Tuesday, March 23, 2021

தமிழ்நாடு தேர்தல் களம் 2021! உங்கள் பார்வையில் நம்பிக்கையூட்டும் வேட்பாளர்கள் யார்?

ஒருவழியாக நேற்றுடன் வேட்புமனு பரிசீலனை முடிந்து  ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுகிற வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டு விட்டது. மொத்தம் 7255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 2741 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, வாபஸ் வாங்கியவர்கள் போக களத்தில் 4220 நபர்கள் இருப்பதாக நேற்றிரவு செய்தி. இருப்பதிலேயே திகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டி களத்தில் உள்ளனர். சென்னையில் அடங்கி உள்ள 16 தொகுதிகளில் 391 பேர் களம் காண்கின்றனர். இதில் கொளத்தூர் தொகுதியில் 35 பேரும், குறைந்தபட்சமாக தியாகராயநகரில் 14 பேரும் போட்டியிடுகின்றனர் என்பது வெறும் புள்ளி விவரம் மட்டுமே. இந்தமுறை எதிராக களம் இறங்கிய வேட்பாளர்கள் மனுவை நிராகரிப்பதற்கு, குறிப்பாக பிஜேபி வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட வேண்டுமென திமுக தரப்பு மிகவும் கீழ்த்தரமாக வேலை செய்ததை இந்தப்புள்ளிவிவரங்களில் தெரிந்து கொள்ள முடியாது. உதாரணத்துக்கு சென்னை துறைமுகம் தொகுதி பிஜேபி வேட்பாளர் வினோஜ் P செல்வம்,  அரவக்குறிச்சி தொகுதி பிஜேபி வேட்பாளர் அண்ணாமலை IPS இவர்களது வேட்புமனுவுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆட்சேபணைகளைச் சொல்லலாம்.


தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே இருக்கிற சூழலில் அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே எனத் தாவுகிற வேடிக்கை விநோதங்கள் இந்தத்தேர்தலின் பிரத்யேக விசித்திரம். கரூர் எம் சின்னச்சாமிக்கும் செந்தில் பாலாஜிக்கும் ஏற்பட்டுள்ள முட்டல் மோதலில் மாஜி அமைச்சர் சின்னச்சாமி திமுகவிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது இன்றைக்கான காமெடி கோட்டா!  


இந்தச் செய்தியை இருநாட்களுக்கு முன்பே இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் முக அழகிரிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும்  ஜீவாநகர் முருகன் சொன்னதாகப் படித்தேன். இங்கே முக அழகிரியே சொன்னதாக செய்தி வந்திருக்கிறது. தேர்தல் கிட்டக்க வந்திருச்சு முக் அழகிரியை எங்கப்பா காணோம் என்று 8 நாட்களுக்கு முன்வரை தேடிக்கொண்டிருந்த ஒன் இந்தியா தளம் கூட தூக்கம் கலைந்து இன்றைக்கு இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. மு.க. அழகிரி ஒன்றும் spent force அல்ல, திமுகவுக்கு தென்மாவட்டங்களில் சேதாரத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியுடன் இன்னமும்  இருப்பவர் என்பது என்னுடைய அபிப்பிராயம். 

தமிழக தேர்தல் களநிலவரம் தற்போதைக்கு இப்படித் தான் என்பதைக் காட்டுகிற 1 நிமிட வீடியோ.

உங்கள் பார்வையில் நம்பிக்கையூட்டும் வேட்பாளர்கள் யார்?  கொஞ்சம் சொல்ல முடியுமா?

மீண்டும் சந்திப்போம்

4 comments:

  1. This is my wishlisht.


    Annamalai
    Vanathi Srinivasan
    Seemaan
    Pazha.Karuppaiah
    Thangam Tennarasu

    The list might be odd. But I wish some contentful debate possible.

    ReplyDelete
  2. தேர்தல் அரசியலுக்குப் புதிய முகங்கள் என்ற வகையில் முதலிரண்டு பெயர்களும் ஓகே. ஏதாவது சாதிக்கவேண்டும் என்கிற ஆர்வமும் முனைப்பும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இவர்கள் மீது ஏற்படுவது இயற்கையே!

    ஆனால் பழ கருப்பையா? தங்கம் தென்னரசு?

    பழ கருப்பையா அதிமுக MLA வாக இருந்ஜொலிப்பவர்களில் து என்ன சாதித்தார்? ஒரு MLA வாகத் தனது கடமையைச் செய்தாரா என்றால் பூஜ்யம். மேடைப்பேச்சாளர்களாக ஜொலித்தவர்களில் மக்கள் பிரதிநிதிகளாகவும் சாதித்தவர்கள் மிக அபூர்வம்.

    தங்கம் தென்னரசு! வெறும் திமுக MLA என்பதையும் தாண்டி கேபினெட் அமைச்சராகவும் இருந்தவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அவர் இருந்த நாட்களில் சமச்சீர் கல்வி என்கிற சீர்திருத்தம்(??) கொண்டுவரப்பட்டு, ஏகப்பட்ட தம்பட்டமும் அடிக்கப்பட்டது. சமச்சீர் கல்வி வேறு தம்பட்டம்தானா அல்லது உண்மையிலேயே பயன் ஏதாவது இருந்ததா என்பதை உங்களால் சரியாக மதிப்பிட முடியுமானால், உங்கள் தேர்வு சரியானதுதானா என்பதை நீங்களே முடிவு செய்ய முடியும்.

    சட்டமன்ற நாடகமேடையில் இவர்களெல்லாம் துணை நடிகர்களே! முக்கிய கதாபாத்திரம் எதையும் உங்கள் விஷ லிஸ்டில் காணோமே! ஏன்?

    ReplyDelete
  3. I wanted someone to account and register about both kazhagam attrocities from 70s in assembly book. Karuppiah will be a good choice for time being! Don't worry sir. MNM wont even get 3rd place there!

    Tennarasu will be a choice if DMK ever comes to power. 2 reasons. Only soft spoken and among the remaining few gentle man from DMK. He is a good executor. Yes. Samacheer kalvi was bad. But he was just a mere executor. Planners are somewhere at the top. Honestly I cud not pickup anybody else from the remaining elite craps.

    Regarding the leaders, May be EPS and little bit of duraimurugan to bring some humor!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜே! தேர்தல் செய்திகளுக்காகவே மார்ச் மாதத்தில் blogger ID இருக்கிறீர்கள் போல!

      எதையும் யாரோ வந்து செய்யவேண்டும் என்று காத்திருப்பதுதான் நம்முடைய அடிப்படையான பலவீனம். ஏன் அது நாமாகவே இருக்கக்கூடாது என்பதைக் கொஞ்சம் யோசியுங்களேன்!

      திமுக ஆட்சிக்கு வந்தநாள் முதலான அனைத்துத் தகவல்களுமே இணையத்தில் சற்றுப் பொறுமையாகத்தேடினால் கிடைக்கக் கூடியதுதான்! வெறும் பழங்கதைகளை மட்டுமே பேசினால் இன்றைய இளந்தலைமுறை பொறுமையாகத் தேடிப்படிக்குமா?

      காங்கிரசின் வீழ்ச்சியும் கழகங்களுடைய எழுச்சியும் எதனால் நிகழ்ந்தது என்பதை பழ கருப்பையா முழுமையாகச் சொல்ல மாட்டார். காரணம் அவரே இரண்டு கழகங்களுக்கும் மாறி மாறிப்போனவர், வெளியே வந்தவர். தனக்கென ஒரு அரசியல் நிலைபாட்டைத் தெளிவாக எடுக்க முடியாதவர் மற்றவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?

      தங்கம் தென்னரசு பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் ஒரு எல்லைவரை சரியானதே! ஆனால் இவர்போன்றவர்கள் துணைநடிகர்களாக மட்டுமே இருக்க முடிகிற ஒரு சூழலில் நம்பிக்கையோடுகிற வேட்பாளராக இருக்க முடியுமா?

      நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தில், மட்டத்தில் உசத்தி என்கிற வகையில் இருப்பதிலேயே ஆகக்குறைந்த மட்டமான பேர்வழிகளையே தேர்ந்தெடுக்கிற சுதந்திரம் இருக்கிறது. அதாவது போட்டியிடுகிறவர்களில் கட்சி ரீதியாக, முந்தைய செயல்பாடுகள் ரீதியாக கழித்துக் கொண்டே வந்து மிஞ்சுகிற குறைந்தபட்ச தீமையைத் தேர்ந்தெடுக்கிற உரிமை மட்டுமே.

      இந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால், ஒரு சில தனிமனிதர்களை விடுங்கள், ஒட்டு மொத்தமாக யார்யாரைக் கழிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு பிறக்கும்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)