொன்முடி இருவரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் செய்திருக்கிறார்கள் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி சொல்கிறது. Who could possibly say that Duraimurugan from whom crores of rupees intended for distribution for his son’s election was seized in Vellore in March 2019 is not the general secretary of DMK, and not a permanent trustee of DMK trust? Indeed, it was the DMK itself that made such a claim, in a writ petition that it filed on January 28, 2021.
ஆர் எஸ் பாரதி, திமுக சார்பில் தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தில், 2019 மார்ச் மாதம் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான D துரை முருகனும், திமுகவின் பொதுச் செயலாளரும், திமுக அறக்கட்டளை ட்ரஸ்டியுமான துரை முருகனும் ஒருவர் அல்ல என்று சொல்லியிருக்கிறார். ரெயடுக்குள்ளானவர் D துரை முருகன் வேறு, திமுக பொதுச்செயலாளர் / அறக்கட்டளையின் ட்ரஸ்டி (இனிஷியல் இல்லாமல்) துரை முருகன் வேறு, அவ்வளவு தான்!
K Ponmudi, the organising secretary of DMK, also repeated the same claim – that D Duraimurugan i s not the same as Duraimurugan. Shocked by DMK disowning its own general secretary and permanent trustee, the IT Department scrambled for proof and finally got the patta of the agricultural lands owned by D Duraimurugan issued by Tehsildar, Katpadi, dated 4.4.2005, with a photo of D Duraimurugan.
எதற்காக அப்படி செய்தார்களாம்? மேலே லிங்கில் இருக்கும் செய்தி ஒரு சுவாரசியமான காரணம் ஒரு twist உடன் முடிகிறதே, அதைக்கவனியுங்கள்!
வருமானவரிச் சோதனை கொஞ்சம் உறுதியாக நடத்தப பட்டால் இன்னும் என்னென்ன காமெடிகள் இதுபோலக் கிளம்பி வருமோ? நிச்சயமாக சினிமா நடிகை டாப்ஸி காமெடி செய்திருப்பதுபோல IT ரெயிடுகள் வேடிக்கை அதுவே வாடிக்கை என்று இருந்துவிடாது!
மீண்டும் சந்திப்போம்.
பணம் என்பது இவர்களுக்கெல்லாம் விளையாட்டுப்பொருள்... ம்...ஹூம்...
ReplyDeleteயாருக்கு ஸ்ரீராம்? கமென்ட் புரியவில்லை!
Deleteதுரைமுருகன், சசிகலா வகையறாதான்! பொதுவாக அரசியல்வியாதிகள்!
Deleteபணம் விளையாட்டுப்பொருள் இல்லை ஸ்ரீராம்! பணம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள உதவும் கருவி, பெரிய ஆயுதம். சசிகலாவிடம் இருக்கும் பெரும்பணம் இப்போது அவருக்கு எந்தவகையில் உதவியது? கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!
Deleteகருணாநிதி எவ்வழி அவ்வழி திமுக. அவர், கனிமொழி தன்னுடைய மகள் இல்லை என்று சட்டமன்றத்திலேயே சொன்னவராயிற்றே. திமுக டிரஸ்டில் பெரிய மர்மமும் கள்ளப்பணமும் பதுங்கி இருப்பதை ஐடி ரெய்டுகள் நடத்தினால் வெளிப்பட்டுவிடும் என்ற பயமோ என்னவோ. விரைவில் துரைமுருகனுக்கு வேறு பொறுப்பு கொடுத்துவிட்டு (ஆட்சி அமைத்தால் ) பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கழற்றிவிட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஆனால் ஐ.டி. ரெய்டு என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இத்தகைய ரெய்டுகளினால் எல்லோருடைய நேரமும்தான் வீணடிக்கப்படுகிறது.
நெல்லைத்தமிழன் சார்! அரசியல் தலைமை மட்டுமே மாறி மற்றவை அப்படியே மாறாமல் இருக்கும் சூழலில் அதிரடி மாற்றம், உடனடி மாற்றம் எதுவுமே சாத்தியமில்லாதது. IT raid என்பது துறைரீதியான routine work அவ்வளவுதான். அதற்குமேல் காரியங்கள் நடக்க நிறையத் தடங்கல்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கும்.
Deleteலிங்கில் எக்ஸ்பிரஸ் செய்தியை முழுதாக வாசித்தீர்களா?