Wednesday, March 31, 2021

#தமிழகதேர்தல்களம் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்கிற தெளிவுடன் ஆரம்பமாகட்டுமே!

அண்ணாதுரை முதல் ஆபாசராசா வரை திமுகவின் வரலாறே ஆபாசமும், கட்டப்பஞ்சாயத்து முதல் ரவுடியிசமும் தான்! திமுகவை எந்தக்கொம்பனாலும் அழிக்க முடியாது என்று இசுடாலின் பேசுவது வெறும் வாய்ச சவடால்தான்!


   

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான்.குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை....எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு.... மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே". குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி காவி வஸ்திரம் தரித்த மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார்,
"எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு". அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட....ஆமாம்!நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா.....குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது.
"இனிமேல் இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி காவி வஸ்திரம் தரித்த ஞானி கடந்து போனார். தமிழகத்தில் எத்தனையோ பேர் இப்படித்தான் திமுகவை கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல், அறியாமையில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்!!!!! அறிந்தவர்கள், ஏற்கனவே சில நாலாந்தர பெரிய-கட்சி-நிர்வாகிகள் பேச்சின் காரணமாக, உள்ளிருந்து ஞானம் பெற்று தெளிந்து விட்டார்கள். முகநூலில் இப்படி ஒரு உருவகக் கதை சொல்லி வழக்கொழிந்து செத்துப்போன திராவிடத்தைப் பிடித்துக்கொண்டு மறுகாதே! தூக்கிக் கிடாசிவிட்டு வேறு வழியைத் தேடப்பார் என்று வழியும் சொல்கிற மாதிரி இருக்கிறதே!

திராவிட கழகமோ , திமு கழகமோ இப்படிக் கழகங்கள் எதுவானாலும், இந்த மாநிலத்துக்கு கேடுதான்! திமுக முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கட்சிதான் என்பதற்கு அதன் கடந்தகாலச் செயல்பாடுகளே போதுமான காரணமாக இருக்கிறது

யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிக்க, யார் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருக்க வேண்டும் திமுக மற்றும் அதன் கூட்டாளிகளான காங்கிரஸ், கம்யூஜிஸ்டுகள், விசிக, மதிமுக போன்ற உதிரிகளை முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ,அடுத்து யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற தேடலும் ஆரம்பிக்கிறது.

மீண்டும் சந்திப்போம்..

6 comments:

  1. கதை நன்றாக இருக்கிறது...
    இருந்தாலும் யாராவது வரலாம் - ஞானிக்கு எப்படி செந்துவராடை கட்டலாம்?.. - என்று...

    ReplyDelete
    Replies
    1. கதை சொன்ன ஞானசேகரனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் துரை செல்வராஜூ சார்! இந்தப்புண்ணியபூமியில் செந்துவர் ஆடைக்கு ஆட்சேபணை தெரிவிக்கிற மூடர்கள் கூட்டத்தை முதலில் தேர்தலில் நிராகரிப்போம்!

      Delete
    2. செந்துவர் ஆடைக்கு எதிர்ப்பு செல்பவர்கள் மூடர்கள் மட்டுமல்ல.. மூர்க்கர்கள்...

      அதன் மகத்துவம் தெரியுமா அவர்களுக்கு!..

      Delete
    3. அவர்களுக்குத் தெரியாதுதான் சார்!
      !
      மூடத்தனமும் மூர்க்கத்தனமும் ஒட்டிப்பிறந்த இரட்டைகள்

      Delete
  2. திராவிடத்தைக் கட்டிக்கொண்டு மறுகாதே..

    ஆகா!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துரை செல்வராஜூ சார்!

      திராவிடங்களுடைய அரசியல், சமூகநீதி சாயங்கள் வெளுத்து நாளாகிறதே! இன்னும் இவர்களைக் கட்டிக்கொண்டு ஏன் அழவேண்டும்?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)